என் மலர்
நீங்கள் தேடியது "in the month of Adi"
- திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
- பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத ஸ்ரீவன்மீக நாதர் கோவில் உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தி யப்பட்ட இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைமைகளில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வாசுகி என்ற புனித தீர்த்த குளத்தில் நீராடுவதால் தீராத நோய்கள் தீருவதாக நம்பப் படுகிறது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை யாக பாகம்பிரியாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பாதயாத்திரையாக கோவிலுக்கு வருவதாக அவர்கள் கூறினார்.
இவ்வாறு வரும் பக்தர்கள் வியாழக்கிழமை இரவு கோவில் மண்டபத்தில் தங்கி வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான எஸ்.பி பட்டிணம் என்று அழைக்கப் படும் சுந்தரபாண்டிய பட்டிணம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாத யாத்திரை மேற்கொண்டனர்.






