என் மலர்
சேலம்
- கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
- எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது.
மேட்டூர்:
ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது. தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவையில் ஷர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றார். கோவைைய தொடர்ந்து சேலத்திலும் தனியார் பேருந்து ஓட்டுநராக களம் இறங்கி உள்ள பெண்ணுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், செட்டிப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 28). சிறு வயது முதலே கனரக வாகனம் இயக்கி அனுபவம் பெற்ற இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் செயல்பட்டு தனியார் மகளிர் கல்லூரியில் பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தார். இந்த கல்லூரி பஸ்சை ஆண் டிரைவர்களே இயக்கி வந்த நிலையில், முதல் முதலாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது மாணவிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
இதனால் சேலத்தில் முதல் முறையாக கல்லூரி பஸ்சை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை தமிழ்ச்செல்வி பெற்றார்.
இதனிடையே தமிழ்ச்செல்விக்கு வெளி மாவட்டங்களுக்கிடையே பொது பஸ்சை இயக்க வேண்டும் என விருப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மேட்டூரில் இருந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்தை ஓட்டும் பணியில் சேர்ந்தார். அவர், தினமும் மேட்டூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இந்த பஸ்சை இயக்கி வருகிறார்.
மேட்டூரில் முதல் முறையாக தனியார் நகர பேருந்தை இயக்கும் முதல் பெண்ணாக திகழும் தமிழ்ச் செல்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-
எனக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக உள்ளூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி பஸ் டிரைவர் பணியில் சேர்ந்தேன். தற்போது அந்த பணியில் இருந்து விலகி, தனியார் பஸ்சில் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கோவை அணி 206 ரன்களை குவித்தது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.
சேலத்தில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 23 ரன்னும், சுஜய் 31 ரன்னும், ராம் அர்விந்த 4 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சாய் சுதர்சன், முகிலேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. 4-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 34 ரன்னில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் கடந்தார். சாய் சுதர்சன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. ஷாருக் கான் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
- அதற்கு பயன்படும் இயந்திரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்திருந்தார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சூரியம்பா ளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பயன்படும் இயந்தி ரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்தி ருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு ரவிச்சந்தி ரன் சாப்பிட சென்று விட்டு திரும்பி வந்தபோது வயரை காணவில்லை. இது குறித்து மக்களிடம் தெரிவித்த அவர் அப்பகுதியில் தேடினார்.
அப்போது வயர் எரிக்கப்படும் நாற்றம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது, 6 பேர், கேபிள் வயரை எரித்துக்கொண்டிருந்தனர். அந்த வயர் மேற்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தீ உருகிய பின், உட்பகுதியில் உள்ள காப்பர் கம்பியை விற்க திட்டமிட்டிருந்தனர். இதனால் ரவிச்சந்திரன் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, வேடப்பட்டியை சேர்ந்த ஜெய்ஹிந்த் (23), ராஜா (29) சின்னதம்பி (30) கார்த்தி (21), தங்கராஜ் (50) நாகராஜ் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
- காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திருமணம் செய்துகொண்டார்.
- உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திரு மணம் செய்துகொண்டார். அவர் கடந்த, 20-ந் தேதி உடலில் வெட்டு காயங்களு டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:
காளியம்மாள், ரகு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்துக்கு முதல்நாள் இரவு ரகு, அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால், காளியம்மாள் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார், ரகுவை தேடி வந்த நிலை யில் நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை, சேலம் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பார்.
பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவ டிக்கைகளை எடுத்து வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஏற்காடு காக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு மணிமேகலை (33) என்ற மனைவியும், மகேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.
- காகம்பாடி அருகே சமுத்திரகாடு வனப்பகுதியில் இறந்து கிடந்தார்
ஏற்காடு:
ஏற்காடு காக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு மணிமேகலை (33) என்ற மaனைவியும், மகேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி கடந்த ஏப்ரல் மாதம் 190ந் தேதி காகம்பாடி அருகே சமுத்திரகாடு வனப்பகுதியில் இறந்து கிடந்தார். விசாரணையில் மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக சென்றபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 7 நபர்கள் கொண்ட கும்பல் மூர்த்தியை சுட்டு கொன்றுவிட்டதாக ஏற்காட்டில் உள்ள வாட்ஸ்0அப் குழுக்களில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து மூர்த்தி மனைவி மணிமேகலை என்னுடைய கணவர் இறப்பில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவரை சிலர் சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என நானும், என்னுடைய குடும்பத்தினரும் கருதுகிறோம். எனவே இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதுதொடர்பாக நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றச்சாட்டபட்டுள்ள 8 பேர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டி ருந்தார்.
- மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.
மேட்டூர்:
மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.
அதை தொடர்ந்து இரு வரையும் மேட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் ஒருவர் மேட்டூர் கீழ் குள்ள வீரன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (வயது 30). மற்றொ ருவர் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தின் மகன் சீனிவாசன் (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் இருவரையும் கைது செய்தார்.
- கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
- அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரியை முந்திக்கொண்டு முன்னே சென்ற வேளாண்மைதுறை உதவி கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் என்பவரது கார் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் கார் பலத்த சேதம் அடைந்த நிலையில் அதில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர்.
மேம்பாலத்தின் மீது ஏற்பட்ட விபத்தின் காரணமாக சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தர்மபுரி சாலையில் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலா, 50 கிலோவில், 14 மூட்டைகளில், 700 கிலோ அரிசி இருந்தது. விசாரணையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா செட்டி அல்லி அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது45), என்பதும் தெரியவந்தது.
அவர் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை கைது செய்தனர்.
- திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வியை சந்திக்கவில்லை
- திருச்சி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது
சேலம், ஜூன் 25-
7-வது டி.என்.பி.எல். 20 ஓவரர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கி யது. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய 4 நகரங்களில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கோவை, நெல்லையில் போட்டிகள் முடிந்து விட்டன.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நேற்று போட்டிகள் தொடங்கின நேற்று நடந்த ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தன. டி.என்.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டி யில் அஸ்வின் தலைமை யிலான திண்டுக்கல் டிரா கன்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோது கின்றன.
இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக திண்டுக்கல் டிராகன்ஸ் இருக்கிறது. அந்த அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பால்சி திருச்சியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை பாந்தர்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீசை 1 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. கோவை கிங்சை வீழ்த்தி திண்டுக்கல் டிரா கன்ஸ் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திண்டுக்கல் அணியின் ஆதிக்கத்தை கோவை கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என் று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. கோவை அணி 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை யும், 6 விக்கெட் வித்தியாசத் தில் திருச்சியையும் வென் றது. நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட் வித்தி யாசத்தில் தோற்றது. திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் கோவை அணி உள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ்-கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
திருப்பூர் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி நெல்லை ராயல் கிங்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கோவை (70 ரன்), சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் (7 விக்கெட்), ஆகிவற்றிடம் தோற்றது. திருச்சியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திருச்சி அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. திண்டுக்கல் (6 விக்கெட்), சேலம் (5 விக்கெட்), கோவை (6 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது. முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
- தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
- மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.
தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.
கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 15-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.
- டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 15-வது நாளாக இன்று நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 153 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 233 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 95.53 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 94.82 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் மழையை எதிர்நோக்கி உள்ளனர்.
- டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 98 ரன்களை எடுத்தது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மதுரை அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் சேலம் அணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 29 ரன்களை எடுத்தார். அமித் சாத்விக், கௌரிசங்கர் தலா 17 ரன்கள் எடுத்தனர்.
மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டும், முருகன் அஷ்வின், கவுதம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






