என் மலர்
சேலம்
- சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலை நேரம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் நேற்று இரவு, மாவட்டத்தில் ஆணைமடுவு, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஓடியது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
ஆணைமடுவு - 5, ஏற்காடு-2.8, கடையாம்பட்டி-1, சேலம் - 0.3 என மொத்தமாக 9.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- சேலத்தை மையமாக கொண்டு செயல்பட்ட அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது.
- முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையை தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர்.
சேலம்:
கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வங்கிகள், தபால் அலுவலகங்கள் என இருக்கும்போது, மோசடி நிறுவனங்களில் பணத்தைக்கட்டி இழப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. மோசடி நிறுவனங்கள் குறித்து அடிக்கடி செய்திகள் வந்தாலும் அதிக வட்டி, குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு என மக்களிடம் ஆசையை தூண்டி பணத்தை அபகரிக்கும் கும்பலில் மோசடிகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வரிசையில் சேலத்தை மையமாக கொண்டு செயல்பட்ட அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது. 2016 ஜூலை 1-ந் தேதி தொடங்கப்பட்ட அமுதசுரபி எனும் கூட்டுறவு சங்கம், மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலம் துறையின்கீழ் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
12 தலைவர்கள், அவர்களுக்குக்கீழ் ஒரு மேலாளர், ஒரு உதவி மேலாளர், ஒவ்வொரு கிளைகளிலும் சேல்ஸ் ஆபீஸர்ஸ் என்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ராமநாதபுரம் கமுதியில் ஏற்கனவே அமுதசுரபி என்னும் நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியை இந்த நிறுவனம் வாங்கி, அமுத சுரபி என்று பெயர் மாற்றம் செய்து, முதல் கிளையாக நடத்தத் தொடங்கியது.
ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகளில் நிறுவினர்.
சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் பணத்தை தினசரி வசூலித்து, அதை ஆண்டு இறுதியில் வட்டியுடன் முழுத்தொகையையும் தருவதாகக் கூறி வந்தது இந்த நிறுவனம். இந்த சங்கத்தில் குறுகிய கால முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைத் தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை சேர்ந்த பாஸ்கரன், அயோத்தியாபட்டினம் கிளையில் ரூ.2.9 லட்சம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில் தமிழகம் முழுவதும் 86 கிளைகள் தொடங்கி ரூ.58 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27) மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்க நிறுவனர் தங்கப்பழம் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் தங்கப்பழத்தை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட தங்கப்பழம் அமுதசுரபி பெயரில் தனியார் கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கு முன் அஷ்யூர் அக்ரோ டெக் என்ற நிதி நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு செபியில் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கில் மொத்த புகார்தாரர்கள் 60 ஆயிரம் பேர். அவர்களது முதலீட்டில் வாங்கப்பட்ட வால்பாறையில் 60 ஏக்கர், அனுப்பூரில் 39 ஏக்கர், துறையூரில் 250 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிலும் நிலுவையில் உள்ளது. அமுதசுரபி முதலீடு பணத்தில் 10 கோடி ரூபாயை அக்ரோ டெக் முதலீட்டாளர்களுக்கு வழங்கி அப்போதைக்கு பிரச்சினையை தற்காலிகமாக சமாளித்துள்ளனர்.
இது தவிர 450 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது, அமுதசுரபியின் 45 கிளை அலுவலகத்திற்கு வாடகை செலுத்தியது என கணக்கு காட்டி உள்ளனர்.
மீதமுள்ள பணத்தின் நிலவரம் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய சேலம் ஜங்ஷன் சேர்ந்த பிரேமானந்தாவுக்கு தான் முழுமையாக தெரியும் என தங்கப்பழம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகிறோம். விரைவில் அவர் சிக்குவார். அப்போது கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
- எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி மலை கிரா மத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடு களுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.
இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மணிமேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறோம். என் கணவர் தினமும் காட்டிற்கு சென்று ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டி எடுத்து வருவார். கடந்த 18-4-2023 அன்று வழக்கம் போல என்னுடைய கணவர் மற்றும் வேலு என்பவர் மேய்ச்சலுக்கு சென்றனர். ஆனால் அதன் பின்னர் என் கணவர் மூர்த்தி வீடு திரும்பவில்லை.
இதை அடுத்து 19-4-2023 அன்று காலை முதல், என்னுடைய உறவினர்களுடன் சேர்ந்த என் கணவரை தேடினேன். அப்போது, கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று, தலையிலும் விலாவிலும் குண்டு அடிபட்ட என் கணவரின் உடலை பார்த்தோம்.
பின்னர் இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்தில் கூறினேன். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி உண்மைக்கு புறம்பான எதை எதையோ எழுதிக் கொண்டு என்னிடமும், வேலு மற்றும் வேறு சில சாட்சியிடமும் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.
இது மட்டுமன்றி வேறு சில வெற்று காகிதங்களில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு பின்னர் தேவைப்படும் என்று சொன்னார். அந்த நேரத்தில், என் கணவரை சுட்டு கொன்ற கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் கும்பல் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர்.
உடனே என்னை போலீஸ் அதிகாரி சரிமா நீ வீட்டுக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன், உன் கணவர் மூர்த்தியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நான் உரிய தண்டனை வாங்கி தருகிறேன் என்று கூறி எங்களை போலீஸ் நிலையத்திலிருந்து விரைவாக அனுப்பிவிட்டார்.
தற்போது என் கணவர் மரத்தில் ஏறி இலைகளை பறித்தபோது வலிப்பு வந்ததால், தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.
அவர் உள்பட 8 பேரும் வனப்பகுதியில் வேட்டையாடும் போது, அதன் அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எனது கணவர், இதனை வன அதிகாரிகள், போலீசாரிடம் சொல்லி விடுவார் என்பதால் அவரை தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்.
பின்னர் அதிகாரிகளின் துணையோடு, எங்கள் பழங்குடியினர் வழக்கத்திற்கு மாறாக குண்டு அடிபட்ட அவர் சடலத்தை எரித்து தடயங்களை அழித்துவிட்டனர். மேலும் போலீசார் உள்ளிட்ட அதி காரிகள் ரூ. 8 லட்சம் லஞசம் வாங்கி கொண்டு சாட்சிகளை மறைத்துவிட்டனர்.
எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சி.பி.சி.ஐடி போலீஸ் மூலமாக மறு விசாரணை செய்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
- இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம்:
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது. இப்போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இதில் கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும் நடந்தன. நேற்றுடன் திண்டுக்கல்லில் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இன்று முதல் சேலத்தில் லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இங்கு 8 ஆட்டங்கள் நடக்கிறது.
இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் பாபா அபராஜித், ஜெகதீசன், பிரதேஷ் ரஞ்சன் பால் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் சஞ்சய் யாதவ், ஹரீஸ் குமார் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார்கள்.
பந்து வீச்சில் ரஹில்ஷா, ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நெல்லை அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் அருண் காார்த்திக், அஜிதேஷ், சூர்யபிரகாஷ், சோனு யாதவ் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் பொய்யாமொழி, மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்சய் ஜெயின், ஹரீஸ், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர். அந்த அணி 4-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் தோற்றது. அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. நாளைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று 96.24 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 95.53 அடியாக சரிந்துள்ளது.
- டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 14-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 223 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 153 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம்கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 96.24 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 95.53 அடியாக சரிந்துள்ளது. கடந்த 11 நாட்களில் நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.
- சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 697 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள் வாக்களித்தார்கள்.
இத்தேர்தலில் சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 24 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு சேலம் மாநகர உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு போட்டி யிட்டு உள்ளனர். திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் குவிந்துள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கு இடையே தேர்தல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.
- சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ளனர்.
சேலம்:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.
இதில் கட்டுமான தொழி லாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தர வுத்தளம் உருவாக்கப்பட்டுள் ளது.
ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவ ரங்கள், தொடர்பு விவ ரங்கள், முகவரி தகவல், தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு வதன் மூலம் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங் களை கொண்டு சேர்ப்பதில் உதவிகரமாக உள்ளது.
சேலம், நாமக்கல்..
குறிப்பாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடத் திற்கு ரூ. 6 வழங்கி வரும் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத் தில் மட்டும் சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ள னர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ-ஷ்ரம் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்தரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-
நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப் பட்டு, எளிமையாக்கப்படு வதாகத் தெரிவித்தார். அந்தவகையில், 29 வகை யான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாது காப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வாயிலாக தொழிலாளர்களின் அதிகா ரமளித்தல் உறுதி செய்யும்.
28.93 கோடி தொழிலாளர்கள்
இ-ஷ்ரம் இணைய தளத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில்பிரிவு களில் ஈடுபட்டுள்ள 28.93 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர். மேலும் பல தொழில் பிரிவுகள் இதில் சேர்க்கப்படும்.
தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் பல்வேறு வகையான வேலைவாய்ப்புத் தொடர்பான சேவைகள் அளிக்கப்படுகின்றன.
இதன் மூலம் 1.39 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கான உதவிகள் அளிக்ப் பட்டுள்ளன. தேசிய வேலை வாய்ப்பு இணையதளம் இ-ஷ்ரம், உத்யம், திறன் இந்தியா ஆகிய இணைய தளங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது.
தொழிலாளர் கொள்கை யில் சீர்தி ருத்தங்கள் செய்யப்பட்டதன் காரண மாக கடந்த 9 ஆண்டுகளில் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) தொழிலா ளர்கள் எளிதாக பணம் எடுக்கும் முறை, ஓய்வூதிய தாரர்கள் எளிதாக வாழ் நாள் சான்றிதழ் பெறும் முறை மற்றும் பென்சன் உயர்வு உள்ளிட்டவை காரணமாக பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தங்கப் பத்தி ரங்களுக்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயித்து மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
- ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சேலம்:
மத்திய அரசு 2015-ம் ஆண்டு முதல் தங்க பத்தி ரம் முதலீட்டு திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி உத்தர வாதத்துடன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் அரசு தபால் நிலையங்கள், வங்கி களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு பாது காப்பான முதலீடு ஆகும். குறைந்தபட்சம் 1 கிராம் முதல் 4 கிலோ வரையி லான மதிப்பு கொண்ட தங்கப்பத்திரங்களை தனிநபரும், 20 கிலோ வரை டிரஸ்டுகளும் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்தின் விலை 24 கேரட்டின் அடிப்படை யில் நிர்ணயம் செய்யப்படும்.
ஆண்டுக்கு 2.5 சதவீதம் வீதம் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வங்கி கணக் கில் வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய தங்கத்தின் மதிப்பில் பணமாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பான் கார்டு நகல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
சேலம் மக்கள் ஆர்வம்
ஒவ்வொரு ஆண்டும் சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் இந்த திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநக ராட்சியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலனோர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள னர். வங்கிகள், தபால் நிலையங்க ளில் தொழில் அதி பர்கள், பொதுமக்கள் பணம் கொடுத்து ஆர்வமாக தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்து வருகின்ற னர்.
வெளியீட்டு விலை
மத்திய அரசால் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கப்பத்திரம் திட்டத்தில் அப்போது ஒரு கிராமுக்கு ரூபாய் 3146 என விலை நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டு 2023-2024 (தொடர்-I) தங்கப் பத்தி ரங்களுக்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயித்து மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளி யீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ. 5,876-ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.
- சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தினமும் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
- இரவு 9 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகே மொபட் நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் அங்கு இல்லை. இந்த மொபட்டை யாரோ திருடி சென்றுள்ளனர்.
சேலம்:
சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தினமும் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பலர் உள்நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு டாக்டர்கள், நர்சுகள், தொழிற் நுட்ப ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்று கின்றனர். அவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்டவைகளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ஆஸ்பத்தி ரியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு நடைபெறுகிறது. அந்த வகை யில், டாக்டர் ஒருவருடைய மொபட் திருட்டு போயியுள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் நவ்ரின் ரேகனே (வயது 26). இவர் கடந்த 19-ந்தேதி இரவு 9 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகே மொபட் நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, மொபட் அங்கு இல்லை. இந்த மொபட்டை யாரோ திருடி சென்றுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் தாரமங்கலம், அமரகுந்தி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவரது மனைவி பிரசவத்துக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவரை பார்க்க கடந்த 17-ந்தேதி இரவு 8.30 மணிக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். பின்னர் அவர், அம்மா உணவகம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மகப்பேறு பிரிவுக்கு சென்றார். இதையடுத்து அவர், திரும்பி வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு பதறினார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டால் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் பீதி அடைந்துள்ளனர்.
- சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற் கான முகாம் வாழப்பாடி அருகே உள்ள அத்த னுார்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடை பெற்றது. முகாமிற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
முகாமை முன்னிட்டு துணை கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயரதி காரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்திடவும், அந்தந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தர விட்டார். இதனையடுத்து மக்களை சந்தித்து, குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்த குழுவினர்,
அந்தந்த பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங் களை செய்து கொடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென அரசுத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் மக்கள் நலத்
திட்டங்கள் குறித்த குடில் களை பார்வையிட்டார்.
முன்னதாக, அத்த னுார்பட்டி கூட்டுறவு கடன் சங்கம், பொது வின்யோக் ககடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்ட தோடு, அத்தனுார்பட்டி புதுார் கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதன், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டு றவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) ஜெமினி, வாழப்பாடி தாசில்தார் கோபால கிருஷ்ணன், அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அத்தனூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பேருந்து நிறுத்தம் கேட்டு மனு
தொடர்ந்து கலெக்டர் கார்மேகத்தை பா.ம.க. பிரமுகர் சத்தியராஜ், மருத்துவர் பிரேம்குமார் உள்பட பொதுமக்கள், மாணவ–மாணவியர் சந்தித்து புளிந்தோப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாத்தியமும், தேவையும் இருப்பின் பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி ஆனித் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- அன்று காலை நடராஜர் மற்றும் அம்மனுக்கு அனைத்து விதமான சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பூஜைகள், 4 வீதிகளில் சாமி திருவீதி உலா நடைபெறும்.
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி ஆனித் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை நடராஜர் மற்றும் அம்மனுக்கு அனைத்து விதமான சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பூஜைகள், 4 வீதிகளில் சாமி திருவீதி உலா நடைபெறும்.
இதேபோன்று சேலம் ராஜ கணபதி கோவிலில் வருஷா பிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை முதல் மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. இதையடுத்து 26-ந்தேதி காலை 6 முதல் 7.30மணி வரை மகா கணபதி ஹோமம் நடைபெற்று 54 திரவியங்களால் அபிஷேகம் நடைப்பெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மழை பெய்தும் வருகிறது. நேற்று நள்ளிரவும், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆணைமடுவு, கடையாம்பட்டி, தலைவாசல், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது.
இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் பொன்னம்மாபேட்டை, டவுன், கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.
அம்மாபேட்டை மிலிட்டரி சாலை, காந்தி மைதானம் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
ஏற்காடு-27.2, சேலம்-19.6, ஆணைமடுவு - 19, கடையாம்பட்டி- 18, தலைவாசல் - 17, ஓமலூர்-13.4, பெத்தநாயக்கன்பாளை யம்-9, மேட்டூர்-5.2 என மொத்தம் 128.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.






