search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire drill"

    • பள்ளியில் தீ விபத்து ஒத்திகை நடந்தது.
    • ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவிபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கா.வெங்கடேஷ் தலைமையில், மார்ட்டின் ஸ்டிபன் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிலைய காவலர்கள் தமிழ்வாணன், கஜேந்திரகுமார், பாலமுருகன், பாரதிதாசன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்து ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    • விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.
    • ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூரில் இந்திய ராணுவ படைக்கு சொந்தமான விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விமானப்படைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் உருவாக்குவது, விமான பயிற்சி, விமானப்படை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மாதம்தோறும் விமானப்படை விமானங்கள் மூலம் பேரிடர் கால ஒத்திகையானது நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த மாததத்திற்கான பேரிடர் கால ஒத்திகை சூலூரில் உள்ள பெரிய குளத்தில் நடைபெற்றது. அதன்படி தீ விபத்து ஏற்படும் போது எப்படி ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைப்பது என்பது குறித்து தத்ரூபமாக விளக்கப்பட்டது.

    சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    அதன்படி சூலூர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் பெரிய குளத்திற்கு சென்றது. அங்கு வானில் வட்டமிட்டபிடியே ஹெலிகாப்டரில் இருந்து 2 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலனை கயிறு கட்டி கீழே இறக்கினர்.

    பின்னர் அது கீழே வந்து குளத்தில் தண்ணீரை நிரப்பியதும், மீண்டும் மேலே எடுத்து செல்லப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை தெளித்து தீயை அணைப்பது போன்று தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இந்த ஒத்திகையை காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியந்து பார்த்து சென்றனர்.

    ×