என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா–வது:-
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலராக பணியாற் றிய மார்டின் ராஜன் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) பணியிடத்திற்கும், தொண்டி தனி வட்டாட்சியர் அலகு 2-ல் பணியாற்றிய ஸ்ரீதரன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், முதுகு ளத்தூர் தனி வட்டாட்சியராக பணியாற்றிய தென்னரசு ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும்,
பரமக்குடி தனித்துணை வட்டாட்சியர் அலுவலக பணியாற்றிய காதர் மைதீன் தனி வட்டாட்சியராக ஆதிதிராவிடர் நலப்பிரிவிற் கும், பரமக்குடி தனி வட்டாட்சியராக பணியாற் றிய சடையாண்டி முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் சாந்தி ஆதிதிராவிடர் நலப்பிரிவிற்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன் மணி, தனி வட் டாட்சியர் அலகு-2 பிரிவிற்கும்,
ராமநாதபுரம் தனி வட்டாட்சியர் ஜமால் முகம்மது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக் குழு அலுவலராக வும், கடலாடி முன்னாள் வட்டாட்சியர் பரமசிவம் ராம–நாதபுரம் உதவி மேலாளர் டாஸ்மாக் லிமிடெட் பிரி–விற்கும், முன்னாள் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர் முக உதவியாளர் தனி வட் டாட்சியராக அலகு 4-ல் பணியாற்றிய முருகவேலு ராமநாதபுரம் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக மேலாளராகவும், பரமக் குடி தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) இந்து அறநிலையத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் கழக தலைமை உதவியாளராக பணியாற்றிய சத்திய பாமா பரமக்குடி தனி வட்டாட்சியர் (இந்து அற–நிலையத்துறை) நியமிக் கப்பட்டுள்ளனர். இந்த உத்த–ரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
இந்த உத்தரவு குறித்து விடுப்பு விண்ணப்பமோ, முறையீடோ ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. பணி நியமனம் பெற்றவர் புதிய பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி நீராட புதிய தொட்டி கட்டப்பட்டுள்ளது.
- சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
தமிழகம் முழுவதிலும் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவை அந்தந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க செய் யப்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு ஆண்டு–தோறும் புத்து–ணர்ச்சி முகாம்களும் நடத்தப்பட்டு பராமரிக்கப்ப–டுகிறது.
இதற்கிடையே கோவில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் நீச்சல் குளம் போன்ற அமைப்பில் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா–வல், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்க–ளில் யானைகளுக் கான குளியல் தொட்டி கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
அந்த வகையில் உலகப்பு–கழ்பெற்ற ராமேசுவரம் ராம–நாத சுவாமி கோவிலில் கோடிக்கணக்கான பக்தர்க–ளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வரும் ராமலட்சுமி யானை நீராடுவதற்கு நேற்று கோவிலில் புதிய நீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியானது கோவிலின் வடக்கு நந்தவ–னத்தில் ரூ.15 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளுடன் யானை ராமலட்சுமி சுதந்தி–ரமாக குளிப்பதற்கு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. யானை நீராடுவதற்கு புனித தீர்த்தமான கோவில் வளா–கத்தில் அமைந்துள்ள சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய தொட்டியில் யானை ராமலட்சுமியை இறக்கி நீராட வைத்து கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்திகை நடத்தினர். புதிய அனுபவம் கிடைத்த மகிழ்ச்சியில் யானை ராமலட்சுமி நேற்று ஆனந்தமாய் நீராடியது. அதன்பின்னர் நந்தவன பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கடலாடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறைக்குளம் கிராமத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரிலும், பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆணைக்கிணங்க பசுமை தாயகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கர்ண மகாராஜன் ஏற்பாட்டில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நடந்தது.
இதையொட்டி 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட பசுமை தாயகத்தின் தலைவர் திருஞானம் அனை வரையும் வரவேற்றார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமா ரன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட கவுரவ தலைவர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். மமுடிவில் பாட்டாளி தொழிற் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.
- இந்த பணிகளை பேரூர் செயலாளர் பார்வையிட்டார்.
மண்டபம்
ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங் களை சேர்ந்த தி.மு.க. முக வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதேபோன்று மண்டபத்தில் ஆக.18-ந்தேதி மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மண்டபம் அருகே ஹெலிபேட் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் பார்வையிட்டார்.
அப்போது கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், நிர்வாகி வேல்முரு கன், அவைத்தலைவர் முரு கானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அப்துல் ரகுமான் மரைக்காயர் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மண்டபத்தில் அவர் மீன வர்களை சந்திக்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் முடிந்து பந்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது.
ராமேசுவரம்:
தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.
இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.
அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- ராமநாதபுரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
- பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திட வும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமய மாக்கல் துணை இயக்கத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூல மாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. 2021-22 முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரை தேர்வு செய்யப்பட் டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவ சாயிகளுக்கு 162 எண்கள் பவர்டில்லர்கள் மற்றும் 10 எண்கள் பவர் வீடர்கள் என மொத்தம் 172 எண்கள் ரூ.143.16 லட்சம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் நிலப் பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச்சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறுது.
மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல் லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார தனிநபர் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உதவி செயற்பொறியாளர், ராமநாதபுரம் அலுவலகத்தில் உள்ள கைபேசி எண் 9489152279 மற்றும் பரமக்குடி, நயினார் கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார தனிநபர் விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பெண்கள் கண்டன பேரணி நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடந்தது.
பசும்பொன்
கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் மணிப்பூர் சம்பவம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி அங்குள்ள கண்மாய்க்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக இருளப்ப சுவாமி கோவில் அருகே நிறைவு பெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்தது.
ராமநாதபுரம்
மணிப்பூா் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அங்கு கலவரம் ஏற்ப–டாமல் தடுக்கத் தவறிய மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தி.மு.க. மகளிரணி சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளா் காதா்பாட்ஷா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் ம–களிரணி மாநில துணைச்செயலாளா் பவானி ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் இன்பா ரகு, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் தமிழ்ச்செல்வி போஸ், துணை அமைப்பாளா்கள் கவிதா கதிரேசன், கலைமதி ராஜா, மாநில நிா்வாகிகள் திசைவீரன், சுப.த.திவாகரன், மாவட்ட துணைச் செயலாளா் கருப்பையா உள்ளிட் டா்ோ கலந்து கொண்டனா்.
- மண்டபத்தில் 26-ந்தேதி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
- குடற்புழு நீக்க மருந்துகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ராமநாதபுரம்
கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கலைஞ ன் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான 3 கால்நடை மருத்துவ முகாம்கள், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2-வது முகாமானது வருகிற 26-ந்தேதி ராமநாதபுரம் கோட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி கிராமத்தில் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் கால்நடை களுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணி கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்பட உள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் சிறந்த கறவைப் பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங் களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார்.
மேலும், முதற்கட்ட முகாம் 326 நியாயவிலைக் கடைகளில் அப்பகுதிகளுக் குறிய குடும்ப அட்டைதாரர் களிடமிருந்து விண்ணப்படி வங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும்.
அதேபோல் 2-ம் கட்ட முகாம் 439 நியாயவிலை கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி களை சரியாக அமைத்து கொடுத்து கண்காணித்து வரவேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டை தாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலை கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
- 2-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.
- 18-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.
திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கலிய கிராமத்தினரின் கொடி ஊர்வலமும், வெள்ளையபுரம் வட்டானம் ஜமாத்தார் மற்றும் கிராமத்தினர் ஸ்தானிகன்வயல் மாணவநகரி கிராமத்தினரின் ரத ஊர்வலமும் மருங்கூர், எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம் ஜமாத்தார் கிராமத்தினர் சார்பில் கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் பாசிப்பட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தனர்.
இவர்களை தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை மேளதாளங்கள் வாணவேடிக்கை முழங்க தர்காவிற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கொடியை பொதுமக்கள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினரின் முயற்சியால் கொடிமரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் விழா கமிட்டியை சேர்ந்த முஸ்தபா கமால், சேகனா துரை, அசரப்அலி, அமீர்கான், ஊராட்சி தலைவர் உம்மு சலீமாநூருல் அமீன், ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கீதா ராஜாராம் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
வருகிற 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் விருந்து நிகழ்ச்சியும், இரவு மவுலீது ஓதி நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 2-ந் தேதி மத நல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காகவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும், 10-ந் தேதி இரவு தலைக்கிழமை, 18-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒலியுல்லாஹ் பேரர்கள், விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது.
- 29-ந்தேதி மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிக முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இரவு 7 மணிக்கு தெற்கு நந்தவன பகுதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ராமநாதசாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். 7.50 மணியளவில் சாமி, அம்பாளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ராணி லட்சுமி நாச்சியார், இளையராஜா நாகநாதசேதுபதி, தக்கார் பழனிகுமார், கோவில் இணை ஆணையர் மாரியப்பன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பத்மநாபன், மலைச்சாமி, ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண திருவிழாவில் கடைசி நாளான வருகின்ற 29-ந் தேதி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.






