search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    மாநகராட்சி கூட்டம் நடந்தபோது எடுத்தப்படம்

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது.
    • யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் பாலசந்தர் முன்னிலையில் நடந்தது. துணை மேயர் சாரதா தேவி, மண்டல தலைவர்கள் கலை அமுதன், உமாராணி, தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கே.சி.செல்வராஜ் பேசுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் அனுமதி இல்லாமல் ஏராள மான கடைகள் வைக்கப் பட்டுள்ளன. இதனால் பயணிகள் நடைமேடையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடுதலாக வைக்கப்பட் டுள்ள கடைகளை அப்புறப்ப டுத்த வேண்டும். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தா விட்டால் குடி தண்ணீர் மூலம் பெறும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

    சிவதாபுரம் ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள் செல்கி றது. இதனை தடுக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அனுமதிகள் முறையாக நடைபெறுவதில்லை. மாநகராட்சி திருமண மண்ட பங்களில் வருமானங்களை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் சசிகலா பேசுகையில், பள்ளப்பட்டி ஏரி முறையாக பணி நிறைவு பெறவில்லை, ஆனால் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் குடிமகன்களுக்கு பாராக செயல்படுகிறது. ஏரியின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றபடவில்லை என்றார்.

    தி.மு.க கவுன்சிலர் சங்கீதா பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் சிலையை அண்ணா பூங்காவில் அமைத்ததற்கும், எனது வார்டில் மருத்துவ முகாம் நடத்தியதற்கும், அதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கவுன்சிலர் கோபால் பேசுகையில், அம்பாள் ஏரியை சீரமைத்து சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அ.தி.மு.க எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், குடிநீர் மஞ்சள் நிறத்தில் மிகவும் மோசமான நிலையில் வழங்கப்படுகிறது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    கொசு மருந்து முறையாக அடிக்கவில்லை. குப்பைகள் தேங்கியுள்ளது. குடி தண்ணீரில் 2 நாட்களில் புழுக்கள் உருவாகிறது. இதனால் குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அதில் முறையான அளவு நோய் தடுப்பு பவுடரை கலக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர் என்றார்.

    அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர்கள் ஈசன் இளங்கோ, சாந்தமூர்த்தி, மூர்த்தி, சரவணன் ஆகியோர் அதிகம் நேரம் பேசக்கூடாது என்று அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது யாதவமூர்த்தி என்னை பேசக்கூடாது என்று மேயர் மட்டும் தான் சொல்ல வேண்டும், வேறு யாரும் சொல்லக்கூடாது, இந்த மாமன்றத்தில் ஒரு மேயரா, இல்லை 9 மேயரா என்று கேள்வி எழுப்பினார்.

    இதை அடுத்து பேச வாய்ப்பளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்கிறோம். இங்கு ஜனநாயகம் இல்லை என்று கூறியபடி யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் தங்களது வார்டில் செய்யப்பட்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக பேசினர். அவை அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.

    மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரவணன், குமாரவேல், தமிழரசன், சீனிவாசன், சாந்தமூர்த்தி, ஜெயக்குமார், கோபால், தனலட்சுமி சதீஷ்குமார், கனிமொழி கணேசன், முருகன், பி.எல்.பழனிச்சாமி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆணை வரதன், சசிகலா, ஈசன் இளங்கோ, மோகனப்பிரியா, சந்திரா, ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×