என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலா ளர் பாலாகுமார் முன்னிலை யில் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடிக்கம்பங்களில் புதிய கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் மருது பாண்டியனை சந்தித்து இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பனைக்குளம் நூருல் அமீன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரிப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் கனகு மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.
- 24-ந்தேதி அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
- தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் பவனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் 481-வது பெருவிழாவானது நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை 6 மணி அளவில் சந்தியாகப்பரின் திருஉருவம் பதித்த கொடியை பரமக்குடி வட்டார அதிபர் திரவியம் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் அமல்ராஜ், ராமேசுவரம் நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சியாமுதீன், மைதீன் ராஜா, இந்து சமுதாய நிர்வாகிகள் நாகேந்திரன், முருகேசன், வல்லவ கணேசன் மற்றும் அருட் சகோதரிகள் உள்ளிட்ட மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு திருவிழாவின் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். பின்னர் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.
தங்கச்சிமடம் வேர்க்காடு சந்தியாகப்பர் ஆலய கொடியேற்றம் மற்றும் தேர் பவனி நிகழ்ச்சியில் மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடத்தினர்.
- இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்த–லின்படி தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை வலியு–றுத்தி கேணிக்கரையில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துக்கூரி தலைமையில் மதுபாட்டில் உடைப்பு போராட்டம் நடை–பெற்றது.
இப்போராட்டத்தில் நகரச் செயலாளர் சக்தி–வேல், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சேகர், ராம–நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முரளி, மண்டபம் ஒன்றிய செயலா–ளர் சுடர் மற்றும் அக்கட்சி–யினர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் இறுதியில் பங்கேற்ற அனை–வ–ரையும் காவல்துறை–யினர் கைது செய்தனர்.
- சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா நடந்தது.
- தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நயினார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் சாரண சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத் திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார்.
மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசே கர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருகிணைப் பாளர் செல்வராஜ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக் கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறி னர்.
உதயகுடி பள்ளி பட்ட தாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறி னார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.
அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
- அரசு பஸ்களில் டிக்கட் பரிசோதகர்கள் பற்றாக்குறையாகினர்.
- அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம், காரைக்குடி மண்டலத்தில் 11 கிளைகள் மூலமாக 220 டவுன் பஸ் களையும், 500-க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்களையும் இயக்குகிறது. இதில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட டிரை வர்கள், கண்டக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலை யில் அரசு பஸ்சில் பரிசோ தகர் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வரு கிறது. இதை சாதகமாக்கும் நேரம் கண்காணிப்பாளர் சிலர் தனியார் பஸ்களுக்கு தாரை வார்த்து கொடுப்ப தால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அரசு பஸ்கள் நிர்ணயிக் கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுகிறதா, பயணி களை ஏற்றி இறக்குகிறார் களா, பஸ்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று டிக்கட் பரிசோதகர்கள் ஆய்வு செய்வார்கள். தற் போது நிலவும் பற்றாகுறை யால் பஸ்களில் முறையான ஆய்வுகள் நடப்பதில்லை. சரக்குகள் மூலமாக கிடைக்க வேண்டிய முறையான வருவாயும் கிடைப்பதில்லை.
இது குறித்து அரசு டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கூறியதாவது:-
காரைக்குடி மண்டலத் தில் 72 டிக்கெட் பரிசோத கர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது 38 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் பஸ்களை கண்காணிக்க முடிவ தில்லை.
காரைக்குடி மண்டலத்தில். இதில் மேலும் சிலர் ஓய்வு பெற உள்ளனர். இதனால் காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதிய பரிசோதகர்கள் இல்லாததால் பஸ்களில் ஓசிப்பயணம் அதிகரித் துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர்கள் 20 பஸ்கள் வரை கண் காணிக்க வேண்டும் என்பதால் பெயரளவிலேயே பரிசோதனை நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.
ராமநாதபுரம் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத் திற்கு புறப்படுவது கிடை யாது. நேரம் கண்காணிப் பாளர் ஆசியுடன் பஸ் இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து புறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காரைக்குடி மண்டலத்தில் டிக்கட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பஸ்களில் போதிய கண்காணிப்பு இல்லாததால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என் பது மறுக்க முடியாத உண்மை.
காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.
சாயல்குடி
சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார் பில் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி 15-ம் ஆண்டு தொ டக்க விழாவில் 15 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார் பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலா ளர் பாஞ்சுபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் காஜா முஹைதீன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தொடங்கி வைத்து பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முஹம்மது முஸ்த பா, விமன் இந்தியா மூவ் மெண்ட் மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்தி பேசி னார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி லாரன்ஸ் நரிப்பையூர் ஜமாத் தலைவர் முகம்மது ஆசாத், செயலாளர் அப்துல் ஹமீது, சாயல்குடி வர்த்த சங்க தலைவர் அபுபக்கர், செயலாளர் ராஜா முஹமது அ.தி.மு.க. பிரதிநிதி செய்யது காதர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் முகம்மது ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், பனைத் தொழிலாளர் நலச் சங்க மாநில தலைவர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் 15 மாணவர் களுக்கு உயர்கல்வி படிப்ப தற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முடி வில் மாவட்ட தொண்டரணி தலைவர் பஹீம் முஹம்மது நன்றி கூறினார்.
- பா.ஜ.க.வின் என் மண் என் மக்கள் யாத்திரை பந்தல்கால் நடும் விழா நடந்தது.
- 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.
கீழக்கரை
தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுத்து பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து பா.ஜ.க. மாநிலத்த–லைவர் அண்ணாமலை தலைமையில் 'என் மண், என் மக்கள் யாத்திரை' வருகிற 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இதனையொட்டி, ராமே–சுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடை–பெற்றது. மாவட்டத் தலை–வர் தரணி ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன் னிலையில் பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பவர் நாகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி–மாறன், ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், சங்கிலி, ஞான–குரு, கதிரவன், அரசம்மாள், செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கருப்பு முருகானந்தம் நிரு–பர்களிடம் கூறியதா–வது:-
வரும் 28-ந்தேதி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக அமையவுள்ளது. பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, அரசியல் மாற்றத்திற்கான ஒரு யாத்தி–ரையை ராமேசுவரத்தில் இருந்து தொடங்க உள்ளர். என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை துவக்கி வைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 28-ந்தேதி மாலை ராமேசுவரம் வருகை தர உள்ளார். இந்த யாத்திரையில் பங்கெடுப்பதற்கு பல லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு வர உள்ளனர். ராமநாதபுரம் மண் தேசியத்திற்கும், தெய் வீ–கத்திற்கும் உறு–துணை–யாக இருக்கும் என்று நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மட்டும் லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
அதற்கான பணியை துவங்கி உள்ளோம். அனைத்து குக்கிராமத்தில் இருந்து பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த யாத்திரை தொடக்கமே அரசியல் மாற்றத்தத்தை ஏற்படுத்தும். யாத்திரை நிறைவடையும் போது தமி–ழகத்தில் பா.ஜ.க. ஒரு அசைக்க முடியாத கட்சியாக என்ற நிலை ஏற்படுத்தும். 2024 தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்ப–டுத்தும் என தெரிவித்தார்.
- 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.
வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
- அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
- ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
ராமநாதபுரம்:
தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
இந்நிலையில் இந்த வருடம் ஆடி மாத அமாவாசை வரும் திங்கட்கிழமையன்று வருகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜூலை 17-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை தினமான நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மண்டபம், ராமநாதபுரம் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
- தெற்கு ரெயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி. நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், எம்.பி.யுமான நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்ல பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க தொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து நேரிலும் கோரிக்கை விடுத்து வந்தேன்.
இந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும், ராமேசுவரம்-வாரணாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் ராமநாதபுரம் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்காக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல்வேறு ரெயில்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றேன்.
அந்த ரெயில் நிலைய நிறுத்த கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப நாள் விழா நிகழ்ச்சிகளில் விவசாயிகள் பங்கேற்கலாம்.
- இந்த தகவலை வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனநாள் மற்றும் தொழில்நுட்பநாள் வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரைநடைபெற உள்ளது. முதல் நாள் விழா வேளாண் அறிவியல் நிலையத்திலும், 2-ம் நாள் உச்சிப்புளி அருகே தாமரை குளத்திலும், 3-ம் நாள் விழா திருவாடானையிலும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் தொழில்நுட்ப உரை, கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்கள் இடம்பெற உள்ளன. முதல் நாளில் நவீன தொழில்நுட்பம் மூலம் நெல் சாகுபடி முறைகள் குறித்தும், 2-வது நாளில் சிறுதானிய ரகங்கள் குறித்தும், 3-ம் நாளில் நவீன தொழில்நுட்ப முறையில் நெல்சாகுபடி குறித்தும் தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
மேலும் புதிய நெல்ரகங்கள் குறித்தும், உழவு மற்றும் விதை விதைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை மற்றும் நெல்லில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், விதை நேர்த்திக்கு தேவையான இடு பொருட்கள், விதை கடினப்படுத்தும் முறைகள், எந்திரங்களை பயன்படுத்தி விதை விதைக்கும் முறைகள், மற்றும் பயிர் ஊக்கிகள் தெளித்தல் ஆகியவை குறித்த செயல் விளக்கமும், கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் உள்ள விவசா யிகள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரடியாக வந்தும் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களுக்கு சென்றும் தகவல்களை தெரிந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தொடர்புக்கு விரிவாக்க ஒருங்கி ணைப்பாளர் சிவக்கு மாரை 8825986445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்து உள்ளார்.






