என் மலர்
நீங்கள் தேடியது "7 goats are sacrificed"
- மலர்க்கொடி (40) விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி ரெட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (40).
விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
மர்ம விலங்குகள்
நேற்று அவர் அப்பகுதி உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அப்பகுதியில் நுழைந்த மர்ம விலங்குகள் சில திடீரென்று ஆடுகளை கடித்துக் குதறியது.
ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து விவசாயிகள் ஓடி வந்தனர். இதை கண்ட மர்ம விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது தோட்டத்தில் கட்டி இருந்த 11 ஆடுகளில் 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்திருந்தது. இதனால் அவை ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள கால்நடைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆடுகள் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் அடிக்கடி இது போன்று மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிர் இழப்பதால் தங்களுக்கு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.






