search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகம்
    X

    11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகங்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். அருகில் உதவி ஆணையர்(ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

    வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகம்

    • வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கை விட ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக திகழ்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சிலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் முதலமைச்சர் வருகிற 10-ந் தேதி அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை பாதுகாக்கின்ற வகையிலும், போதையில்லா தமிழகத்தை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில், கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.

    மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனதை சோர்வடையாமலும் மற்றும் மன தைரியத்துடன் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக, முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட ''நான் முதல்வன்'' திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன்மூலம் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தககங்களை, இந்த கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசி–ரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×