என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் பட்டர்பிளே பாலத்தில் வேளாண் உதவி அதிகாரி கார் மீது லாரி மோதல்
    X

    விபத்துக்குள்ளான வாகனங்களை படத்தில் காணலாம்.

    சேலம் பட்டர்பிளே பாலத்தில் வேளாண் உதவி அதிகாரி கார் மீது லாரி மோதல்

    • கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரியை முந்திக்கொண்டு முன்னே சென்ற வேளாண்மைதுறை உதவி கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் என்பவரது கார் மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் கார் பலத்த சேதம் அடைந்த நிலையில் அதில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர்.

    மேம்பாலத்தின் மீது ஏற்பட்ட விபத்தின் காரணமாக சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×