search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 2 நாள் நடக்கிறது சப்-இன்ஸ்பெக்டர்  பணிக்கான எழுத்து தேர்வு
    X

    மேஜைகள் வரிசைப்படுத்தும் பணியில் போலீசார்  ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 2 நாள் நடக்கிறது சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

    • கடலூர் மாவட்டத்தில் 2 நாள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி சார்பு ஆய்வாளர் ( தாலுக்கா மற்றும் ஆயுதப்படை ) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை (25 -ந்தேதி) மற்றும் 26- ந்தேதி 2 நாட்கள் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 9278 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் . நாளை 25- ந் தேதி காலை பொது எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது . மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும். 25.06.2022 ஆம் தேதி மதியம் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 03.30 மணிமுதல் 05.10 மணிவரை நடைபெற உள்ளது .

    மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 02.00 மணிக்குள் இருக்க வேண்டும் . 26.06.2022 ஆம் தேதி கடலூர் , மையத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள துறைரீதியான தேர்வில் 213 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 08.30 மணிக்குள் இருக்க வேண்டும் . இந்த நிலையில் தேர்வு எழுதும் மையங்களில் வரிசை எண் எழுதும் பணி, தேர்வு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள், மேஜைகள் வரிசைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×