search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Written Exam"

    • எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.
    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன.

    685 பணி இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நேற்றுடன் அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தது.

    தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆன்லைன் வழியாக 10,121 பேரும், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் 1600 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. இதையடுத்து எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியான டிரைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வை 10 மையங்களில் நடத்த திட்டமிட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    • இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    சேலம்:

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு சேலத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோன்று யூ.பி.எஸ்.சி உதவித்தொகை முதல் நிலை தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த தேர்வில் பங்கேற்க 2175 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓ.எம்.ஆர். வினாத்தாள் மூலம் நடைபெறும் இந்த 2 தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி தேர்வு அறைக்குள் வரவேண்டும். தேர்வு எழுதும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கி ணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்களுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
    • தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்க ளுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.

    தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல் வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் காகாபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் ஆகிய 2 நாட்கள் தேர்வு நடக்கிறது. 4 பிரிவு களாக (ஷிப்ட்) இத்தேர்வு நடைபெறும்.

    இந்த கல்லூரி வளா கத்தில் கேண்டீன் வசதி, ஜெராக்ஸ் எடுக்கும் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தேர்வர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் உட்கார்ந்து இருப்பதற்கும் இடம் வசதி விசாலமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் வருவதற்கும் எளிதாக உள்ளது.

    இந்த மையத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் எனப்படும் மின் அனுமதி சான்றுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் அனுமதி சான்றிதழ்களும், உரிய அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுதிக்கப்படுவார்கள்.

    இந்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜெயிலர் பணிக்கான இணையவழித் தேர்வு நாளை (திங்கட்கிழமை) காலை மற்றும் மாலையில் நடக்கிறது.
    • நெல்லை மாவட்டத்தில் 1,500 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக நெல்லை அருகே உள்ள மேலதிடியூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜெயிலர் பணிக்கான இணையவழித் தேர்வு நாளை (திங்கட்கிழமை) காலை மற்றும் மாலையில் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 1,500 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக நெல்லை அருகே உள்ள மேலதிடியூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வின் போது தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும், கூடுதலாக பஸ்கள் இயக்கவும், போதிய போலீஸ் பாதுகாப்பு போடவும், மருத்துவ வசதி செய்து கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    • மதுரை-12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு; 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    • தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.



    தேர்வர்களின் செல்போன்களை ேபாலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.(இடம்: அமெரிக்கன் கல்லூரி).

     .............

    மதுரை

    தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது.

    இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி விண்ணப்ப தாரர்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையத்துக்குள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கும் 12 மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமங்கலம் வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணை ப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேனி மாவட்டத்தில் 27-ந் ே ததி நடைபெறுகிறது.
    • மாவட்டத்தில் 1320 பெண்கள் உள்பட மொத்தம் 10760 பேர் விண்ணப்பித்து ள்ளனர்.

    தேனி:

    தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் தீயணை ப்பாளர் பணிகளுக்கான தேர்வு தேனி மாவட்டத்தில் 27-ந் ே ததி நடைபெறுகிறது. தேனி கம்மவர் சங்கம் மெட்ரிக் பள்ளி, கொடுவி லார்பட்டி என்ஜினீயரிங் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 9 இடங்களில் அமைக்க ப்பட்டுள்ள 13 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

    மாவட்டத்தில் 1320 பெண்கள் உள்பட மொத்தம் 10760 பேர் விண்ணப்பித்து ள்ளனர். தேர்வுக்கு விண்ண ப்பித்து அழைப்பாணை பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் 80 கேள்விகளும், முதன்மை எழுத்துத் தேர்வில் 70 வினாக்கள் என மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.

    தேர்வு மையங்களில் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது மற்றும் குறித்த நேரத்தில் வருவதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (25 -ந்தேதி) மற்றும் 26- ந்தேதி 2 நாட்கள் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 9278 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . நாளை 25- ந் தேதி காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும். 25.06.2022 ஆம் தேதி மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது .

    மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 02.00 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும் . இந்த நிலையில் தேர்வு எழுதும் மையங்களில் வரிசை எண் எழுதும் பணி, தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், மேஜைகள் வரிசைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×