என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பாதாள சாக்கடை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • ஜமாஅத் நிர்வாகிகள் பலர் தங்களது கருத்துக்க ளையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சியில் உள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக பாதாள சாக் கடை திட்டத்தினை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. கட்சி சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக் குறுதி அளித்தனர்.

    இந்த நிலையில் கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்து ஜமாஅத்தார்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், நகர் மன்ற உறுப் பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட பாதாள சாக்கடை திட்டம் பற்றிய கருத்து கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நகராட்சி சார்பில் நகரிலுள்ள 21 வார்டுகள் முழுவதும் வெளியேறும் கழிவு நீரை கடற்கரை வரை கொண்டு சென்று அங்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் மின் மோட் டார் அறைகள் அமைத்து சுமார் ரூ. 13 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றும், காணொலி மூலம் விளக்கி கூறப்பட்டது.மேலும் கீழக்கரை கடற் கரை பகுதியில் அரசு புறம் போக்கு நிலம் ஏதும் இல்லை என்பதால் செல்வந்தர்கள் மற்றும் சங்கங்கள் ஜமா அத்திற்கு உட்பட்ட இடங்கள் இருப்பின் யாரேனும் தான மாக தர முன்வந்தால் இத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவலுடன் கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஜமாஅத் நிர்வாகி கள் பலர் தங்களது கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டனர்.

    மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் நகராட்சி பொறி யாளர் அவர்களிடம் விளக் கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

    • மகளிர் உரிமைத் தொகை முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளி களை தேர்வு செய்வதற்காக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்காக மொத்தம் உள்ள 775 நியாய விலை கடைகளில் முதற் கட்டமாக 326 நியாய விலை கடைகளில் வருகிற 24-ந் தேதி முதல் ஆக.4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 449 நியாயவிலை கடைகளில் ஆக.5 முதல் 16 வரையும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெற வுள்ளன.

    இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் குறிப்பாக இன்டர்நெட் வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வட்டவாரியாக குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.இந்த நிலையில் மூலக்கொத்தளம் மேல்நிலைப்பள்ளி முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் புதிய பஸ் நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது, காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.டி.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • 2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களையொட்டி உள்ள வங்கக்கடலில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடற்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்திருந்தது.

    இதன் காரணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மாரியூர், முந்தல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 1750 விசைப்படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடற்கரையில் 2-வது நாளாக ஓய்வெடுத்தன.

    வானிலை மாற்றம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

    குறிப்பாக இலங்கை கடற்படையினரின் தொல்லை காரணமாக 100 சதவீத அளவில் மீன்பிடிக்க முடிவதில்லை. தற்போது வானிலையும் சாதகமாக இல்லாததால் 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பம் நடத்த வருமானமின்றி தவிக்கிறோம் என்றனர்.

    • கீழக்கரை மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
    • மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்காத தால் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது.

    கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இது குறித்து கடந்த 13-ந் தேதி மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற் போது எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டு உள்ளது.

    இதனால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்டு சம்பந்த பட்ட அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்ற மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மாதிரி பள்ளி தொடங்கி மாணவர்களை சேர்க்க வேண்டும்.
    • சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் 1910-ம் ஆண்டு உதயமானது. ஒருங்கிணைந்த ராமநாத புரம் நிர்வாக காரணங்களுக்காக 1984-ல் விருதுநகர், சிவங்கை, ராமநாதபுரம் என தனித்தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

    தலைநகரமான ராமநாத புரத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த தனியார் மேல் நிலைப்பள்ளிகள் முதல் கடந்த சில ஆண்டுகளுக்குள் தொடங்கிய தனியார் மேல் நிலைப்பள்ளிகள் என 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அரசு சார்பில் நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி மட்டும் உள்ளது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியோ அல்லது இருபாலர் மேல்நிலைப் பள்ளியோ 100 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லை. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாண வர்கள் மாதிரி சிறப்பு பள்ளியில் சேர இயலாத நிலை உள்ளது.

    அப்போதைய கலெக்டர் நந்தகுமார் தொடங்கிய மாதிரி பள்ளியில், சிறப்பு ஆசிரியர்களால் அனைத்து பாடங்களும் தரமாக கற்பிக்கப்படுகிறது. மாதிரி பள்ளியில் சேருவதற்கு அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும், என்ற நிபந்தனை உள்ளது. இதனால் ராமநாதபுரம் நகரை சேர்ந்த மாணவர்கள் மாதிரிபள்ளியில் சேர முடியாமல் உள்ளனர். இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்வி சமுக ஆர்வ லர்கள் கூறுகையில், வானம் பார்த்த பூமி, அரசு அதிகாரி களின் பனிஷ்மென்ட் ஏரியா என்ற பெயர் மாறி தற்போது கல்வியில் முன் னேறி உள்ளது. நன்றாக படிக்கும் பொருளாதாரத் தில் பின் தங்கிய மாணவர்கள் நலன் கருதி மாதிரி பள்ளியில் சேருவதற்கு ராம நாதபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும் என்றனர்.

    • இளம்பெண்-கல்லூரி மாணவி மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் தும்மநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(வயது32). இவரது மனைவி மும்தாஜ் பேகம். இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்க ளாகிறது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபித்துக் கொண்டு மும்தாஜ் பேகம் வீட்டை விட்டு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும், உறவினர்களிடம் விசாரித்தும் எங்கு சென்றார்? என கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் அப்துல் லத்தீப் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மும்தாஜ் பேகத்தை தேடி வருகின்ற னர்.

    பேரையூர் பி.தொட்டி யபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் இன்பா(20) விருதுநகர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகி றார். சம்பவ த்தன்று கல்லூ ரி க்கு சென்ற வர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத் துறையினரிடம் பச்சை கிளிகள் ஒப்படைக்கப்பட்டது.
    • 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் அட்ட வணை 2-ல் உள்ள பச்சைக் கிளிகளை வீடுகளில் வளர் பது தண்டனைக் குரிய குற்ற மாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக நாடு முழுவதும் வனத் துறையி னா் வீடுகளில் கிளிகளை வளா்க்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத் துறை அலுவலா்களிடம் ஒ ப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னா். அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளா்க்கப்பட்ட 18 பச்சைக் கிளிகளை பொதுமக்கள் வனத் துறை யினரிடம் ஒப்படைத்தனா்.மாவட்ட வன அலுவலா் ஹேமலதா தலைமையில் வனத் துறையினா் கூண்டு களில் அடைத்திருந்த பச்சைக் கிளிகளை வனப் பகுதியில் பறக்க விட்டனா்.

    இந்த நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலா்கள் நித்திய கல்யாணி, நாகராஜன், ராஜ சேகரன், அருண்குமாா் மற்றும் வனத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனா்.

    • காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி. காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை, இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கமுதி வட்டம்.அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கடந்த ஆண்டு போதிய மழை இல்லததால் நெல் விவசாயிகள் விரக்தியடைந் தனர். இந்த நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மிளகாய் பயிர் செயய்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிர்செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் விவசாயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயி கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமியாக இருப்பதால் விவசாய நிலங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண்மை தோட்ட கலைத்துறை மூலம் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    • பனை தொழிலாளிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.
    • நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்

    121-வது பிறந்தநாள் விழா நடந்தது. வட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் செண்பக பாண்டி யன் தலைமை வகித்தார். நரிப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், நரிப்பையூர் வட்டார நாடார் இளைஞர் பேரவை தலைவர் அந்தோணி ராஜ், நரிப்பையூர்வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குகன் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் தமிழரசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிக மதிப்பெண் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கடையில் கருப்பட்டியை விற்பனை செய்ய வேண்டும். பனைமரம் வெட்டுவதை தடுத்து நிறுத்திடும் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை தரவையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் குடிநீர் நன்கு கிடைக்கும். பனைமரம் தேசிய மரமாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதனை வெட்டுவதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க கிராமத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஜேம்ஸ் விக்டர், அந்தோணி ஜெபமாலை, சிவனேந்த பெருமாள், மிக்கேல், ஜீவராஜ், கந்தப்பழம், முனியசாமி, சரவண பழனி முருகன், சித்திரை பாண்டியன், உதயகுமார், பால்பாண்டி, சுப்பிர மணியன், பெருமாள், லிங்கம் உள்பட கிராம தலைவர்கள் பங்கேற்றனர். நரிப்பையூர் வட்டார நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் ஜோசப் கென்னடி நன்றி கூறினார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.
    • அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சியில் பணிபுரியும் ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காததால் திண்டாடி வருவதாக கூறப் படுகிறது.

    இது குறித்து ஊராட்சி தலைவர் பவுசியா பானு கூறியதாவது:-

    பனைக்குளம் ஊராட்சி துணைத் தலைவர் திடீரென இறந்து விட்டதால், அவ ருக்கு பதிலாக புதிய ஊராட்சி தலைவரை ஊராட்சி மன்ற கூட்டத்தில் தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை மாவட்ட நிர் வாகத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.

    இந்த நிலையில் அதற் கான அனுமதி கடிதம் கிடைக்காத காரணத்தால் ஊராட்சி நிதியில் இருந்து வங்கி கணக்கில் பணம் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பொதுச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் சொந்த பணத்தை செலவழித்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண் டும் என்று பனைக்குளம் சமூக ஆர்வலர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:- துணைத் தலைவர் வங்கியில் கையெ ழுத்திடும் அங்கீகாரத்திற் கான தபால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

    • கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரியில் மாநில விளையாட்டு போட்டி நடந்தது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரை–யூர் நம்மாழ்வார் வேளாண் மை தொழில்நுட்பக் கல் லூரியில் வேளாண்மை கல்லூரிக–ளுக்கு இடையே–யான மாநில அளவிலான விளை–யாட்டுப் போட்டி நடை–பெற்றது.

    இதில் சென்னை, கோவை உட்பட மாநில முழுவதிலும் இருந்து 14 வேளாண்மை கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 14, 15 ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகளும், பூப்பந்து கூடைப்பந்து, மேஜைப்பந்து, கேரம், எரி–பந்து உள்ளிட்ட போட்டி–கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற போட்டிகளை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் பறக்க–விடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நம் மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி–யின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கி–னார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் இளவரசு, தி.மு.க. மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பெருநாழி போஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனிக்கொடி, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் போகர் துரைசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன–தாக கல்லூரி முதல் வர் ஜெயக்குமார் வர–வேற் றார். துணை முதல்வர் திருவேணி நன்றி கூறினார்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் சனிப்பிரதோச விழா வழிபாடு நடந்தது.
    • விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது 13-ம் நூற் றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவில்.

    சனிப்பிரதோசத்தை முன்னிட்டு இந்த கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், அரிசி மாவு, விபூதி, பஞ்சா–மிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.

    மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தெட்சிணாமுர்த்தி, லிங் கோத்பவர்,விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் உற்சவமூர்த்தி சுவாமி வீதி உலா நடை–பெற்றது. விரதமிருந்த பெண்கள் பலர் ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.

    பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், நெய் வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாத–மாக வழங்கப்பட்டது இதே போல் தொண்டி சிதம்ப–ரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சர்வ–தீர்த்தேஸ்வரர், ஒரியூர் சேயு–மானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆகிய சிவா–லயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை–பெற்றது.

    ×