என் மலர்
சேலம்
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 159 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 79 ரன்கள் எடுத்தார். ஹரிஸ் குமார் 20 ரன்னும், ஜெகதீசன் 15 ரன்னும், சஞ்சய் யாதவ் 15 ரன்னும் எடுத்தனர்.
நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அருண் கார்த்திக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார்.
முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீ நிரஞ்சன் 24 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தனது அதிரடியை தொடர்ந்த அருண் கார்த்திக் சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்தில் 5 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், நெல்லை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அருண் கார்த்திக் 104 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.
சேலம்:
சேலம் மத்திய சிறை பின்புறம் உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.
இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் உடனடியாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர். இதில், 3-வது முறையாக காதலனை தேடி சேலத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமிக்கு தகுந்த அறிவுரை கூறி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், சிறுமியின் பெற்றோர் தற்போது சேலத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றனர். அவர்கள் வந்ததும் சிறுமி பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீஸ் தெரிவித்தனர்.
- கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
- அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி முபினா (வயது 39). இவருக்கு முகநூலில் அறிமுகமான நபர், தனது நிறுவனத்தில் யூரோ, பவுண்டாக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியதின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமா ற்ற ப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேரை போலீஸ் கமிஷ னர் விஜயகுமாரி நேற்று இரவு அதிரடியாக மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
- மாறுதல் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகரத்தில் உள்ள போலீஸ் நிலை யங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 22 பேரை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று இரவு அதிரடியாக மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், டவுன் குற்ற பிரிவிற்கும், அன்னதா னப்பட்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா, செவ்வாய்பேட்டைக்கும் (சட்டம்-ஒழுங்கு), காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சின்ன தங்கம் அன்னதா னப்பட்டிக்கும் (சட்டம் ஒழுங்கு) மாற்றப்பட்டு உள்ளனர்.
இதேபோல் அம்மா பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் (சட்டம்-ஒழுங்கு) அன்னதானப்பட்டி குற்ற பிரிவிற்கும், அன்னதா னப்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், கிச்சிப்பா ளையம் குற்றப்பிரிவிற்கும், சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவிற்கும், பள்ளப்பட்டி இன்ஸ்பெக் டர் ராணி (சட்டம்-ஒழுங்கு), டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (சட்டம்-ஒழுங்கு), அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கும் (சட்டம்-ஒழுங்கு), சேலம் மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, அஸ்தம்பட்டி குற்றப்பிரி விற்கும், அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகாமி, கன்னங்குறிச்சி குற்றப்பிரிவிற்கும், வீராணம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், இதே காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும், இங்கு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த கஸ்தூரி, அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பள்ளப்பட்டி குற்றப் பரிவு இன்ஸ்பெக்டர் நெப் போலியன், இதே போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும், சேலம் மாநகர நில அபகரிப்பு பிரிவு இன்ஸ் பெக்டர் பழனியம்மாள், பள்ளப்பட்டி குற்றப்பிரி விற்கும், கன்னங்குறிச்சி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார், சூரமங்கலம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக் டர் ஆகவும், இரும்பாலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாரதா, இதே போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக வும், கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இரும்பாலை போலீஸ் நிலைய குற்ற பிரிவிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ் பெக்டர் மனோன்மணி கருப்பூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ் பெக்டர் ஆகவும் மாற்றப் பட்டு உள்ளனர்.
அஸ்தம்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சசி கலா, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கும், இரும்பாலை சட்டம் ஒழுங்கு இன்ஸ் பெக்டர் ஜெய்சல்குமார், மாநகர மத்திய குற்றப்பிரி விற்கும், கருப்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தமிழரசி மாநகர நில அபகரிப்பு பிரிவிற்கும், சேலம் டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சம்மங்கி, மாநகர மதுவிலக்கு பிரி விற்கும் மாறுதல் செய்யப்பட்டனர்.
மாறுதல் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடி யாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டு உள்ளனர்.
- பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை சத்யா நகர் பகுதி சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை முடிந்ததும், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்ட னர். இதனால் மன முடைந்த பரத், சம்ப வத்தன்று விஷத்தை குடித்து விட்ட தாக அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது.
- தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.
சேலம்:
கருணாநிதி நூற்றாண்டையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளி கள் பதிவு செய்யும் முகாம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடை பெற்றது. முகாமை மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவ லர் மேனகா ஆகியோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 7 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து பெட்டகத்தையும் வழங்கினார்கள்.
முகாமில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், கலைஞர் நூற்றாண்டை யொட்டி அரசு தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டதின் அடிப்ப டையில் சேலம் மாவட்டத் தில் 5 சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறு கிறது. முகாமில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு காப்பீட்டுத் திட்ட பயனா ளிகள் பதிவு செய்யும் முகா மும் இங்கு நடைபெறுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மணிப்பால் மருத்துவமனை, ஐ பவுண்டேசனை சார்ந்த மருத்துவ குழுவினர் பங்குபெற்று ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, காது மூக்கு தொண்டை மருத்துவம், தோல்நோய் மருத்துவம், சித்தா மருத்துவம், காச நோய், தொழுநோய், புற்று நோய், பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை கள் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்து வம் ஆகியவற்றிக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கினர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிர சவத்திற்காக யோக பயிற்சியும் முகாமில் அளிக்கப்பட்டது.
முகாமில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் உமாராணி, தனசேகர், சுகாதார நிலைக்குழுத்த லைவர் ஏ.எஸ்.சரவணன், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள், துணை இயக்குநர் யோகா னந், கவுன்சிலர்கள் சங்கீதா, கிரிஜா, ஸ்ரீராஜ் குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
- நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நளினி தேவி (வயது 50). இவரது கணவர் இரும்பாலை கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55). இவர்கள் கடந்த 2 ஆண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக இருவரும் சேலம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நளினி தேவிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், ஆத்திரமடைந்த ராமமூர்த்தி சமூக வலைத்தளத்தில் நளினிதேவி குறித்து தரமற்ற வார்த்தைகளால் சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நளினி தேவி சேலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து ராமமூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்ம புரி, சேலம், கரூர், திருச்சி வழியே ராமேஸ்வரத்துக்கு சனிகிழமை மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம்:
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்ம புரி, சேலம், கரூர், திருச்சி வழியே ராமேஸ்வரத்துக்கு சனிகிழமை மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மறு மார்க்கத்தில் ஞாயிறுதோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் வருகிற 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
ஹூப்ளியில் சனி காலை 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வ ரத்தை வந்தடையும். அங்கு இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியை அடையும்.
ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
- அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில், நாளை அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேச இருந்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தாரமங்கலம் அ.தி.மு.க நிர்வாகிகள் செய்து வந்த நிலையில், கூட்டம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
வழிபாட்டு தலங்களில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தடை இருக்கிறது. அதனால் கூட்டத்திற்கான அனுமதி தொடர்பாக, அமரகுந்தி மாரியம்மன் கோவில் தக்காரும், செயல் அலுவலருமான சசிகலா ஆய்வு நடத்தினர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியனும் கூட்டம் நடக்கும் இடம், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்றும் அதற்குரிய அனுமதி பெறவில்லை என்பதால் காவல்துறை தரப்பிலும் அனுமதி இல்லை என அறிவித்தார்.
மேலும் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு உரிய அனுமதியை பெற்று கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
- இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 24), சேலம் 3 ரோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (26), கல்லாங்குத்து விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சந்தோஷ் குமார் (28) ஆகியோர் சேர்ந்து, கொடுக்கல் வாங்கல் தகராறு காரண மாக கடந்த மாதம் 15 தேதி உதயசங்கர் என்பவரை வெட்டி கொலை செய்தனர்.
இதனால் இந்த 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பன்னீர்செல்வம், ஆனந்த் மீது போலீஸ் வாகனத்தை தாக்கியது, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து, பள்ளப்பட்டி போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனர். அதை ஏற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, நேற்று அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதேபோல சேலம் சிவதாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் கடந்த மே 19-ந் தேதி, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சேலம் டவுன் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்து ரைத்தனர். அதை ஏற்று கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள 5 பேரிட மும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
- இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் கொண்டலாம் பட்டி அருகே நெய்க்கார பட்டியை அடுத்த இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 67). இவருக்கு கண்ணம்மாள் (60) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக, ராமன் மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக மகனுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகனுடன் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக, சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது மனைவி கண்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பிரகாசம் நகரை சேர்ந்தவர் யசோதாதேவி (வயது 58). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் யசோதாதேவி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டார்.
இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின் ரோட்டை சேர்ந்த சந்தோசை (30) கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சந்தோசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1, 000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.






