என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ் பிறந்தநாள் விழா
    X

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிறைக்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமதாஸ் பிறந்தநாள் விழா

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடலாடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறைக்குளம் கிராமத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரிலும், பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆணைக்கிணங்க பசுமை தாயகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கர்ண மகாராஜன் ஏற்பாட்டில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நடந்தது.

    இதையொட்டி 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட பசுமை தாயகத்தின் தலைவர் திருஞானம் அனை வரையும் வரவேற்றார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமா ரன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட கவுரவ தலைவர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். மமுடிவில் பாட்டாளி தொழிற் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×