என் மலர்
சேலம்
- குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
- ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்:
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.
இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது.
- ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ சமுதாயம் பயன்பெறும் வகையில், எடப்பாடி அருகே அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பி.எட் கல்லூரி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு அதில் தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு, அப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதால், மாநில முழுவதும் அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்கள் எந்த கட்டணமும் இன்றி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் தற்போது பயின்று வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வீணாக காவிரி ஆற்றில் பாய்ந்து, கடலில் கலக்கும் உபரி நீரை கொண்டு இப்பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான புதிய பாசன திட்டம் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதை தற்போதைய தி.மு.க அரசு கிடப்பில் போட்டதால், இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையிலான மகத்தான திட்டம், விவசாயிகளுக்கு பயனளிக்காத அவல நிலை தொடர்ந்து வருகிறது.
இதேபோல் குடிமராமத்து பணி, அம்மா மினிக்கிளினிக் போன்ற அ.தி.மு.க அரசின் நல்ல பல மக்கள் நல திட்டங்களை தி.மு.க அரசு வேண்டுமென்று முடக்கி உள்ளது. கடந்த 2-ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறைவுற்ற திட்ட பணிகளை மட்டுமே திறந்து வைத்து பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். தமிழக முழுவதும் தற்போது கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மாணியக் கோரிக்கை விவாதத்தில் நான் உள்பட அ.தி.மு.கவினர் எழுப்பும் கேள்விகள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தி.மு.க அரசால் மறைக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நீதிமன்ற ஆணை பெறப்பட்டு தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வினர் எழுப்பும் நியாயமான கேள்விகள் வெளிச்சத்திற்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி, ஆடையூர், பக்க நாடு, பூலாம்பட்டி, சித்தூர் கள்ளுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அவர் அப்பகுதியில்லிருந்து புதிதாக அ.தி.மு.கவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் எடப்பாடி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மாதேஸ் வரவேற்று பேசினார்.
- சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார்.
- மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி கிராமத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.
இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மூர்த்தி இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு இருந்தே தனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருவதாக கூறி மருத்துவமனைக்கு சென்று, மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி சாவு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 7 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக நன்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உடல் கூறு ஆய்வில் மூர்த்தியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குச்சி குத்தி ஏற்பட்டது தான் என் உறுதியாக தெரியவந்த பின்பு தான் நாங்கள் இயற்கை மரணம் என முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு. மேலும் தேவைப்பட்டால் மூர்த்தியின் உடலை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளோம் எனவும், இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை சுட்டு கொன்றதாக கூறப்படும் 7 நபர்கள் யார்? என்றும் கேள்வி எழுதுள்ளது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார்.
- இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.
சேலம்:
சேலம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த மின்–னாம்–பள்ளி பகு–தியை சேர்ந்–த–வர் மாதேஸ்–வரி (வயது 52). இவர், உடை–யாப்–பட்டி பகு–தி–யில் மின்–வா–ரிய அலு–வ–ல–கத்–தில் அக்–க–வுண்ட் மேற்–பார்–வை–யா–ள–ராக பணி–பு–ரிந்து வரு–கி–றார். இவர் குடும்–பத்–து–டன் வெளி–யூர் சென்ற போது மர்–ம–ந–பர்–கள் வீட்–டின் பூட்டை உடைத்து பீரோ–வில் இருந்த 10 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயி–ரத்தை திருடி சென்–ற–னர்.
இது–கு–றித்து மாதேஸ்–வரி கொடுத்த புகா–ரின் பேரில் காரிப்–பட்டி போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தியதில், மாதேஸ்–வரி வீட்–டில் திரு–டி–யது உளுந்–தூர்–பேட்டை பகு–தியை சேர்ந்த கும–ர–வேல் (23) என்–ப–து தெரிய வந்–தது. உடனே போலீ–சார் அவரை கைது செய்–த–னர். அவ–ரி–டம் இருந்து 6 பவுன் நகையை மீட்–ட–னர். இந்த திருட்டு தொடர்–பாக மேலும் ஒரு–வரை போலீ–சார் தேடி வரு–கின்–ற–னர்.
- பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது.
- அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது.
சேலம்:
சேலம் கோட்–டை–யில் மாந–க–ராட்சி மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணினி அறை–யில் இருந்த இன்–டர்–நெட் ரிசீ–வர் கருவி உள்–ளிட்ட கணினி பொருட்–கள் கடந்த சில நாட்–க–ளுக்கு முன்பு காணா–மல் போனது. அதை மர்ம நபர்–கள் திரு–டி–விட்–ட–தாக கூறப்–ப–டு–கிறது. இது–கு–றித்து பள்ளி தலைமை ஆசி–ரியை நளினி, டவுன் போலீஸ் நிலை–யத்–தில் புகார் செய்–தார். அதன்–பே–ரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி
வரு–கின்–ற–னர்.
- ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
- மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.
சேலம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ இணையதளம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதில் சில மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்
பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப் பித்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சேலம் மத்–திய சிறை–யில் விசா–ரணை மற்–றும் தண்–டனை கைதி–கள் சுமார் 850-க்கும் மேற்–பட்–டோர் அடைக்–கப்–பட்–டுள்–ள–னர்.
- மாந–கர போலீ–சார் 100-க்கும் மேற்–பட்–டோர் திடீ–ரென சேலம் மத்–திய சிறை–யில் அதி–ர–டி–யாக சோதனை நடத்–தி–னர்.
சேலம்:
சேலம் மத்–திய சிறை–யில் விசா–ரணை மற்–றும் தண்–டனை கைதி–கள் சுமார் 850-க்கும் மேற்–பட்–டோர் அடைக்–கப்–பட்–டுள்–ள–னர். இவர்–களில் சிலர் செல்–போன்–கள் மற்–றும் கஞ்சா, பீடி, சிக–ரெட் போன்–றவை பயன்–ப–டுத்தி வரு–வ–தாக குற்–றச்–சாட்டு இருந்து வரு–கிறது.
சமீ–பத்–தில் மாந–கர போலீ–சார் 100-க்கும் மேற்–பட்–டோர் திடீ–ரென சேலம் மத்–திய சிறை–யில் அதி–ர–டி–யாக சோதனை நடத்–தி–னர். இந்த சோத–னையில் செல்–போன்–கள் எது–வும் பறி–மு–தல் செய்–யப்–ப–ட–வில்லை. போலீ–சாரை கண்–ட–தும் கைதி–கள் செல்–போன்–களை ஆங்–காங்கே புதைத்–து–விட்–ட–னர்.
இந்த –நி–லை–யில் நேற்று முன்–தி–னம் மத்–திய சிறை–யில் நடந்த சோத–னை–யில் 3 இடங்–களில் பதுக்கி வைக்–கப்–பட்டு இருந்த 3 செல்–போன் சார்–ஜர்–கள் பறி–மு–தல் செய்–யப்–பட்–டன.
அவற்றை பதுக்கி வைத்–தது யார்? சிறைக்–குள் செல்–போன் சார்–ஜர்–கள் எப்–படி வந்–தது? சிறைக்–கா–வ–லர்–கள் யாரே–னும் உதவி புரிந்–தார்–களா? என்–பது குறித்து சிறைத்–துறை உயர் அதி–கா–ரி–கள் விசா–ரணை நடத்தி வரு–
கின்–ற–னர்.
- ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக நீடித்தது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக நீடித்தது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 235 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 223 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 96.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 96.24 அடியாக சரிந்துள்ளது.
- சேலம் அருகே மகுடஞ்சாவடி முருகன் கோவில் பகுதியில் திருமணிமுத்தாறு விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- மகளிர் சுய உதவி குழுக்கள் தலா 2 லட்ச ரூபாய் கடன் பெற்று பிரதி மாதம் தோறும் நபர் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி வந்தனர். இவ்வாறு 17 மாதங்கள் பணத்தை கட்டினர்.
காகாபாளையம்:
சேலம் அருகே மகுடஞ்சாவடி முருகன் கோவில் பகுதியில் திருமணிமுத்தாறு விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு நிதி உதவி செய்கிறது. இந்நிலையில் தப்பகுட்டை பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தலா 2 லட்ச ரூபாய் கடன் பெற்று பிரதி மாதம் தோறும் நபர் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி வந்தனர். இவ்வாறு 17 மாதங்கள் பணத்தை கட்டினர்.
அந்த பணத்தை நிதி நிறுவனத்தினர் வங்கியில் கட்டாமல் பெண்களை ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இன்று 12 மணி முதல் நிதி நிறுவன வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, மாநகர நல அலுவலர் யோகானந்த், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்கு நர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, மாவட்ட தொற்று நோய் தடுப்பு நிபுணர் விமா மும்தாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் நாள்தோறும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 3 முகாம்களும், நடமாடும் பள்ளிச்சிறார் மருத்துவக் குழுக்கள் மூலம் 6 முகாம்களும் என மாவட்டத்தில் மொத்தம் 180 சிறப்பு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மேலும், சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சிப் பகுதிகளில் 400 நபர்களும், பேரூராட்சி பகுதிகளில் 310 நபர்களும், நகராட்சி பகுதி களில் 169 நபர்களும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 250 நபர்களும் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
- அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான இந்தியா விளையாட்டு ஆணையம் (சாய்) மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு விளை யாட்டு போட்டிகளுக்கு சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விளை யாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகம் 66 சதவீதம் உயர்த்தியுள்ளது.
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான அமைச்சக உதவித்திட்டத் தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அங்கீரிக்கப்பட்டப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66 சதவீதம் அதிகமாகும்.
உணவு, உறைவிடம், உள்ளூர் போக்குவரத்து, சில நேரங்களில் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செலவு உச்சவரம்பு இருக்கும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு நவம்பரில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டதால் உச்சவரம்பு திருத்தியமைக்கப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
- இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேலும் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து சிவகுமாரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அவர் மறுத்ததால் மேட்டூர் தீயணைப்பு படையினரை வரவழைத்து கீழே இறங்க செய்தனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிவகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






