என் மலர்
சேலம்
- கோவை கிங்ஸ் அணி 5 வெற்றி 1 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது.
- சேலம் அணி 1 வெற்றி 3 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
டி.என்.பி.எல். போட்டியில் நேற்றுடன் 18 ஆட்டங்கள் முடிவடைந்தது. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் தலா 8 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.
திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை தலா 4 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 6-வது இடங்களில் உள்ளன. சேலம் அணி 2 புள்ளிகளுடன் இருக்கிறது. திருச்சி அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.
இன்று இவு 7.15 மணிக்கு 19-வது லீக் ஆட்டம் நடக்கிறது. இது ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை கிங்ஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.
அந்த அணி திருப்பூர் தமிழன்ஸ் (70 ரன்), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 விக்கெட்), பால்சி திருச்சி (6 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (59 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.
சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி திருச்சியை மட்டும் 5 விக்கெட்டில் வென்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (52 ரன்), நெல்லை ராயல் கிங்ஸ் (5 விக்கெட்) மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.
- மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது.
- மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மதுரை அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்ரீ அபிஷேக் மட்டும் இரட்டை இலக்கை ரன்னை (21) எட்டினார்.
நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதேபோல் சரவணன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக பாபா அப்பரஜித் 32 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, ஜகதீசன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். சந்தோஷ் ஷிவ் 28 ரன்களும், சஞ்சய் யாதவ் 9 ரன்களும், சசிதேவ் 6 ரன்களும், பிரதோஷ் பவுல் 3 ரன்களும் எடுத்தனர்.
18-வது ஓவரில் பாபா அப்பரஜித் மற்றும் ஹரிஷ் குமார் களத்தில் இருந்தனர். இருவரும் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடினர். இதில், அப்பரஜித் 33 ரன்களுடனும், 6 ரன்களிலும் அவுட்டாகினர்.
தொடர்ந்து, ஹரிஷ் குமார் 3 ரன்களிலும், மதன் குமார் மற்றும் ராமலிங்கம் ரோஹித் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக விளையாடிய ராஹில் ஷா 2 ரன்களும், சிலம்பரசன் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 129 ரன்களை எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.
- அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மதுரை அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. ஸ்ரீ அபிஷேக் மட்டும் இரட்டை இலக்கை ரன்னை (21) எட்டினார்.
நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதேபோல் சரவணன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்து சேர்த்தார். இதனால் மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
- மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்றுள்ளது.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:
சேப்பாக்: பாபா அபராஜித் (கேப்டன்), ஹரிஷ் குமார், ஜெகதீசன், மதன் குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், ராகுல் ஷா, ரோகித், சஞ்சய் யாதவ், ராக்கி, சசிதேவ், சிலம்பரசன்.
மதுரை: ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஆதித்யா, கவுசிக், ஸ்வப்னில் சிங், வாஷிங்டன் சுந்தர், லோகேஷ்வர், ஸ்ரீ அபிஷேக், தீபன் லிங்கேஷ், சரவணன், குர்ஜாப்னீத் சிங், அஜய் கிருஷ்ணன்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அடுத்து 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கி உள்ளது.
மறுமுனையில் மதுரை பாந்தர்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டிகளில் வென்று, 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
- சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது.
- யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது. துணை மேயர் சாரதா தேவி, மண்டல தலைவர்கள் கலை அமுதன், உமாராணி, தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கே.சி.செல்வராஜ் பேசுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் அனுமதி இல்லாமல் ஏராள மான கடைகள் வைக்கப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைமேடையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக வைக்கப்பட் டுள்ள கடைகளை அப்புறப்ப டுத்த வேண்டும். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் குடி தண்ணீர் மூலம் பெறும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
சிவதாபுரம் ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள் செல்கி றது. இதனை தடுக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அனுமதிகள் முறையாக நடைபெறுவதில்லை. மாநகராட்சி திருமண மண்ட பங்களில் வருமானங்களை முறைப்படுத்த வேண்டும் என்றார்.
அ.தி.மு.க கவுன்சிலர் சசிகலா பேசுகையில், பள்ளப்பட்டி ஏரி முறையாக பணி நிறைவு பெறவில்லை, ஆனால் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் குடிமகன்களுக்கு பாராக செயல்படுகிறது. ஏரியின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றபடவில்லை என்றார்.
தி.மு.க கவுன்சிலர் சங்கீதா பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் சிலையை அண்ணா பூங்காவில் அமைத்ததற்கும், எனது வார்டில் மருத்துவ முகாம் நடத்தியதற்கும், அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கவுன்சிலர் கோபால் பேசுகையில், அம்பாள் ஏரியை சீரமைத்து சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அ.தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், குடிநீர் மஞ்சள் நிறத்தில் மிகவும் மோசமான நிலையில் வழங்கப்படுகிறது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.
கொசு மருந்து முறையாக அடிக்கவில்லை. குப்பைகள் தேங்கியுள்ளது. குடி தண்ணீரில் 2 நாட்களில் புழுக்கள் உருவாகிறது. இதனால் குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதில் முறையான அளவு நோய் தடுப்பு பவுடரை கலக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர்கள் ஈசன் இளங்கோ, சாந்தமூர்த்தி, மூர்த்தி, சரவணன் ஆகியோர் அதிகம் நேரம் பேசக்கூடாது என்று அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது யாதவமூர்த்தி என்னை பேசக்கூடாது என்று மேயர் மட்டும் தான் சொல்ல வேண்டும், வேறு யாரும் சொல்லக்கூடாது, இந்த மாமன்றத்தில் ஒரு மேயரா, இல்லை 9 மேயரா என்று கேள்வி எழுப்பினார்.
இதை அடுத்து பேச வாய்ப்பளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்கிறோம். இங்கு ஜனநாயகம் இல்லை என்று கூறியபடி யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் தங்களது வார்டில் செய்யப்பட்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக பேசினர். அவை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், குமாரவேல், தமிழரசன், சீனிவாசன், சாந்தமூர்த்தி, ஜெயக்குமார், கோபால், தனலட்சுமி சதீஷ்குமார், கனிமொழி கணேசன், முருகன், பி.எல்.பழனிச்சாமி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆணை வரதன், சசிகலா, ஈசன் இளங்கோ, மோகனப்பிரியா, சந்திரா, ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் சகிரா என்பவர் நேற்று மாலை, வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திரு ந்த ரூ.91 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கடைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்த சி.சி.டி.வி. காமிராக்க ளையும் கொள்ளையர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ள னர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மெய்யனூர் ரோட்டில் உள்ள 5 தியேட்டர் அருகே ஆயுர்வே திக் ஸ்பா சென்டர் செயல் பட்டு வருகிறது.
- இந்த ஸ்பா சென்டரில் இளம் பெண் களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் மெய்யனூர் ரோட்டில் உள்ள 5 தியேட்டர் அருகே ஆயுர்வே திக் ஸ்பா சென்டர் செயல் பட்டு வருகிறது. இந்த ஸ்பா சென்டரில் இளம் பெண் களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்த சென்டரில் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பள்ளிக்காடு பகு தியை சேர்ந்த சுராஜ் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்து 4 இளம்பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்ப டைத்தனர் கைது செய்யப் பட்ட சுராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன.
- மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித் துறையும்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான பல் பாது காப்புக்கான புன்னகை திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்படும் வாய் வழித் தொற்று நோய்களைத் தடுக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்க ளின் பற்களை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை குறித்து அறிவு றுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப் பட உள்ளது.
உத்தரவு
இந்த திட்டம், வரும் மாதங்களில் மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி களில் ஏராளமானமாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த திட்டத் தின் மூலம் மாணவ, மாண வியருக்கு பல் பரிசோதனை களை செய்து அதன்மூலம் அவர்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொது வான நோய்களான பல் சொத்தை, ஈறு போன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணப்படும்.
மேலும் வாய் வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், தீர்வு காண்பதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
- மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
- மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6000 ரொக்கம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலியை மத்திய வேளாண் மற்றும் விவசா யிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ெடல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி யில், நாடு முழு வதிலு மிருந்து ஆயி ரக்கணக்கான விவசாயி கள், மத்திய, மாநில அரசு அதி காரிகள், பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் வேளாண் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி வாயி லாக கலந்து கொண்டனர்.
இந்த செயலி மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் அல்லது கைரேகை யில்லா மல், மின்னணு வாயிலான வாடிக்கையா ளர் விவ ரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற விவசாயிகளுக்கும் உதவ முடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கை யாளர் விவ ரங்களை சரிபார்க்க முடியும்.
இது குறித்து பேசிய மத்திய மந்திரி தோமர், பிரதமரின் வருவாய் ஆத ரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்படு கிறது. இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு நிதி கிடைக்கிறது.
இந்த தொழில்நுட்பத் தின் மூலம் பெரும் எண்ணிக்கை யிலான விவசாயிகளுக்கு தற்போது உதவ முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
- “படிக்க வந்தோம் “ என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொருளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார்.
- இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது.
சேலம்:
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் "படிக்க வந்தோம் " என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொரு ளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது சாக்லேட்டுகள் கொடுத்து மகிழ்ந்த காலம் மாறி தற்போது மது விருந்து அளிக்கும் கலாச்சாரம் மாணவ சமுதாயத்திடம் அதிகரித்துள்ளது.
இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர் சமுதா யம் படிப்பில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற்று பிற்கால வாழ்வை பொற்கா லம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சேலம் மாவட் டத்தில் இதுவரை 2 ஆயிரம் கள்ள சாராய வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில், டாஸ்மாக் பார் மற்றும் தாபா ஹோட்டல்களை தீவிரமாக கண்கா ணிக்கவும், வாகன தணிக் கையை முழு மையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் போதைப்பொ ருள் விழிப்புணர்வு குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 32 கல்லூரிகள் மற்றும் 67 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
- அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது.
சேலம்:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.
குறைந்த அளவில் பயிரிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது பகலில் வெயில், மாலை, இரவில் மழையால் தக்காளி பழங்கள் அழுகி வருகிறது.
அதே நேரம் ஆந்திராவில் இருந்து தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்து கொண்டிருந்த தக்காளி வரத்தும் சரிந்துள்ளது. இதனால் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து பாதியாக சரிந்துள்ளது. இதனால் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலம் உழவர் சந்தைகளில் 50 முதல் 55 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் நாட்டு தக்காளி முதல் ரகம் 60 ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
55 ரூபாய்க்கு விற்ற 2-ம் ரகம், 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி 700 ரூபாய் வரை அதிகரித்து, 2,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிலோவிற்க்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் தக்காளியின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
சேலம் உழவர் சந்தையில் மற்ற காய்கறிகள் விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-
உருளைக்கிழங்கு முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.30, சின்னவெங்காயம் முதல் தரம் ரூ.60, 2-ம் தரம் ரூ.55, பெரியவெங்காயம் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, பச்சை மிளகாய் முதல் தரம் ரூ.78, 2-ம் தரம் ரூ.76, கத்தரிக்காய் முதல் தரம் ரூ.44, 2-ம் தரம் ரூ.40, வெண்டைக்காய் முதல் தரம் ரூ.36, 2-ம் தரம் ரூ.34, முருங்கைக்காய் முதல் தரம் ரூ.40, 2-ம் தரம் ரூ.20, பீர்க்கங்காய் முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.46, சுரைக்காய் முதல் தரம் ரூ.25, 2-ம் தரம் ரூ.22, முள்ளங்கி முதல் தரம் ரூ.35, 2-ம் தரம் ரூ.32, சேனை கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.30, கருணைக்கிழங்கு முதல் தரம் ரூ.50, 2-ம் தரம் ரூ.45.
- சேலம் மாவட்டம், ஏற்காட்டில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
- இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணி கள் குடும்பம் குடும்ப மாக ஏற்காட்டிற்கு வந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று காலை முதலே, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணி கள் குடும்பம் குடும்ப மாக ஏற்காட்டிற்கு வந்தனர்.
வெயில் தாக்கம் குறை வாகவும், இதமான சீதோஷ்ண நிலையும் காணப்பட்டதால், அண்ணா பூங்காவில் பல்வேறு மலர்களை ரசித்தும், விளை யாட்டு சாதனங்களில் குழந்தைகளுடன் விளையா டியும் பொழுதை போக்கி மகிழ்ந்தனர். நேற்று லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், சேர்வராயன் கோவில், பக்கோடாபா யின்ட் உள்ளிட்ட இடங்களி லும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏரியில் குடும்பத்தி னருடன் உற்சாகமாக படகு சவாரி சென்றும் மகிழ்ந்த னர். சுற்றுலா பயணிகள் வருகையால், கடைகளில் விற்பனை அதிகரித்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.






