என் மலர்
சேலம்
- (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கி ணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்களுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
- தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்க ளுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல் வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் காகாபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் ஆகிய 2 நாட்கள் தேர்வு நடக்கிறது. 4 பிரிவு களாக (ஷிப்ட்) இத்தேர்வு நடைபெறும்.
இந்த கல்லூரி வளா கத்தில் கேண்டீன் வசதி, ஜெராக்ஸ் எடுக்கும் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தேர்வர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் உட்கார்ந்து இருப்பதற்கும் இடம் வசதி விசாலமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் வருவதற்கும் எளிதாக உள்ளது.
இந்த மையத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் எனப்படும் மின் அனுமதி சான்றுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் அனுமதி சான்றிதழ்களும், உரிய அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் தெரிவித்துள்ளது.
- கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
- அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி க.புதூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் தீனா (வயது 21).
கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.
பாம்பை கண்டு அங்கு இருந்தவர்கள் மற்றும் சக ஊழியர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தீனா, துணிச்சலுடன் சென்று அந்த பாம்பை பிடித்து அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக பாம்பு தீனாவை கடித்தது. உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீனாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 5 நாட்களாக தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தீனா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
வேலைக்குச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
- இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
சேலம்:
சேலம் அருகே கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37).
இவர் சீரகாப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டை விட்டு குடும்பத்துடன் ராமேஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை, அருகில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் பார்த்து, ஹரிகரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ஹரிகரன் தனது நண்பரான சிவபாரதி என்பவரிடம் கூறி நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிவபாரதி, இந்த கொள்ளை குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பட்டப்பகலில் இச்சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- முகாமை சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை தலைமை மருத்துவர் மணி தொடங்கி வைத்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலைஞர் நூற் றாண்டு விழாவையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமை சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை தலைமை மருத்துவர் மணி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், ஆத்தூர் சுகாதார மாவட்டம் துணை இயக்கு னர் டாக்டர் ஜெமினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தி னராக ஏற்காடு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப் பட்டு, அவர்களுக்கு மார்பகம், கர்ப்பபை பரி சோதனை செய்யப்பட்டது.
காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவர்கள், எலும்பு, கண், மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்கள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களும் இணைந்து இந்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனைத்து வழிமுறைகளும், பரிந்துரை களும் வழங்கப்பட்டது.
மேலும், இதுவரை காப்பீட்டு அட்டை பெறாத வர்கள், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமும் நடைபெற்றது. இந்த முகாமில் ஏற்காட்டில் 9 பஞ்சாயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- மூர்த்தி (வயது 38). கூலி வேலைக்கும், எஸ்டேட் வேலைக்கும் சென்று வந்தார். இது தவிர ஆடு மேய்க்கவும் அவ்வப்போது சென்று வருவார்.
- கடந்த 4 மாதத்திற்கு முன்பு, மூர்த்தி ஏற்காடு அருகே சமுத்திரகாடு என்ற வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள காக்கம்பாடி மலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கூலி வேலைக்கும், எஸ்டேட் வேலைக்கும் சென்று வந்தார். இது தவிர ஆடு மேய்க்கவும் அவ்வப்போது சென்று வருவார்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு, மூர்த்தி ஏற்காடு அருகே சமுத்திரகாடு என்ற வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய ஏற்காடு போலீசார், உடற்கூறு ஆய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மூர்த்தியின் மனைவி மணி மேகலை மற்றும் உறவினர் கள் மூர்த்தியின் சாவில் மர்மம் உள்ளதாகவும், துப்பாக்கி குண்டு பாய்ந்து தான் மூர்த்தி இறந்துள்ளார் என தெரிவித்தனர்.
மேலும், மூர்த்தியை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்ட தாகவும், சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி மூர்த்தியின் மனைவி மணி மேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் மனு கொடுத்தார்.
இதனையடுத்து தற்போது மூர்த்தி சாவு குறித்து விசாரிக்க சேலம் ரூரல் டி.எஸ்.பி அமல அட்
வினுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சேலத்தில் உள்ள டி.எஸ்.பி அலுவலகத்தில், டி.எஸ்.பி அமல அட்வின் மூர்த்தியின் மனைவி மணிமேகலை, அவரது உறவினர்கள் மற்றும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ள 8 பேரிடமும் விசாரணையை தொடங்கினார்.
மேலும் மூர்த்தி இறந்து கிடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். இது தொடர்பாக ஏற்காடு போலீசாரிடமும் அவர் விவரங்கள் கேட்டறிந்தார். விசாரணைக்கு பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். அதன்பிறகே மூர்த்தி சாவு குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா விற்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் காவிரியில் ஆனந்தமாக நீராடி பூங்காவிற்கு சென்று பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி ஊஞ்சலாடியும், சறுக்கு விளையாடியும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் கார்களிலும், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களி லும் சுற்றுலா தளங்களுக்கு வந்ததால் மேட்டூர், கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று ஒரே நாளில் 7,216 சுற்றுலா பணிகள் மேட்டூர் அணை பூங்கா விற்கு வந்து சேர்ந்தனர். இதன் மூலம் பார்வை யாளர் கட்டணமாக ரூ.36 ஆயிரத்து 80 வசூல் ஆனது. அணையின் வலது கரை யில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 827 பேர் வந்து சென்றனர்.
- மேட்டூர் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்திரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
- ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக் கப்படும் மீன்களை பாது காத்து வைப்பதற்காக, மேட்டூர் மீன்வளத் துறை யின் உதவி இயக்குனர் அலு வலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்தி ரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு உதவி இயக்குனருக்கு புதிதாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
இதையடுத்து பழைய ஐஸ் கட்டி உற்பத்தி செய்யப் படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- கைதி அமைச்சராக இருக்கலாமா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
- முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி தாரமங்கலம் ஒன்றியம் அமரகுந்தியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 3,500 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஓமலூர் மணி எம்.எல்.ஏ. வரவேற்றார்.
சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து, நல்லதம்பி, ஜெய்சங்கர், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 3,500 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். முன்னதாக அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு தனித்தனியாக சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க.வை உடைப்பதற்கு மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். அது உங்கள் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது.
சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அ.தி.மு.க. வென்றுள்ளது. மு.க.ஸ்டாலின் 3 முறை சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளார். அவர் வந்து என்ன செய்துள்ளார்?. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பெரும்பாலான சாலைகள் போடப்பட்டன. பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டமைக்கு விருதுகளை பெற்றோம். தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். போக்குவரத்து வசதியை மேம்படுத்த 14 ஆயிரம் பஸ்களை வாங்கினோம். இன்று ஒரு பஸ் கூட வாங்க முடியவில்லை. அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் கால்நடைகளை வளர்த்து பயன்பெற வெளிநாட்டில் உள்ளது போன்று ரூ.3 ஆயிரம் கோடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா ஆசியாவிலேயே பெரியது. அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். இங்குள்ள திட்டங்களை நிறைவேற்றுவதை விட்டு விட்டு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார் முதலமைச்சர்.
மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்கிறார்கள். அதன்மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் யார் வீட்டுக்கு செல்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது குற்றம் சாட்டிய ஒருவரை அமலாக்கத்துறை இப்போது கைது செய்து இருக்கிறது.
அவரை காப்பாற்ற இன்று துடிக்கிறார். கைதி அமைச்சராக இருக்கலாமா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 233 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 176 கனஅடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 16-வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 1000 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 233 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 176 கனஅடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 94.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 94.10 அடியாக சரிந்துள்ளது.
- 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
- அதிகபட்சமாக ஃபெராரியோ 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.
சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுதின.
டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் கிஷோர், ராதாகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய சாய் கிஷோர் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய விஜய் சங்கருடன், அனிருத் அதிரடியை தொடர்ந்தனர். அனிருத் 25 பந்தில் 51 ரன் குவித்து வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்களை குவித்தது. விஜய சங்கர் 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதைதொடர்ந்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
இதில், முதலில் கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ராஜ்குமார் பேட்டிங் செய்தனர். கங்கா ஸ்ரீதர் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக விளையாட வந்த மோனிஷ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து பெராரியோ பேட்டிங் செய்தார்.
இதில், ராஜ்குமார் மற்றும் ஃபெராரியோ ஜோடி 22 ரன்கள் மற்றும் 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆர்.ராஜ்குமார் ஒரு ரன் எடுத்து ரன் அவுட்டானார்.
இதில், 17வது ஓவரில் திருச்சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தனர். 18 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்தோனி தாஸ் மற்றும் ஜஃபர் ஜமால் களத்தில் இருந்தனர்.
இதில் அந்தோனி தாஸ் 25 ரன்களிலும், ஜஃபர் ஜமால் 30 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், மணி பாரதி பூஜ்ஜியம் ரன்களும், பிரான்சிஸ் ராக்கின்ஸ் ஒரு ரன்னும், சிலம்பரசன் 6 ரன்களும் எடுத்தனர். இதில், பிரான்சிஸ் ராக்கின்ஸ் மற்றும் சிலம்பரசன் அவுட்டாகாமால் இருந்தனர்.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து திருச்சி அணி தோல்வியடைந்தது.
இதன்மூலம், 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.
- டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 201 ரன்களை எடுத்தது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.
சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் கிஷோர், ராதாகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர்.
அதிரடியாக ஆடிய சாய் கிஷோர் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய விஜய் சங்கருடன், அனிருத் அதிரடியை தொடர்ந்தனர். அனிருத் 25 பந்தில் 51 ரன் குவித்து வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்களை குவித்தது. விஜய சங்கர் 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதலில் ஆடிய கோவை அணி 206 ரன்களை எடுத்தது.
- அந்த அணியின் சாய் சுதர்சன் 83 ரன்கள் குவித்தார்.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.
சேலத்தில் இன்று மாலை 3.15 மணிக்கு நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 34 ரன்னில் அவுட்டானார். ஷாருக் கான் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கோவை அணி ஆரம்பம் முதல் துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் வெளியேறினார். சரத் குமார் 36 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 147 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோவை அணி சார்பில் தாமரை கண்ணன் 3 விக்கெட்டும், மணிமாறன் சித்தார்த், ஷாருக் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






