என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஏற்காட்டில் மருத்துவ காப்பீடு அட்டை புதுப்பித்தல் முகாம்
- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- முகாமை சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை தலைமை மருத்துவர் மணி தொடங்கி வைத்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலைஞர் நூற் றாண்டு விழாவையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமை சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை தலைமை மருத்துவர் மணி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், ஆத்தூர் சுகாதார மாவட்டம் துணை இயக்கு னர் டாக்டர் ஜெமினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிறப்பு விருந்தி னராக ஏற்காடு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதில் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப் பட்டு, அவர்களுக்கு மார்பகம், கர்ப்பபை பரி சோதனை செய்யப்பட்டது.
காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவர்கள், எலும்பு, கண், மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்கள், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களும் இணைந்து இந்த பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனைத்து வழிமுறைகளும், பரிந்துரை களும் வழங்கப்பட்டது.
மேலும், இதுவரை காப்பீட்டு அட்டை பெறாத வர்கள், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமும் நடைபெற்றது. இந்த முகாமில் ஏற்காட்டில் 9 பஞ்சாயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.






