search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new tank"

    • ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி நீராட புதிய தொட்டி கட்டப்பட்டுள்ளது.
    • சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்

    தமிழகம் முழுவதிலும் உள்ள அறநிலையத்துறை மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அவை அந்தந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள், உற்சவங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க செய் யப்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு ஆண்டு–தோறும் புத்து–ணர்ச்சி முகாம்களும் நடத்தப்பட்டு பராமரிக்கப்ப–டுகிறது.

    இதற்கிடையே கோவில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழும் வகையில் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் நீச்சல் குளம் போன்ற அமைப்பில் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா–வல், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்க–ளில் யானைகளுக் கான குளியல் தொட்டி கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

    அந்த வகையில் உலகப்பு–கழ்பெற்ற ராமேசுவரம் ராம–நாத சுவாமி கோவிலில் கோடிக்கணக்கான பக்தர்க–ளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வரும் ராமலட்சுமி யானை நீராடுவதற்கு நேற்று கோவிலில் புதிய நீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியானது கோவிலின் வடக்கு நந்தவ–னத்தில் ரூ.15 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    அதிநவீன வசதிகளுடன் யானை ராமலட்சுமி சுதந்தி–ரமாக குளிப்பதற்கு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. யானை நீராடுவதற்கு புனித தீர்த்தமான கோவில் வளா–கத்தில் அமைந்துள்ள சேது மாதவ தீர்த்தத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த புதிய தொட்டியில் யானை ராமலட்சுமியை இறக்கி நீராட வைத்து கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் ஒத்திகை நடத்தினர். புதிய அனுபவம் கிடைத்த மகிழ்ச்சியில் யானை ராமலட்சுமி நேற்று ஆனந்தமாய் நீராடியது. அதன்பின்னர் நந்தவன பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×