என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பி.எல். போட்டியில் இன்று திண்டுக்கல்- கோவை கிங்ஸ், திருப்பூர்- திருச்சி அணிகள் மோதல்
    X

    டி.என்.பி.எல். போட்டியில் இன்று திண்டுக்கல்- கோவை கிங்ஸ், திருப்பூர்- திருச்சி அணிகள் மோதல்

    • திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வியை சந்திக்கவில்லை
    • திருச்சி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது

    சேலம், ஜூன் 25-

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவரர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கி யது. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய 4 நகரங்களில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கோவை, நெல்லையில் போட்டிகள் முடிந்து விட்டன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நேற்று போட்டிகள் தொடங்கின நேற்று நடந்த ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தன. டி.என்.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டி யில் அஸ்வின் தலைமை யிலான திண்டுக்கல் டிரா கன்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோது கின்றன.

    இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக திண்டுக்கல் டிராகன்ஸ் இருக்கிறது. அந்த அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    பால்சி திருச்சியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை பாந்தர்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லீசை 1 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. கோவை கிங்சை வீழ்த்தி திண்டுக்கல் டிரா கன்ஸ் 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல் அணியின் ஆதிக்கத்தை கோவை கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என் று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. கோவை அணி 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை யும், 6 விக்கெட் வித்தியாசத் தில் திருச்சியையும் வென் றது. நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட் வித்தி யாசத்தில் தோற்றது. திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் கோவை அணி உள்ளது.

    இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ்-கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    திருப்பூர் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி நெல்லை ராயல் கிங்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கோவை (70 ரன்), சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் (7 விக்கெட்), ஆகிவற்றிடம் தோற்றது. திருச்சியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திருச்சி அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. திண்டுக்கல் (6 விக்கெட்), சேலம் (5 விக்கெட்), கோவை (6 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது. முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    Next Story
    ×