search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியது அவசியம்-அமைச்சர் பேச்சு
    X

    விருதுநகரில் 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை விநியோகத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர். அருகில் கலெக்டர் ஜெயசீலன், சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், உள்ளனர்.

    பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியது அவசியம்-அமைச்சர் பேச்சு

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×