என் மலர்
சேலம்
- பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு சாப்பிட்டும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதற்கிடையே காலை 6 மணி முதல் 7 மணி வ ரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து சேலம் புறநகர் பகுதிகளில் அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 19 பேர் மீதும், மாநகரில் 2 பேர் மீதும் என மொத்தம் 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).
அரிவாள் வெட்டு
இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணை
இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
- தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது.
சேலம்:
சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் காசீம். இவரது மகன் விஷ்ணு (வயது 18). இவர் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் என்கிற தமிழரசன் என்பவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தமிழரசன் தாக்கியதில் விஷ்ணுக்கு காது கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். அதில் தமிழரசன் ரவுடி என்பதும், ஒரு கொலை வழக்கில் ஜெயிலில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான தமிழரசனை போலீசார் தேடி வருகின்றனர்.
- துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யா நகர், அம்மாப் பேட்டை காந்தி மைதானம், பொன்னம் மாபேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேட்டுப்பட்டி
இதேபோல் மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்ன கவுண்டபுரம் ஒரு பகுதி, கருமாபுரம், பெரியகவுண்டபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கருப்பூர்
கருப்பூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலா புரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிபட்டி செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், குள்ளம நாயக்கன்பட்டி, ஆனைக் கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குப்பை, சாமி நாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக் கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்கு சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற் பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
- தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார்.
- இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் குகை ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 53). இவர் இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று தாமரைச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தண்ணீர் தொட்டியில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை விக்னேஸ்வரர் பூஜையுடன் சூரசம்கார விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சக்திவேலும், ஆறுமுக சாமியும் மயில் வாகன ஊர்வலம் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
நாளை முதல் தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை தினமும் அபிஷேகம், அலங்காரத்தில் ஆறுமுகப் பெருமான் காமதேனு வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நடக்கிறது. 17-ந் தேதி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆறுமுகப்பெருமான் ரிஷப வாகன ஊர்வலம் நடக்கிறது.
தொடர்ந்து பகல் 1 மணியளவில் நவவீரர்கள் தேர்ந்தெடுத்தல் சூரன்படைக்கு வீரர்கள் சேர்த்தல் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி காலை 6 மணியளவில் மகாகந்த சஷ்டி பாராயணம் 36 முறை நடைபெற்று அன்னதானம் நடைபெறும். காலை 9 மணியளவில் மகா சஷ்டி சிறப்பு அபிேஷகம் அலங்கார ஆராதனை நடைெபறும்.
சூரசம்காரம்
மதியம் 3 மணிக்கு ஆறுமுகப்பெருமானுக்கு அம்பிகை சக்தி வேல் அருளல் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியளவில் சூரசம்காரம் நடக்கிறது.பின்னர் மாலை 6மணியளவில் சேவல் ெகாடி, மயில் வாகனத்துடன் ஆறுமுகப் பெருமான் காட்சி அளித்தல், புஷ்ப மாரி பொழிதல், தீபாராதனை நடக்கிறது.
இரவு 7 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வெள்ளை யானையில் ஆறுமுக சாமி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.
திருக்கல்யாணம்
19-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சாமி திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் இரவு 7 மணிக்கு செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் உலா நடக்கிறது. இரவில் வான வேடிக்கை, மேள வாத்தியம் நடக்கிறது.
தொடர்ந்து 20-ந் தேதி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் மதியம் 12 மணிக்கு த்வஜ அவரோஹணம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது.
- தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார்.
- இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் ரமேஷ் (29), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தாார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம்.
- பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம். இங்கு 30 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த நபரின் உடலை ஊர்மக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் விசாரித்ததில் இறந்து கிடந்தவர் அதே கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி வரதன் என்பவரது மகன் ஆறுமுகம் என்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இவரை யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றில் தள்ளி விட்டனரா அல்லது கால் தவறி ஆறுமுகம் கிணற்றில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.
எடப்பாடி:
தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குட்டி கேரளா என்று சுற்றுலா பயணிகளால் செல்லமாக அழைக்கப்படும் இயற்கை எழில் நிறைந்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர் திறப்பு பகுதியில், திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப் பாலம், நீர் உந்து நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். திரளான சுற்றுலா பயணிகள் கரையோர பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரி தாய் சன்னதி, காவிரிக்கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட தலங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் இப்பகுதிகள் உள்ள வியாபா ரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
- பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதே போல புஜங்கீஸ்வரர் கோவிலிலும் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.
இந்த 2 கோவில்களும் சார்பாக தீபாவளி பண்டிகையின் போது திருவிழா நடத்தப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீதேவி, துளசியம்மாள் சமேத சென்றாய பெருமாளும், சிவகாமி உடனுறை புஜங்கீஸ்வரரும் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
பெருமாளும், சிவனும் அடுத்தடுத்த தேரில் நகர்வலம் வந்தனர். ராஜவீதியில் தொடங்கிய இந்த நகர் வலத்தில் ஒவ்வொரு வீடாக 2 சாமிகளுக்கும் தேங்காய் பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் நேர்த்திக் கடனாக பெண்கள், குழந்தைகள் தேரை இழுத்து வந்தனர்.
கடந்த காலங்களில் முறையாக நடத்தப்பட்டு வந்த திருவீதி உலா நிகழ்ச்சி கடந்த 19 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோவில் நிர்வாகிகள் மற்றும் கட்டளைதாரர்களால் திருவீதி உலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






