என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேைவக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் கபடி போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை விரைவில் தனியார் இடத்தில் அமைக்கப்படும். கன்னிராஜபுரத்தில் காம ராஜர் சிலையும், கமுதி அருகே ராமசாமி பட்டியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூரில் முத்துராமலிங்கதேவர் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு ரூ.2800 கோடியை முதல்- அமைச்சர் ஒதுக்கி கொ டுத்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பார்த்திபனூர், சாயல்குடி யில் புறவழிச்சா லைகள் அமைய உள்ளன. முதுகு ளத்தூர் தொகுதி முன்னேறி வரும் தொகுதியாக மாறி வருகிறது.

    தற்போது முதுகுளத்தூர் தொகுதியில் 19 மெகா வாட் மின்சாரம் செலவாகிறது. சாலைகளில் கார்கள் நிரம்பி உள்ளன.

    பரமக்குடியிலும் இமானுவேல் சேகரன் சிலை அமைக்க முருகேசன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்ய வேண்டும். நான் முதுகுளத்தூர் தொகுதிக்கு மட்டும் அமைச்சர் இல்லை. தமிழ்நாடு முழுவதற்கும் அமைச்சர்.

    மாவடட தேவைகளை முதலமைச்சரிடம் கூறி பெற்றுத் தருகிறேன். நமது மாவட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராய் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஷாஜஹான், கவுன்சிலர் பால்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கோவிந்தராஜ், பூபதி மணி, ஆறுமுகவேல், குலாம் முகைதீன், மணலூர் ராமர், வடமலை கிருஷ்ணாபுரம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித்திருவிழா நடந்தது.
    • விருதுநகரில் நடைபெறும் கல்வித்திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாடார் மஹாஜன சங்கம் சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவி களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசளிப்பு விழா நடந்தது.

    இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி,உட்பட அலுவலர்க ளும்,அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் மூத்த பத்திரிக்கையாளர் குகன் தலைமை வகித்தார்.பட்டிமன்ற புகழ் அவனி மாடசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கினார்.

    அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் காமராஜரின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கை குறித்து விளக்கி பேசினர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் இன்று விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

    அவர்களுக்கு காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை விருதுநகரில் நடைபெறும் கல்வித்திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் 120 பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமை யை வெளிப்படுத்தினர்.அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் லயன் இளங்கோவன்,லயன் பாலகிருஷ்ணன்,லயன் சக்திவேல்,ரெட் கிராஸ் சங்க மாவட்ட தலைவர் அப்பா மெடிக்கல் டாக்டர் சுந்தரம்,என்.எம்.எஸ்.சேர்மத்தாய் வாசன் கல்லூரி தலைவர் மோகன், துணைத்தலைவர் ராமு, என்.எம்.எஸ். முன்னாள் துணைத் தலைவர்கள் பெரிய கருப்பன்,களரி ஜெயக்குமார், தட்சிணாமூர்த்தி, பரமக்குடி சரவணமுத்து, மயில் நேச மூர்த்தி, சாயல்குடி கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை மணிகண்டன், ஜெய முருகன், நாடார் மஹாஜன சங்க மகளிரணி நிர்வாகிகள் கீழக்கரை பாப்பா, பாண்டியூர் பரமேஸ்வரி, தேன்மொழி,ராமநாதபுரம் நகர் நாடார் உறவின் முறை தலைவர் வேலுச்சாமி, அன்னை சிவகாமி மகளிர் நற்பணி மன்றத்தலைவி ராஜேஸ்வரி,செயலாளர் கோவிந்தம்மாள், இளை ஞரணி நிர்வாகிகள் அரசடி வண்டல் ஜெகந்நாதன், கடம்பூர் தர்மா, தி.மு.க 20-வது வார்டு செயலாளர் மருதுபாண்டி,சேதுநகர் உதயமூர்த்தி, ரெட்டையூரணி ஆனந்த்,தாமரைக்குளம் சோமு,தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் நற்றமிழ் செல்வன்,நகர் மன்ற உறுப்பினர் குமார், கீழக்கரை சாந்தக்குமார் மற்றும் நாடார் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து 325 இடங்களில் முகாம் நடக்கிறது.
    • முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்ப டுத்துவது தொடர்பாக மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், ஆய்வு மேற்கொண்டு பேசிய தாவது:-

    முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ெதாடர்பாக மாவட்டத்தில் முதற் கட்டமாக 325 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. முகாம்கள் நடைபெறும் இடங்களில் தேவையான மின் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் இருக்கை வசதி போன்றவற்றை அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடை பெறும் பகுதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரேசன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப் படுவதை கண்காணித்தி டவும், ரேசன் கடை பணி யாளர்கள் தங்கள் கடை களுக்கு தேவையான விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங் களை தீர்த்திடவும் பகுதி வாரியாக நியமிக்கப் பட்டிருந்த பொறுப்பு அலு வலர்கள் செயல்பட வேண்டும்.

    மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் ஆலோ சனைக்கூட்டம் நடத்தி அவர்களுக்கு இத்திட்டத்தில் சேரக்கூடிய பயனாளி களின் தகுதிகள் மற்றும் பிற விளக்கங்களை தெரிவிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்கள் தேவை யான தன்னார்வ லர்கள் விவரங்கள் மற்றும் மகளிர் குழு ஒருங் கிணைப்பாளர்கள் குறித்த விவரப்பட்டியலை தயார் செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் சமப் பிக்க வேண்டும். காவல் துறையின் மூலம் முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி , ராமநாத புரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்கலாம்.
    • உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    கீழக்கரை

    பயிர்களுக்கு கிடைக்கும் நீர், ஊட்டச்சத்து, சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. ரசாயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் ரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன.களை கொல்லிகளை பயன்படுத்து வதன் மூலம் மண் மற்றும் நீரின் தன்மை பாதிக்கப்ப டுகிறது. அங்கக வேளாண் முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் பல்வேறு முறைகளில் களைச் செடிகளை நீக்க முடியும்.

    களை வித்துக்கள் உழவுமுறைக்கு தகுந்தாற்போல் பரவிக் கிடக்கும். பொதுவாக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்டத்தில் 5 செமீ ஆழம் வரை ஊடுருவி இருக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துக்கள் சீராக பரவி இருக்கும். களை வித்துக்களின் பரவுத் தன்மை வளர்ச்சி ஆகியவை உழவு முறையின் அடிப்படை யில் கட்டுப்படுத்தபடு கின்றன.

    சுத்தமான பயிர் வித்துக்களை உபயோகித்தல், புல் வெட்டுதல், மக்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல், வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முறைகளை பின்பற்றினால் களை செடிகளை நீக்க முடியும். பயிர் சுழற்சியில் மண்ணின் வளம் மேம்படுவது மட்டுமல்லாமல் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    சில மூடு பயிர்கள் சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள், தீவனப்பயிர்கள், முள்ளங்கி போன்றவை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக் கூடியவை. இவை நிலத்தை மூடுவதுபோல வளர்ந்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பயிர் வரிசைக்கு இடையில் நிலக்கடலை, தட்டைபயறு, கொள்ளு போன்றவற்றை ஊடுபயிராக வளர்த்தும் களைச் செடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    நிலப்போர்வை நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முளைப்பதை தடுக்க வல்லது. ஒளி ஊடுருவதைத் தடுப்பதால் களைச் செடிகள் கட்டுப்படுத்த படுகின்றன. வைக்கோல், புல், மரப்பட்டை, மக்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நில போர்வையாக பயன்படுத்த லாம். வைக்கோல், புல் விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மக்கக்கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்துார மரங்களின் இலை, பனை ஓலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அங்கக மூடாக்கு நிலப்போர்வை அமைத்து ஆண்டு முழுவதும் களைகள் பெருகாமல் கவனித்து கொள்ளலாம்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் மேற்பரப்பில் உள்ள களை விதைகளை அழிக்கமுடியும். இதில் பிளாஸ்டிக் விரிப்புகளை உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    பயிர் பாகங்களில் குறிப்பாக வேர்ப்பகுதியில் சுரக்கும் ஒருவித வேதி பொருள் களையை வளர விடாமல் தடுக்கிறது. உதாரணமாக சோளம், மக்காசோளம், வெள்ளரி, கடுகு, சூரியகாந்தி மற்றும் சோயாமொச்சை ஆகிய பயிர்களை களை தடுப்பு பயிராக பயன்படுத்தலாம். இவ்வாறு மேற்கொண்ட உத்திகளை பயன்படுத்தி அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடி ஓட்டப்பாலம் ரவுண்டாணாவில் இமானுவேல் சேகரனுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும்.
    • தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    தேவேந்திரர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் பரம்பை பாலா ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ஏழை, எளிய மக்களின் மீதான தீய ஆதிக்க சக்திகளின் நீதிக்கு புறம்பான வன்முறைகளையும் தீமைகளையும் எதிர்த்து தடுத்து நிறுத்தி அனைத்து தரப்பு மக்களின் நல்லிணக்கத்திற்காகவும் நல் வாழ்விற்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு வெண்கல முழு உருவ சிலையை பரமக்குடி ஓட்ட பாலம் புதிய ரவுண்டானா பகுதியில் நிறுவ வேண்டும். இமானுவேல் சேகரன் சிலையை அங்கு அமையச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    மேலும் இமானுவேல் சேகரன் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை எஸ.சி.பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் வைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்துள்ளோம்.

    அவர் எங்கள் மனுவை ஆய்வு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதிய ளித்துள்ளார். மாநில, மத்திய அரசு அலுவல கங்களில் இமானுவேல் சேகரன் படம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கோரிக்கையை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேட்டியின் போது தேவேந்திரர் பண்பாட்டுக் கழக செயலாளர் வழக்கறிஞர் புண்ணியமூர்த்தி, நடுவர் மன்ற அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக 35 வாகனங்களில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஊர்வலமாக வந்து தலைவர் பரம்பை பாலா தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    • 19-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி வரை விழா நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

    இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கொடியேற்ற பூஜைகளை உதயகுமார், சிவமணி உள்ளிட்ட குருக்கள் செய்தனர்.

    நேற்று இரவு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அம்பாள் தங்க பல்லக்கில் வீதி உலாவும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் வீதி உலாவும் நடைபெறுகிறது. 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 21-ந் தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியாக அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் 11-ம் திருநாளான 23-ந் தேதி தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு 7:30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக ராமநாதசாமி-பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    • நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • வேளாண் இயக்குநர் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கான ஒருநாள் முன்பருவ பயிற்சி நடந்தது. வேளாண்மை இயக்குநர் சரசுவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் பயிற்சி அளித்தார். விதைநேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெற்பயிரில் இளம் பருவத்தில் தாக்கக்கூடிய பூச்சிகள், வளரும் பருவம், இனப்பெருக்க பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவங்களில் பாதிக்கக்கூ டிய பூச்சிகளை வகைப்படுத்தி இவற்றால் ஏற்படக்கூடிய தாக்குதல் அறிகுறிகளும் இவற்றிற்கான ஒருங்கி ணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள், பல்வேறு பருவங்களில் தாக்கக்கூடிய நோய்களையும் வகைப் படுத்தப்பட்டு தாக்குதல் அறிகுறி மேலாண்மையில் முக்கியமாக நோய் எதிர்ப்புத்தன்மை உள்ள இரகங்களில் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையும், இவற்றின் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

    பயிற்சியில், 42 வேளாண் விரிவாக்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். வேளாண் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி சம்பந்தமாக விரிவாக்க பணி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை 88259 86445 என்ற எண்ணில் தொடர் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • சாலையில் கழிவு நீரை கொட்டிய 10 டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இதன் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை யிலும், நகராட்சி குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலை யோரங்களிலும் பட்டணம் காத்தான் மற்றும் சக்கரக் கோட்டை ஊராட்சி பகுதி வீடுகளில் இருந்து டிராக்டர் களில் எடுத்து வரப்படும் கழிவுநீரை அரசு புறம் போக்கு இடத்தில் அனுமதி யின்றி ஊற்றினர்.

    இது குறித்து பட்டணம் காத்தான் வி.ஏ.ஓ., ஜெயகாந் தன் புகாரில் பட்டிணம் காத்தான் இ.சி.ஆர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாரியத்திற்கு அருகேயுள்ள அரசு புறம் போக்கு காலி இடத்தின் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதி யில், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தும், ககாதார சீர் கேட்டை ஏற்படுத்தி, சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும், நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை ஊற்றி வருகின்றனர். 10 டிராக்டர்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வூதியருக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
    • இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தபால் அலுவலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மாநில அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1 -ந்தேதி முதல் அவர்களது வீட்டு வாசலில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் பெற்று சமர்ப்பிப்ப தற்கான சிறப்பு ஏற்பாடுகள் தலைமை மற்றும் துணை, கிளை அஞ்சலகங்களில் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்கு சேவை கட்டண மாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலை மையில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக இளையான் குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சிறப்பித் தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தன்னுள் இருக்கின்ற தனித் தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டு விட முடியும்.

    நீயா நானா என்று போட் டியிடு வதை விட நீயும் நானும் என வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம்.நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப் பொழுதும் துன்பத்தையே தரும்.

    ஒற்றுமையையும் ஒழுக் கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு அதன்படி நடந் தால் உங்களது கனவு நன வாகும் என்றார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவியும், ராமநாதபுரம் தடவியல் துறையின் சார்பு ஆய்வாளருமான வினோதா கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே தன்னம்பிக்கை விடா முயற்சி புகையிலை மற்றும் போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு செந்தில் குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை முதன்மை யர் செல்வ பெருமாள், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்து மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளித்த னர்.

    இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வ கணேசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர் களும் பெற்றோர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடு களையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர் கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×