என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலருடன் சந்தித்து பேசினர்.
    • ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட கருவூல தலைமை அலுவலரை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணை பாளருமான முருகேசன் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக மாவட்ட கருவூல அலுவலரை சந்தித்து பேசினோம். மாவட்ட கருவூல அலுவலரிடம் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலனை தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்க கிளை கருவூல அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டோம். மேலும் கருவூலத்திற்கு அனுப்பப்படும் பில் களை தாமதப்படுத்தாமல் விரைவாக நடவடிக்கை மேற் கொள்ள கிளை கருவூல அலுவலர்களுக்கு அறிவு றுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம். எங்களின் கோரிக் கைளை கேட்டறிந்த மாவட்ட கருவூல அலுவலர் இது சம்மந்த மாக அனைத்து கிளை கருவூல அலுவலர்களுக்கும் சுற்றறிக் கை அனுப்புவதாக உரிதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாவட்டச்செயலாளர் லிங்கதுரை, மாவட்ட பொருளாளர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாவட்ட சட்ட ஆலோசகர் நவீன் அ.மாரி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வழிவிட்ட அய்யனார், துணைத்தலைவர்கள் பூமிநாதன், ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், கடலாடி வட்டாரத் தலைவர் அருட் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவு பொருட்களில் இருந்து கலைபொருட்கள் தயாரிக்கும் போட்டி நடந்தது.
    • ஆசிரியை சுகந்தி ஜெனிபா, கற்பக வள்ளி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நடத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் மாணவ-ஆசிரியகளுக் டையேயான கழிவு பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்களை தயாரிக்கும் போட்டி கல்லூரி இயக்குநர் கேபிரியல் வழிகாட்டு தலின்படி ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டு போட்டிகளை கல்லூரி தாளாளர் மனோகரன் மார்டின் தொடங்கி வைத் தார். கல்லூரி முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். மாணவ- மாணவிகள் அனைவரும் கழிவு பொருட்களில் இருந்து பல விதமான கலை நயமிக்க பொருட்களையும், கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான கற்பித்தல் உபகரணங்களையும் செய்திருந்தனர்.

    கழிவு பொருட்களை எவ்வாறு மறுபடியும் பயன்மிக்க பொருட்களாக மாற்றுவது? என்று மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படு வதாக தெரிவித்தனர்.வெற்றி பெற்ற மாணவ- ஆசியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த போட்டியினை ஆசிரியை சுகந்தி ஜெனிபா, கற்பக வள்ளி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நடத்தினர்.

    • பயன்பாட்டிற்கு வராத கழிப்பறைகளாகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    கீழக்கரை

    ஏர்வாடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் 2020ம் ஆண்டிற்கான 4 சமுதாய கழிப்பறைகள் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் யாத்ரீகர்கள் அவதிப்படு கின்றனர்.

    இதே போல் ஏர்வாடி பஸ் நிலையம் அருகே கழிப்பறை வாளாகம் பொது மக்களுக்கு பயன் பாடின்றி பூட்டி வைக்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து யாத்ரீகர்கள் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கழிப்பறை களுக்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

    ஆட்களை நியமித்து பராமரித்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயன்பாடின்றி பூட்டியே வைத்திருப்பதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. கழிப்பறையின்றி திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றனர்.

    • புதிய பஸ்சை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் என்ற கிராமம் கமுதி-சாயல்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மாலை நேரத்தில் பள்ளி மாண வர்கள் செல்வதற்கு பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    கிராமத்தின் விலக்கு சாலையில் இறங்கி 5 கிமீ தூரம் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதிக்கு புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர இப்பகுதி மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய நகர பஸ் வசதி ஏற்படுத்தி தரப் பட்டது.

    தங்களது கிராமத்திற்கு வந்த இந்த புதிய பஸ்சை கிராம பொதுமக்கள் குலவையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் பஸ்சை தொட்டு வணங்கி கைகளை கூப்பி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர துரித நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித் தனர்.

    முன்னதாக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், தி.மு.க. மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான பாண்டி, புதிய பஸ்சை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இதில் கமுதி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் ஓட்டுநர் நடத்துனர், தொழிற்சங்க பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    top

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருக்கல்யாண விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் 11-ம் நாளான நாளை காலை 6 மணிக்கு அம்மன், வெள்ளி கமல வாகனத்தில் ராமர் தீர்த்தம் அருகே உள்ள தபசு மண்டகப்படிக்கு செல்கிறார். பகல் 11 மணிக்கு ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகபடிக்கு எழுந்தருள்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் சுவாமி-அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அனுமன் சன்னதியில் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. நாளை மறுநாள் இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் சிகர நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது.

    மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்காக கோவில் நடை திறப்பில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று காலை 6 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்னர் தபசு மண்டகபடியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் முடிந்து கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் தரிசனம் செய்யவும் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • மொகரம் பிறை அறிவிக்கப்பட்டது.
    • மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின் படி ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஹிஜ்ரி 1444 துல்ஹஜ் பிறை 29, கடந்த 18-ந்தேதி மாலை ஹிஜ்ரி 1445 மொகரம் பிறை தென்படாத தால் நேற்று (20-ந்தேதி)மொகரம் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டி ருக்கிறது. எனவே 29-07-2023 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆஷுரா தினமாக கொண்டாடப்படும் என்பது தெரியப்படுத்தப்படுகிறது.

    ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷுரா நாளன்று தானும் நோன்பு நோற்று ஸஹா பாக்களையும் நோன்பு நோற்க ஏவியுள்ளார்கள். மற்றும் அடுத்த ஆண்டு (தான் ஜீவித்திருந்தால்) மொகரம் பிறை 9 அன்றும் நிச்சயமாக நோன்பு நோற் பேன் என்பதாக கூறிய நபி மொழி ஸஹீஹ் முஸ்லிம் ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் முஸ்லிம் ஜமாஅத்தார் களாகிய நாமும் மொகரம் பிறை 9 மற்றும் 10 ல் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருக்கிறது. எனவே மேற்கூறப்பட்ட நாட்களில் நோற்று அதன் மகிமையை பெற்றுக் கொள்ளுமாறு ஜமாஅத்தார் கள் அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • கீழக்கரையில் டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது.
    • டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கீழக்கரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் திற்கு அரசு திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசு சார்பாக நியமிக்கப் பட்டுள்ளதை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திட்ட பணிகளில் அதிக அளவு தேக்க நிலையில் இருக்கிறது டெண்டர் எடுத்த பணிகள் ஒப்பந்தக்காரர்கள் விரைந்து முடிப்பதில்லை யாரும் முறையான ஆய்வு செய்வதில்லை. பல இடங்களில் டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கழிவுநீர் பைப் லைன் போட்ட இடங்களில் கழிவுநீர் வெளியே ஓடுகிறது.இதனால் மக்கள் வரி பணமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு முன்பு என்னென்ன டெண்டர் எடுத்த பணிகள் எல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் அதை முறைப்படுத்தி ஒப்பந்தம் எடுத்தவர்களை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தமிழக அரசு சார்பாக எந்த வித திட்டப் பணிகளும் கீழக்கரையில் அமல்படுத்தவில்லை. உதாரணமாக கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி கீழக்கரை மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும்.

    கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேகமாக அமைக்க வேண்டும். கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் சேராமல் தடுக்க சுத்திகரிப்பு திட்டம் அல்லது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

    புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். எரியாத நிலையில் உள்ள மின்விளக்கு களை மாற்றி புதிதாக வாங்கப்பட்ட எல்.இ.டி.விளக்குகளை பொருத்த வேண்டும். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியம், தலை வநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக் கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன் ஊராட்சி செயலர் முத்து ராமு மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல், உட்பட ஏராளமான ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

    • ராமேசுவரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடித்தேரோட்டம் நடந்தது.
    • பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் கடந்த 13-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந் தேதி ஆடி அமாசாசையன்று ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 19-ந் தேதி பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. முன்னதாக ராமநாத சுவாமி-பர்வதவர்தினிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கா ரங்கள் நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் தேரோட்டம் தொடங்கியது. பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
    • பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவன்மீக நாதர் கோவில் உள்ளது.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தி யப்பட்ட இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைமைகளில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வாசுகி என்ற புனித தீர்த்த குளத்தில் நீராடுவதால் தீராத நோய்கள் தீருவதாக நம்பப் படுகிறது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை யாக பாகம்பிரியாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பாதயாத்திரையாக கோவிலுக்கு வருவதாக அவர்கள் கூறினார்.

    இவ்வாறு வரும் பக்தர்கள் வியாழக்கிழமை இரவு கோவில் மண்டபத்தில் தங்கி வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான எஸ்.பி பட்டிணம் என்று அழைக்கப் படும் சுந்தரபாண்டிய பட்டிணம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    • ரூ.104 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன தொழில் நுட்ப மையங்கள்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ-மாணவி களின் மீது அக்கறை கொண்டு அவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில், மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதி யான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் மாண வர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசன், வெல்டர், ஏ.சி. மெக்கானிக் போன்ற 78 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்பினை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மென்பொருட் களுடன் நிறுவப்பட்டு ரோபோட்டிக்ஸ் இண்டஸ்ட்டிரியல் ஆட்டோ மேஷன் மேனுபேக்சரிங் பிராசஸ் கண்டரோல், அட்வான்ஸ்டு ஆட்டோ மொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்க ளுக்கும், தொழில் பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் காணொளிக்காட்சிகள் மூலம் திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 என்னும் தொழில்நுட்ப மையங்கள் தலா ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் 3 தொழிற்பயிற்சி மையங்களிலும், ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் பயிற்சி பெற்று 312 மாணவ, மாணவிகள் பயன் பெறுவர். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்திற்குரிய தொழில் கல்விகளை தேர்வு செய்து பயன்பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளனர்.

    ×