search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ் டிரைவர் பணிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்- 10 இடங்களில் அடுத்த மாதம் எழுத்து தேர்வு நடக்கிறது
    X

    அரசு பஸ் டிரைவர் பணிக்கு 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்- 10 இடங்களில் அடுத்த மாதம் எழுத்து தேர்வு நடக்கிறது

    • எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.
    • அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன.

    685 பணி இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க நேற்றுடன் அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தது.

    தமிழகம் முழுவதும் அரசு பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். ஆன்லைன் வழியாக 10,121 பேரும், வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் மூலம் 1600 பேரும் விண்ணப்பித்து இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. இதையடுத்து எழுத்துத் தேர்வு நடத்தி தகுதியான டிரைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வை 10 மையங்களில் நடத்த திட்டமிட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு தேர்வர்களுக்கு வினியோகிக்கப்படும்.

    அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×