மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டி ருந்தார்.மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.
கைது செய்யபட்ட கவுதம், சீனிவாசன்.
கைது செய்யபட்ட கவுதம், சீனிவாசன்.
Published on

மேட்டூர்:

மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.

அதை தொடர்ந்து இரு வரையும் மேட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் ஒருவர் மேட்டூர் கீழ் குள்ள வீரன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (வயது 30). மற்றொ ருவர் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தின் மகன் சீனிவாசன் (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் இருவரையும் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com