search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    X

    டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    • சேலம்‌ மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக்‌ கூட்டம் அரசு மோகன்‌ குமாரமங்கலம்‌ மருத்துவக்‌ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப்‌ பணி, புகை மருந்து அடிக்கும்‌ பணி, கிருமி நாசினிகள்‌ தூவுதல்‌, நிலவேம்பு குடிநீர்‌ வழங்குதல்‌ மற்றும்‌ சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, மாநகர நல அலுவலர் யோகானந்த், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்கு நர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, மாவட்ட தொற்று நோய் தடுப்பு நிபுணர் விமா மும்தாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் நாள்தோறும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 3 முகாம்களும், நடமாடும் பள்ளிச்சிறார் மருத்துவக் குழுக்கள் மூலம் 6 முகாம்களும் என மாவட்டத்தில் மொத்தம் 180 சிறப்பு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.

    இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    மேலும், சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சேலம் மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சிப் பகுதிகளில் 400 நபர்களும், பேரூராட்சி பகுதிகளில் 310 நபர்களும், நகராட்சி பகுதி களில் 169 நபர்களும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 250 நபர்களும் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×