search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entitlement"

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு கமுதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்ப படிவங்கள், ரேசன் கடைகளில் பெற்று கடந்த 24-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.

    கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் என 2 இடங்களில், இதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக் களை கொடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    மேலும் கிராம பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங் களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார்.

    மேலும், முதற்கட்ட முகாம் 326 நியாயவிலைக் கடைகளில் அப்பகுதிகளுக் குறிய குடும்ப அட்டைதாரர் களிடமிருந்து விண்ணப்படி வங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும்.

    அதேபோல் 2-ம் கட்ட முகாம் 439 நியாயவிலை கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி களை சரியாக அமைத்து கொடுத்து கண்காணித்து வரவேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டை தாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலை கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகை யில், அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங் களை , முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன், நேரடை யாக ரேசன்கார்டுதாரர்கள் வீட்டிற்கே சென்று, முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் குறித்து விற்பனையாளர் பதிவு செய்து வழங்குவார்கள்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய வற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும்.அனைத்து முகாம்களி லும் போலீசார் மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அனைத்து தாலுகா அலுவல கங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    கலெக்டர் அலுவல கத்தில் 1800 425 1997, நாமக்கல் தாலுக்கா அலுவ லகம்-04286 233701, ராசிபுரம்- 04287-222840, சேந்தமங்கலம்- 04286-271127, கொல்லிமலை- 63792-85667, மோகனூர்-04286-297768, திருச்செங்கோடு- 04288-253811, ப.வேலூர்- 04268-250099, குமாரபாளையம்- 04288-264546 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விண்ணப்பப் பதிவு முகாம்கள், 2 கட்டங் களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
    • சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக்கான பூர்வாங்க நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக் கான பூர்வாங்க நடவ டிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேசன் கடைகளும், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேசன் கடைகளும், பேரூராட்சிகளில் 126 ரேசன் கடைகளும் மற்றும் நகராட்சிகளில் 134 ரேசன் கடைகளும் என மொத்தம் 1,541 ரேசன் கடைகள் உள்ளன.

    500 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு ஒரு பதிவு மையம், 600 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 2 பதிவு மையம், 1000 முதல் 1500 ரேசன் கார்டு உள்ள கடைகளில் 3 பதிவு மையம், 1500-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 4 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 3-வது கட்ட முகாம் ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கும். ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பப்பதிவு அரசின் சார்பில் மேற்ெகாள்ளப்படு வதால் கட்டணம் ஏதும் கிடை யாது. இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்.

    நாளொன்றுக்கு 30 முதல் 50 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • 30 நாட்களில் நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு நீர் மேலாண்மை தேசிய கொள்கையின் படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மல கசடு கழிவுநீரைவாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பா டுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் படிவம் பெறபட்ட 30 நாட்களில்நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமை வழங்கப்படும்.

    இதற்கான கட்டணம் ரூ. 2000 உரிமம் பெற்ற வாகனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும். செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையா ளர்கள் உடனடியாக உரிமம் பெற்று கொண்டு இயக்க வேண்டும். உரிமை இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் .மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×