search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail Extension"

    • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்ம புரி, சேலம், கரூர், திருச்சி வழியே ராமேஸ்வரத்துக்கு சனிகிழமை மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தர்ம புரி, சேலம், கரூர், திருச்சி வழியே ராமேஸ்வரத்துக்கு சனிகிழமை மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    மறு மார்க்கத்தில் ஞாயிறுதோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் வருகிற 1-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    ஹூப்ளியில் சனி காலை 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேஸ்வ ரத்தை வந்தடையும். அங்கு இரவு 9 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளியை அடையும்.

    ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தென்னக ரெயில்வே மூலம் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தமிழ கத்தில் தஞ்சாவூர் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • கோடை காலத்தில் பயணிக ளின் வசதிக்காக இந்த ரெயில் மே மாதம் முழு வதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தென்னக ரெயில்வே சேலம் கோட்டம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்னக ரெயில்வே மூலம் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து, தமிழ கத்தில் தஞ்சாவூர் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கோடை காலத்தில் பயணிக ளின் வசதிக்காக இந்த ரெயில் மே மாதம் முழு வதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வண்டி எண் 07325 கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து வாரம்தோறும் திங்கட்கி ழமை கிளம்பி தஞ்சாவூர் செல்கிறது. இந்த வண்டி வருகிற மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கத்தில் வண்டி எண் 07326 தஞ்சாவூரில் இருந்து வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கிளம்பி ஹூப்ளி வரை செல்கிறது. இந்த வண்டி வருகிற

    30-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

    மே மாதம் முழுவதும் வாரம் தோறும் திங்கட்கி ழமை இரவு 8.25 மணிக்கு ஹூப்ளியில் இருந்து கிளம்பும் இந்த ரெயில், 9.45 மணிக்கு ஹவேரி ரெயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 9.47-க்கு புறப்பட்டு 10.08 மணிக்கு ராணிபென்னூர், 10.34 மணிக்கு ஹரிஹார், 10.51 மணிக்கு தாவன்கெரே, நள்ளிரவு 12.25 மணிக்கு பிரூர், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு அரிசிகெரோ, 2.35-க்கு டும்கூர், 3.25 மணிக்கு சிக்பன்வார், 4.50 மணிக்கு பெங்களூர் எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையம், 5.08 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம், 5.53 மணிக்கு பங்காரப்பேட்டை வந்து 9.25-க்கு சேலத்துக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து 9.30-க்கு கிளம்பி 10.43 மணிக்கு கரூர், 12.30 மணிக்கு திருச்சி கோட்டை, 12.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன், 1.30-க்கு பூதலூர் வந்தடையும். மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து, மாலை 7.40 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளிக்கு கிளம்பும். இரவு 7.57 மணிக்கு பூதலூர், 8.40-க்கு திருச்சி ஜங்சன், 9.19 மணிக்கு திருச்சி கோட்டை ரெயில் நிலையம், 10.25 மணிக்கு கரூர், 11.45-க்கு சேலம் வந்தடையும்.

    இரவு 11.50 மணிக்கு சேலத்தில் இருந்து பெங்க ளூர் வழியாக அடுத்த நாள் புதன்கிழமை பகல் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம் ஹூப்ளி சென்றடையும்.

    • ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயில் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அந்த ரெயிலின் புறப்படும் நேரம், இயக்கப்படும் நாட்கள், செல்லும் வழி ஆகியவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரத்தில் இருந்து ஆகஸ்ட் 26-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் காலை 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் செல்லும். மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை புதன் கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு ராமேசுவரம் செல்லும்.

    இந்த ரெயில்கள் ராமநாதபுரம், மானாம துரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    ×