என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கடந்த 21-ந்தேதி 15 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்
    • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் காலம் காலமாய் தொடர்ந்து வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது, தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை அபகரிப் பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்போது சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு நாட்டுடமையாக்குவது நடந்து வருகிறது. இதனால் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள் மாற்று தொழிலை தேட தொடங்கி விட்டனர். இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிரந்த தீர்வு எட்டப்படாமலேயே இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மேலும் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 200 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று பாம்பன் மீனவர்களின் படகுகளை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதைப் பார்த்து அச்சம் அடைந்த மீனவர்கள், நமது எல்லையில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குவார்கள் என்று பயந்தனர். மேலும் அவர்கள் அவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் அதற்குள் 2 படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் வழக்கம்போல் பாம்பன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை அபகரித்து கொண்டதோடு, கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் தங்களது ரோந்து கப்பலில் கட்டி இழுத்து சென்றனர். பின்னர் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு மீனவர்களை அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பின்னரே தெரியவரும்.

    கடந்த 8-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்த ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 15 மீனவர்களை 9-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் ரணில் விக்கிரமசிங்கேயின் இந்திய பயணத்தை அடிப்படையாக கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    தற்போது மீண்டும் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையில் மீனவர்கள் கைதாகும்போது அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. நிரந்தர தீர்வு கிடைக்காமல் எப்போதும் துயர வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தொல்லையின்றி மீன்பிடிக்க செல்வது எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பட்டணம் காத்தான் பகுதியில் நடைபெற்றது மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சுந்தர்ராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் மற்றும் மாநில, மாவட்ட, நகர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

    ராமநாதபுரத்தில் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் உள்ளபாக முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    இதேபோன்று மண்டபத்தில் 18-ந்தேதி மீனவர் மாநாடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வருகை தருகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.

    இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், மாநில நிர்வாகிகள் பெருநாழி போஸ், நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (ராமநாதபுரம்), சேது கருணாநிதி (பரமக்குடி), செஹானஸ் ஆபிதா (கீழக்கரை), நாசர்கான் (ராமேஸ்வரம்) ஒன்றிய பெருந்தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் பழங்குடியினர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்தனர்.
    • மனிதம் மரித்துப்போக செய்த இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

    தொண்டி

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா–அத் பொதுச்செயலா–ளர் அப்துல்கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-

    மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. பல உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்தியர்க–ளுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மணிப் பூர் மாநிலத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்மு–றைக் கும்பல், குக்கி பழங்கு–டியினத்தை சேர்ந்த மூன்று பெண்களை நிர்வாணப்ப–டுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர–மான வீடியோ சமூக வலைத் தளங்களில் தற் போது பரவி வருகிறது.

    இந்த வீடியோவைப் பார்க்கும் போது காட்டு–மிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று வெட்கப்படக்கூடிய அளவிற்கு அந்தப் பெண்க–ளைச் சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்துச் செல்கின்றனர். கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெறும் பாசிச அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்க வாய்ப் பில்லை.

    மனிதம் மரித்துப்போகச் செய்த இந்தக் கொடூர சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள் என அனைத் துத் தரப்பு மக்களும் இதற்குத் தங்களது கண்ட–னங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

    மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவத்தைப் போன்று எத்தனை சம்பவம் நடந்தது என்றே தெரியவில்லை. அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

    உலக அரங்கில் இந்தியர்க–ளைத் தலை குனிய செய்த–வர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண் டும். இனியும் தாமதிக்கா–மல் மணிப்பூர் கலவரம் முடி–வுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் குஜராத் மாநி–லத்தைச் சார்ந்த பல்கீஸ் பானுவிற்கு எதிரான குற்ற செயலில் ஈடுபட்டவர்க–ளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போன்று இல்லாமல் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ரெகுநாதபுரம் மெயின் சாலையில் உள்ள வல்லபை அய்யப்பன் கோவிலில் மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வல்லபை அய்யனார் சேவை நிலையம் அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் நேற்று நடத்தியது.

    முகாமில் ரெகுநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கண் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் வீரஜா தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி குழுவினர்களால் பரிசோதனை செய்யப் பட்டது.

    சிறிய குறைபாடு உள்ளவர்களுக்கு நேற்று கண் கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். முன்னதாக வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குரு சுவாமி மோகன் வரவேற்றார். சந்தனகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ரகுநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஜெகத்ரட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதசார்பற்ற அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மாநில துணைத்தலைவர் கூறினார்.

    ராமநாதபுரம்

    தேசிய பாதுகாப்பு முகமை என்ற என்.ஐ.ஏ. அமைப்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் சோதனை நடத்தியது. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலு நிஷா, மாவட்ட துணை தலைவர்கள் சோமு, சுலைமான், பொருளாளர் அசன் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன் வரவேற்றார். கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கண்டன உரை யாற்றினார்.

    பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார். கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் என்.ஐ.ஏ. வுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் ஆசாத் நன்றி கூறினார்.

    அதேபோல் முது குளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட துணைதலைவர் மீரான் முகைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நூருல் அமீன், உமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் கன்சூல் மஹிரிபா, மாவட்ட பொருளாளர் ஹமீது சுல்தான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட பொதுச்செயலாளர் பஞ்சுபீர் முன்னிலை வகித்தனர்.

    தொகுதி தலைவர் ரசீது கான் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், மாவட்ட தொண்டரணி தலைவர் பஹிம், மாவட்ட செயலாளர் காஜா மொய்தின், முகமது ஆரிப், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சுல்தான் நன்றி கூறினார்.

    இது தொடர்பாக மாநில துணைத்தலைவர் அப்துல்ஹமீது கூறுகையில், வெகுஜன மக்களுக்காக போராடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்களும், மதசார்பற்ற அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    பேட்டியின்போது கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டணம் ரியாஸ்கான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், கிழக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    • முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.
    • அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 2 நாட்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மீன வர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் மண்டபம் கேம்ப் பகுதியில் கலோரியால் பங்களா அருகில் உள்ள இடத்தில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    மேலும் ராமநாதபுரத்தில் கட்சி நிகழ்ச்சி நடத்துவதற்காக அச்சுந்தன்வயல், பேராவூர் இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • பள்ளியில் தீ விபத்து ஒத்திகை நடந்தது.
    • ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவிபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கா.வெங்கடேஷ் தலைமையில், மார்ட்டின் ஸ்டிபன் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிலைய காவலர்கள் தமிழ்வாணன், கஜேந்திரகுமார், பாலமுருகன், பாரதிதாசன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்து ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    • பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
    • காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பரமக்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளுக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பர்வதவர்த்தினி அம்மன், ராமநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரு கின்றனர்.

    விழாவின் 12-வது நாளான நாளை மாலை கோவிலின் தெற்கு நந்தவனத்தில் அமைக்கப் பட்டுள்ள மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று கோவிலுக்கு சொந்த மான ராமதீர்த்தம்கரை மண்டகபடியில் மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டக படிக்கு 4 ரத வீதி, நகர் பகுதி வழியாக வந்து சேர்ந்தார். அங்கு அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாரா தனை நடந்தது.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் இன்று பிற்பகலில் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளுவார். பின்னர் ராமநாதசுவாமி- பிரியா விடை, பர்வதவர்த்தினி அம்மன், ராமநாதசுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை அதிகா லையில் ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு மேல் ராமநாத சுவாமி- பர்வத வர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.

    அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.

    தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முதல்-அமைச்சர் வருகை குறித்து நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.
    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம். எம்.எல்.ஏ. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (23-ந் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ராமநாதபுரம், பட்டிணம் காத்தான் கிங்ஸ் பேலஸ் மகாலில் மாவட்ட அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் பெரியசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகி கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் ராமநாதபுரத்தில் கலந்து கொள்ளும் மண்டல அளவிலான பாகமுகவர்கள் கூட்டம், மீனவர்கள் சந்திப்பு மாநாடு, கட்சி ஆக்கப்ப ணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ. தெரி வித்துள்ளார்.

    ஆகஸ்ட் 10-ந்தேதி ராமநாதபுரம், ஆகஸ்ட் 11-ந்தேதி ராமேசுவரத்தில் மீனவர்களுடன் சந்திப்பு மாநாடு என இரண்டு நாட்கள் தங்க உள்ளார். ராமநாதபுரம் வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

    • மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • விசைப்படகு மீனவர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின் மூலம் மீனவர்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மீனவர்களிடம் 56 மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டதுடன் மீனவர்களிடம் கோரிக்கை கள் குறித்து கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் மீனவர் கள் பிரதானமாக முன் வைத்த கோரிக்கையான மீனவர்களின் படகுகள் பாதிக்கப்பட்டு அதற்கான இழப்பீடு அரசு வழங்கி வந்த நிலையில் விடுபட்ட சிலருக்கு வழங்காமல் உள்ளதை விரைந்து அரசிடமிருந்து பெற்று தர வேண்டுதல் மற்றும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருபவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொள்முதல் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டியும், மேலும் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் நரம்பு வலைகளை தடுத்து நூல் வலைகளை பயன் படுத்த வேண்டி கேட்டு கொண்டார்கள்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதா வது:- மீனவர்களின் கோரிக்கைக்கு சிறப்பு கவனம் எடுத்து செயல்பட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மீனவர் களுக்கு தங்கள் பொருளுக் குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும். மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டு மனை பட்டா தகுதி உடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

    பொதுவாக அரசின் திட்டங்களை முழுமையாக உங்களுக்கு கொண்டு வந்து சேர்த்திட வேண்டும் என் பது தான் அலுவலர்களின் நோக்கம். அதிக நீளம் கொண்ட கடல் பகுதியான நமது மாவட்டத்தில் மீனவர்களின் நலனில் மாவட்ட நிர் வாகம் எப்பொழுதும் அக் கறையுடன் இருக்கும். அதே போல் நாட்டுப் படகு மீனவர்களும், விசைப்படகு மீன வர்களும் கடந்த காலங்களை போல் ஒற்றுமையாக இருந்து தொழில் செய்திட வேண்டு என்று அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி நாத், ஜெயக்குமார், அப்துல் காதர் ஜெய்லானி, சிவக் குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×