தஞ்சையில், விடுபட்ட மகளிர்களுக்கு 2-ம் கட்டமாக உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
விடுபட்ட மகளிர்களுக்கு 2-ம் கட்டமாக உரிமைத்தொகை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
விடுபட்ட மகளிர்களுக்கு 2-ம் கட்டமாக உரிமைத்தொகை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com