search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் 27.2 மில்லிமீட்டர் பதிவு
    X

    சேலம் டவுன் ரெயில் நிலைய சாலை மழையினால் சேறும் சகதியுமாக மாறியுள்ள காட்சி.

    ஏற்காட்டில் 27.2 மில்லிமீட்டர் பதிவு

    • சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மழை பெய்தும் வருகிறது. நேற்று நள்ளிரவும், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆணைமடுவு, கடையாம்பட்டி, தலைவாசல், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் பொன்னம்மாபேட்டை, டவுன், கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    அம்மாபேட்டை மிலிட்டரி சாலை, காந்தி மைதானம் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு-27.2, சேலம்-19.6, ஆணைமடுவு - 19, கடையாம்பட்டி- 18, தலைவாசல் - 17, ஓமலூர்-13.4, பெத்தநாயக்கன்பாளை யம்-9, மேட்டூர்-5.2 என மொத்தம் 128.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×