என் மலர்
சேலம்
- கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
- ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம் கூத்தாடிபாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (78), ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி(72). இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் லட்சுமி ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி பலியானார்.
இதை அடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது.
- குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும், மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று 61 அடியாக உயர்ந்து உள்ளது. சுமார் 31 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதே போல் அணைக்கு வினாடிக்கு 3332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் நவீன் (26). இவர் சேலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் கோயம்புத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி சேலத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். பின்னர் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் நவீன் தனது மகளை கடத்தியதாக புகார் கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் நவீனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரை சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.
- சிலம்பரசன் இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அபினவம் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவ ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்க ளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனாலும் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் பரமேஸ்வரி ஏத்தாப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
- நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும்.
- அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
சேலம்:
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் தொடங்கியதும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 20-ந் தேதி வரை நடைபெறும். அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
இதற்காக கார்த்திகை முதல் தேதியில் அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்பவார். அதன்படி நாளை கார்த்திகை 1-ந் தேதி தொடங்க உள்ளதால் சேலம் சின்ன கடை வீதியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
குறிப்பாக துளசி மணி, அய்யப்பன் டாலர் மற்றும் அய்யப்பன் வேட்டி உள்ளிட்ட விரத பொருட்கள் வாங்குவதற்கும் இருமுடி பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விரதப் பொருட்களை காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
இதே போல செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விரதப் பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. பொருட்களை வாங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
+4
- இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி:
இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காடையாம்பட்டி
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க கோரியும், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி மேற்கு வட்டார தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய கவுன்சிலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காடையாம்பட்டி கிழக்கு வட்டார தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், நகரத் தலைவர் ஹரிசந்திரன், கிராம கமிட்டி தலைவர் பழனி தேவன், நிர்வாகிகள் பெருமாள், தர்மலிங்கம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு
ஏற்காட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏற்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தாரமங்கலம்
தாரமங்கலம் சந்தைப் பேட்டை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு தாரமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு. மாவட்டத் துணைத் தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி செல்வம், நிர்வாகிகள் லக்ஷ்மன், தட்சிணாமூர்த்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
சங்ககிரியில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்குமார் தலைமை வகித்தார். சங்ககிரி வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பொது செயலாளர்கள் நடராஜன், பழக்கடை ராமமூர்த்தி, சின்னுசாமி, மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, ஆறுமுகம், இஸ்மாயில், காமராஜ், சந்திரன், ஜெகநாதன், பஸ் ஆறுமுகம், விஸ்வநாதன், கிரி, ரவி, பரமன், மளிகை குமார், மாணவர் காங்கிரஸ் அகில், வெர்ஸிலி, இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, தேவூர் நாகேந்திரன், பொன்சித்தையன், அரசிராமணி ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகித்தனர்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வினாடிக்கு 3239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
- இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.என்.பட்டி கோவிலூர் காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து குளித்து கொண்டிருந்த சுந்தரத்தை, அங்கு வந்த குப்புசாமி, செல்லதுரை, நாகராஜ், மோகன்ராஜ், மதன்மோகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து எதற்காக காரியத்திற்கு வந்தாய்? உன்னை யார் வர சொன்னது? என்று கூறி கல்லாலும் கட்டையாளும் அடித்து உதைத்தனர்.
இதில் காயமடைந்த சுந்தரம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலர்க்கொடி (40) விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி ரெட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (40).
விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
மர்ம விலங்குகள்
நேற்று அவர் அப்பகுதி உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அப்பகுதியில் நுழைந்த மர்ம விலங்குகள் சில திடீரென்று ஆடுகளை கடித்துக் குதறியது.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தோட்டத்தில் கட்டி இருந்த 11 ஆடுகளில் 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்திருந்தது. இதனால் அவை ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி இது போன்று மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிர் இழப்பதால் தங்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.






