search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை பெற  விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
    X

    கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    • ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.

    சேலம்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in/ இணையதளம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டு மே மாதம் 31-ந்தேதி வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதில் சில மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காமல் விடுப் பட்டதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி வருகிற 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்

    பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப் பித்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×