என் மலர்
ராமநாதபுரம்
- குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் முகம் சுழிக்கின்றனர்.
- மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
அபிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகிலேயே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என தொடர்ச் சியாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.
அபிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அகத்தாரிருப்பு, அச்சங்குளம், பள்ளபச்சேரி தீர்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் அபிராமம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அபிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையில் குடித்து விட்டு தள்ளாடியபடி சுற்றி திரிகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது முகம் சுழித்தபடி உள்ளனர்.
மேலும் அவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்களை தாக்கி தகராறு செய்கின்றனர். மேலும் போதையில் இருக்கும் ஆசாமிகளை கண்டிக்கவும் பலர் தயங்குகின்றனர். பலர் போதை தலைக்கேறி அரை குறை ஆடையுடன் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் முகம் சுழித்தபடி நிற்கின்றனர். இந்த நிலையில் போதையில் பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் தொல்லை கொடுத்து வரும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஸ் நிறுத்த பகுதியில் போதை ஆசாமிகள் திரியாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
- விடுதலையான மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ந்தேதி கிறிஸ்து (வயது40), ஆரோக்கிய ராஜ்(45), ஜெர்மஸ்(33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன்(40), பிரபு(36), மெல்டன்(45) ஆகிய 8 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ்(44), கார்ச்(30), அந்தோணி(45), பிரதீபன்(35), ஈசாக்(25), ஜான்(30), ஜனகர்(32) ஆகிய 7 மீனவர்களும் அன்றைய தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மேற்கண்ட 15 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் மீனவர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென தமிழக முதலமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களும் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜபதிபாலன் 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த முறை விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து கைது செய்யப்பட்டால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.
- 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று காலை பர்வத வர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்தார்.. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி திட்டக்குடி அருகே மேல தெருவில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு இரவு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஸ்ரீகோடிலிங்க ரவி சாஸ்திரி, குமார் சாஸ்திரி, கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அது போல் திருவிழாவில் 9-வது நாளான இன்று காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகின்றது. 23-ந்தேதி அன்று மதியம் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராம தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப் படியில் வைத்து சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 24-ந் தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று கோவிலில் இருந்து சுவாமி அம்பாள்-பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.
- கமுதியில் வளர் இளம்பெண்களுக்கு கல்வி கருத்தரங்கு நடந்தது.
- மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.
பசும்பொன்
கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக குழு தலைவர் சண்முகராஜ் பாண்டியன், செயலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சிந்துமதி வரவேற்று பேசினார். கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட அலுவலர் முருகேசன், ஆலோசகர் ஆயிஷாகனி, ஆய்வு கூட நுட்புனர் நாகேஸ்வரன், கணினி மதிப்பீட்டு உதவியாளர் ராணி, மூத்த செவிலியர் தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
- திருப்புல்லாணி முப்பெரும் விழாவில் தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் தி.மு.க.வுடன் இணைந்தது
- குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணைந்த விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக திராவிட மாடல் குறித்து நவீன கோடாங்கியாக கருப்பசாமி வேடம் அணிந்து வந்து குறிசொல்லும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழக மக்கள் எழுச்சிக்கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்றார். தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் பேசுகையில், தி.மு.க.வில் இணைவ தற்கான முக்கிய காரணம் குறித்தும் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடின்றி அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நலத் திட்டங்கள் உடனுக்குடன் செய்து வருவது எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் அமைப்பில் 90 சதவீதம் பெண்கள்தான் உள்ளனர். தற்போது அனைவரும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- 1-ந்தேதி மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
- 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி இரவு மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து 10-ந் தேதி இரவு தலை கிழமை நிகழ்ச்சியும், 18-ந் தேதி மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 23-ந்தேதி சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 7-வது நாளான நேற்று இரவு 9 மணிக்கு பர்வத வர்த்தினி அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து வெள்ளித்தேரை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட வெள்ளி தேரோட்டமானது கோவிலின் 4 ரத வீதிகளை சுற்றி மீண்டும் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 10 மணிக்கு மேல் அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந் தேதி மாலை 2 மணிக்கு மேல் தபசு மண்டகப்படியில் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந் தேதி இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
- தமிழக மக்கள் எழுச்சி கழகம் தி.மு.க.வுடன் இணையும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது.
- மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணையும் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேச உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் திருப்புல் லாணி வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு நடைபெறும் மாபெரும் முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைக்க உள்ள னர்.
முன்னதாக தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்புரை நிகழ்த்து கிறார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைவது குறித்தும் ஏற்புடைய திட்டங்கள் குறித்தும் விளக்க உரை ஆற்றுகிறார்.
- தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
- இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.
இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.
தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
- அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதி யகளுக்கும் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ. 7,850 நிர்ணயம் செய்து அங்கன்வாடி, சத் துணவு, தலையாரிகள், ஊராட்சி செயலர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை வழங்காமல் இருக் கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக நட வடிக்கை எடுத்து செலவு தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளா ளர் முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் புஷ்பராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சே கர், அரசு கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெனி ஸ்டா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர பாபு, அரசு போக்குவரத்துக் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செய லாளர் பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள்- நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ண யிக்கப்பட்ட பணி இடங் களில் முழுமையாக டாக்டர் கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.
அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடி யாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.
இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- த.மு.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி 2-ம் வகுப்பு மாணவி ஆதிபா இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இனணயத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 19 நொடிகளிலும், இந்தியா வில் உள்ள 28 மாநிலங்களை 16 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 53 நொடி களிலும் கூறி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டில் இட ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் த.மு.மு.க. தலைமை பிரதி நிதி மண்டலம் ஜெயினு லாப்தீன் தலைமையில் மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்றது.
கிளை தலை வர் காதர் வரவேற்றார். ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராஜ், பரக்கத் அலி, மைதீன், பொருளா ளர் ஹம்மாது, கவுன்சிலர் பானு உட்பட பலர் கலந்து கொண்ட னர். தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். இதே போல் 2 நிமிடத்தில் 50 திருக்குறள் சொல்லி சாதனை படைத்த மாணவன் ராகுலை பாராட்டி கேடயம் வழங்கினர்.






