search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல்- 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி
    X

    டி.என்.பி.எல்- 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபார வெற்றி

    • 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.
    • அதிகபட்சமாக ஃபெராரியோ 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.

    சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுதின.

    டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் கிஷோர், ராதாகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய சாய் கிஷோர் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ராதாகிருஷ்ணன் 45 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய விஜய் சங்கருடன், அனிருத் அதிரடியை தொடர்ந்தனர். அனிருத் 25 பந்தில் 51 ரன் குவித்து வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்களை குவித்தது. விஜய சங்கர் 31 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதைதொடர்ந்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    இதில், முதலில் கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ராஜ்குமார் பேட்டிங் செய்தனர். கங்கா ஸ்ரீதர் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக விளையாட வந்த மோனிஷ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து பெராரியோ பேட்டிங் செய்தார்.

    இதில், ராஜ்குமார் மற்றும் ஃபெராரியோ ஜோடி 22 ரன்கள் மற்றும் 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஆர்.ராஜ்குமார் ஒரு ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

    இதில், 17வது ஓவரில் திருச்சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தனர். 18 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்தோனி தாஸ் மற்றும் ஜஃபர் ஜமால் களத்தில் இருந்தனர்.

    இதில் அந்தோனி தாஸ் 25 ரன்களிலும், ஜஃபர் ஜமால் 30 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர், மணி பாரதி பூஜ்ஜியம் ரன்களும், பிரான்சிஸ் ராக்கின்ஸ் ஒரு ரன்னும், சிலம்பரசன் 6 ரன்களும் எடுத்தனர். இதில், பிரான்சிஸ் ராக்கின்ஸ் மற்றும் சிலம்பரசன் அவுட்டாகாமால் இருந்தனர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து திருச்சி அணி தோல்வியடைந்தது.

    இதன்மூலம், 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    Next Story
    ×