என் மலர்
ராமநாதபுரம்
- வாரச்சந்தை ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறைவான அளவிலேயே வந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ரூ.20 கோடி செலவில் நவீனமாக கட்டப்பட உள்ள தால் பஸ்நிலை யத்தில் இருந்த கடைகள், கட்டிடங்கள், சந்தை கட்டிடங்கள் இடிக்கப்ட்டு பணிகள் மும்முர மாக நடந்து வரு கின்றன.
லெட்சுமி புரம் பகுதியில் காலரா கொட்டகை இடத் தில் வாரச்சந்தை நடத்த முடிவு எடுக்கபங ட்டது. அந்த இடத்திற்கு வியாபாரி கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கொரோ னா கால கட்டத்தில் மார்க்கெட் இயங்கிய பாரதி நகர் டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகில் வாரச்சந்தை இயங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல வியாபாரிகள் வாரச்சந்தை பகுதிக்கு தங்களின் பொருட் களுடன் விற்பனைக் காக வந்தனர். மாவட்ட நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து ஊராட்சி அலு வலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ரோட் டை ஆக்கிரமித்து இருபுறங்களி லும் ஏராள மானோர் கடை களை வைத்த னர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத் திற்கு இடையூறு இல்லாமல் வாரச்சந்தை நடத்த ஊரா ட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
ஆண், பெண் வியா பாரிகளுக்கு தேவையான கழிப் பிட வசதி, பொது மக்கள் வந்து செல்ல பஸ் போக்கு வரத்து வசதி செய்து கொடுத்தால் மக்கள் அதிகமாக இப் பகுதிக்கு வருவார்கள். தற்போது திடீர் இடமாற்றம் காரணமாக வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் குறை வான அளவிலேயே வந்தனர்.
- ஓரிவயல் கிராமத்தில் 116 பேருக்கு ரூ. 24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- இந்த முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஓரி வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந் தது. ஊராட்சி மன்ற தலை வர் மலர்மதி திருப்பதி வர வேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கி 116 பயனாளிகளுக்கு ரூ. 23.84 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கிராமப் பகுதிகளில் மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்த முகாம்கள் நடைபெறு கின்றன. முகாமில் பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் பகுதிகளில் நடக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இந்த முகாம்களில் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து பொது மக்கள் பயன்பெறலாம்.
இன்று நடந்த முகாமில் 114 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதி வாளர் முத்துக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெயஆனந்தன், கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ், கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சர வணன் மற்றும் அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.
- நவாஸ்கனி எம்.பி. குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
- திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பா லைக்குடி கிழக்கு ஜமாத் தலைவர் கலீல் ரகுமான் கூறுகையில், சமீபத்தில் எம்.பி.க்கு எதிராக சிலர் எதிர்க்கட்சி தூண்டுதலில் தவறான தகவல்களை அவதூறாக பரப்பி வருகின்றனர். அந்தச் செய்தி முற்றிலும் தவறானது.
ஏற்கனவே திருப்பாலைக்குடியில் அடிப்படை வசதி கோரி மக்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று கூறியபோது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அப்படி போராட்டம் ஏதும் செய்ய வேண்டாம். நான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் தேவையை நிறைவேற்றி தருகிறேன் என்று கூறி அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
ஆனால் சில விஷமிகள் எம்பிக்கு எதிராக சில தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருப்பாலைக்குடி மக்கள் நலனில் எம்.பி. அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முகமது பாருக் கூறுகையில், தற்போது எம்.பி. பேசியதாக ஒரு வீடியோ சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்த வீடியோ மூன்று மாதத்திற்கு முன்பாக வேறு ஒரு நிகழ்ச்சியில் வேறு விஷயத்திற்காக பேசியதை சில விஷமிகள் எடிட்டிங் செய்து அவதூறாக பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
திருப்பாலைக்குடி மக்களுக்கு எம்.பி. உரிய உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி கூறிய தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது.
- அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான திருநா வுக்கரசர் பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு பொறுப்புக்குழு உறுப்பினர் பாரனூர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி அரண்மனை கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரண்மனையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கிருஷ்ணன், பால கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் வாலாந்தரவை டாக்டர் மேகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் தமிழரசன், வீரபாண்டி, பொன்.பெரியார் பாண்டியன், திருப்புல்லாணி வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது யூசுப், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
- ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகம் நகா் கிளையில் டிரைவராக பணியாற்றி வருப வா் முருகேசன் (50). இவா் ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு செல்லும் டவுன் பஸ் ஓட்டி வந்த போது, சிலா் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனா். அவர் களை ஓட்டுநா், பஸ் உள்ளே செல்லும் படி அறிவுறுத்தி னாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் ராம நாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தேவிபட்டினம் போலீசார் இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இந்த நிலையில் இரண்டு பேரையும் குண்டா் சட்டத் தில் கைது செய்யக்கோரி நேற்று நகா் கிளை போக்குவரத்து ஊழியா்கள், 57 பஸ்களை இயக்காமல், கிளையின் நுழைவாயிலில் அமா்ந்து தா்ணாவில் ஈடு பட்டனா்.
இதைத்தொடா்ந்து, அங்கு வந்த போக்குவரத்துத் துறை அதிகாரி பத்மநாதன், ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் ஊழியர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து சித்தார் கோட்டை வழியாக அழகன்குளம் வழித்தடத்தில் செல்லும் டவுன் பஸ் அனைத்தும் தேர்போகி பஸ் நிறுத்தத்து டன் திருப்பி செல்லப் பட்டது, இதனால் பனைக்குளம், அழகன் குளம், ஆற்றாங்கரை மாணவ, மாணவிகளும் வியாபாரிகளும், பொது மக்களும் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து போக்கு வரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது, புதுவலசை கிராமத்தில் இருந்து முக்கிய நபர்களை அழைத்து ராம நாதபுரம் டி.எஸ்.பி தலைமை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்னர் அந்த பகுதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தார்.
- மின் இணைப்பு இல்லாததால் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருந்தனர்.
- உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.
இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக் கப்பட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அனைத்து வயர் களும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதி காரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின் றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம், கீழக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட திருஉத்தரகோசமங்கை பீடரில் நாளை (13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டினம்காத்தான், உச்சிப்புளி, பனைக்குளம், உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டினம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான் குளம், கழுகூரனி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர். எஸ். மடை, ஆதம் நகர், திருஉத்தரகோசமங்கை, களரி, வெள்ளா, வேளானூர், குளபதம், மோர்க் குளம், நல்லாங்குடி, எக்ககுடி, மேலச்சீத்தை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
- மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.
இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.
இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.
ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-
இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.
- ராமநாதபுரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
- பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரண மாக. கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல் அமைச்சர் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச மாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குறை தீர்க்கும் முகாமில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கோரிக்கை மனுக்களை பெற்றார்.
- ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் தலைமையில் நடந்தது. தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த ஜமாத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுகளை அளித்தனர். காங்கிரஸ் கட்சி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், தி.மு.க. மத்தியமண்டபம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், துணைச் செயலாளர் பவுசியா பானு, காங்கிரஸ் கட்சி சிறு பான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், துணைத் தலைவர் கணிப் கான், மகிலா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி.
திருவாடானை சட்ட மன்றத் தொகுதி மகிலா காங்கிரஸ் தலைவி ஜீனத்து நிஷா, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் அபு தாஹீர். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர் அலி நத்தர், சேது பாண்டி, நகர் தலைவர் கோபி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, சேதுபதி, ஆறுமுகம், இளைஞர் அணி நவாஸ், அல் அமீன், முகமது பயாஸ், தாஜுதீன், சந்தானம், சேகு சபியுல்லா, முருகேசன், அன்வர் அலி, முஜீப் ரகுமான், ரவி, பஞ்சாட்சரம், மண்டப ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 21-ந்தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் 13-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோவிலின் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் ரத வீதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
17-ந்தேதி அன்று ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- பரமக்குடி ஊழியர் வீட்டில் 210 பவுன் நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முத்து செல்லாபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது35). இவர் சென்னை யில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கா ளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் தான் பணியாற்றிய நிறுவனத்தில் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அந்த நிறுவனம் சார்பில் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அகஸ்டினின் நடவ டிக்கைகளை கண்காணித்து வந்தனர்.சில வாரங்களுக்கு முன்பு அவர் மதுரை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் நகை வாங்கியிருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பரமக்குடி காமராஜர் தெருவில் உள்ள அகஸ்டின் வீட்டிலும், மேல காவனூர் கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிலும் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
அப்போது 2 வீட்டிலும் மொத்தம் 210 பவுன் நகை, ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நகை, பணம் எப்படி வாங்கப்பட்டது என்ற ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அகஸ்டினின் உறவினர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ரூ. 5 கோடி மோசடி செய்து பரமக்குடி வாலிபர் நகைகளை வாங்கி குவித்த சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.






