என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சங்ககிரியில் பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

    சங்ககிரியில் பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை வகித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட துணை செயலாளர் சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் கீழ்நிலை பணியாளர்கள் 20 சதவீதம் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு ஆணை வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு நிலையாக்கப்படாத பணியிடை காலமான அனைத்து ஊழியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சியிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுனர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் வருகின்ற டிசம்பர் மாதம் 13-ந் தேதி அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகியும், கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் மறைவையொட்டி மவுனஅஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×