என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sad thing"

    • சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.
    • இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.என்.பட்டி கோவிலூர் காலனியை சேர்ந்தவர் சுந்தரம் (41). கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் இடையே குலதெய்வ கோவில் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

    இந்த நிலையில் சுந்தரத்தின் உறவினரான பூசாரி என்பவர் இறந்து விட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்கு சுந்தரம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து குளித்து கொண்டிருந்த சுந்தரத்தை, அங்கு வந்த குப்புசாமி, செல்லதுரை, நாகராஜ், மோகன்ராஜ், மதன்மோகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து எதற்காக காரியத்திற்கு வந்தாய்? உன்னை யார் வர சொன்னது? என்று கூறி கல்லாலும் கட்டையாளும் அடித்து உதைத்தனர்.

    இதில் காயமடைந்த சுந்தரம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×