search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்
    X

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங் களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார்.

    மேலும், முதற்கட்ட முகாம் 326 நியாயவிலைக் கடைகளில் அப்பகுதிகளுக் குறிய குடும்ப அட்டைதாரர் களிடமிருந்து விண்ணப்படி வங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும்.

    அதேபோல் 2-ம் கட்ட முகாம் 439 நியாயவிலை கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி களை சரியாக அமைத்து கொடுத்து கண்காணித்து வரவேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டை தாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலை கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×