மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பெண்கள் கண்டன பேரணி

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பெண்கள் கண்டன பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடந்தது.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பெண்கள் கண்டன பேரணி
Published on

பசும்பொன்

கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் மணிப்பூர் சம்பவம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி அங்குள்ள கண்மாய்க்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக இருளப்ப சுவாமி கோவில் அருகே நிறைவு பெற்றது.

இதில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com