என் மலர்
ராமநாதபுரம்
- நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.
- அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.
ராமேசுவரம்:
தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.
5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.
அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.
ஏற்கனவே அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று முதலே ராமேசுவரம் வரத்தொடங்கினர். இதனால் ராமேசுவரம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் தலையாகவே காட்சி அளித்தது.
இதற்கிடையே பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுகிறார். 8.30 மணிக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.
அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு வரவேற்பு பேனர்கள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கீழக்கரை முதல் தொண்டி வரை 100 கி.மீ. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிநவீன ஆயுதங்களுடன் 3 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ராமேசுவரம் வருகையையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் அருகே பிணத்துடன் சாலையில் அமர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
- பேச்சுவார்த்தைக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே பத்தி ராதரவை மேற்கு தெருவை சேர்ந்தவர் பனைத் தொழி லாளி முனியசாமி (65). கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராமல் தவறி விழுந்து காயமடைந்தார். அதனால் அவருக்கு ஏற் பட்ட உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
பத்திராதரவையில் அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதியவரின் சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவின் ஒருங் கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் இரு தரப்பி னரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதனை தொடர்ந்து அரசு புறம் போக்கு இடத்தை தாசில்தார் பழனிக்குமார் ஒதுக்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பிரச்சினைக்கு தீர்வாக சுடுகாட்டிற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் புதைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் தகன மேடை மற்றும் காம்பவுண்டு சுவர், சாலை வசதி அமைத்து தரப்படும், என்றார்.
போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு தாசில்தார் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. திருப்புல்லாணி சப்- இன்ஸ்பெக்டர் கர்த்திகை ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு வளாகத்தில் உள்ள ராமநாதபுரம், முது குளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக் கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாது காப்பாக வைக்க ப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களு டன் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வை யிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலக வளா கத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாது காப்பு அறையினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதில் வட்டாட்சியர் (தேர்தல்) ரவி மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
- இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.
கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.
இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.
சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.
+2
- நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
- ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. 3-வது முறையாக தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் கொண்டுவர பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அமித்ஷா 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை மாலை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் அவர் அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் அமித்ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
நடைபயண தொடக்க விழாவுக்கு பின்னர் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் (29-ந்தேதி) காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அதன்பிறகு காலை 11 மணிக்கு மற்றொரு தனியார் ஓட்டலில் நடைபெறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு அப்துல் கலாமின் இல்லத்திற்கு செல்லும் அமித்ஷா, அப்துல்கலாமின் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலாமின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பிறகு பகல் 12.40 மணிக்கு குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார்.
அங்கிருந்து மண்டபம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 2.15 மணியளவில் டெல்லி செல்கிறார்.
அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் டி.ஐ.ஜி. துரை தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 30 டி.எஸ்.பி.க்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாகவும், இதற்காக அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. விழா மேடையானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
நாளை நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். இதற்காக புகார் பெட்டி ஒன்றும் எடுத்து செல்லப்படுகிறது. முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.
நாளை மறுநாள் (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.
இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந் தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந் தேதியும், திருச்சியில் 11-ந் தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழிக்கு நடைபயணம் செல்கிறார்.
நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை செல்லும் அண்ணாமலை நவம்பர் 27-ந்தேதி சேலம் செல்கிறார். டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி செல்லும் அவர் டிசம்பர் 31-ந்தேதி அன்று திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு செல்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.
சென்னையில் ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நாளை தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாட்களை கடந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- தொண்டி அருகே செங்கோல் மாதா ஆலயத்தில் கொடியேற்றம் நடந்தது.
- தேர் பவனி நடைபெற்று சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.
தொண்டி
தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் செங்கோல்மாதா ஆலயம் உள்ளது. இங்கு வருகிற 1, 2-ந்தேதிகளில் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி கொடியேற்ற விழா நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட பங்கு பணியாளர் வெனிஇளங்குமரன் தலைைம வகித்தார். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பாவமன்னிப்பு வழிபாடு திருப்பலி, புனித இஞ்ஞாசியார் திருவிழா, நற்கருணை பவனி ஆராதனை ஆகியவை நடைபெறும். அதைத்தொடர்ந்து தேர் பவனி நடைபெற்று சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.
- 1,221 கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைக்கப்பட்டது.
- மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே தங் கச்சிமடம் ஊராட்சி பகு–திக்கு உட்பட்ட பேய்க்க–ரும்பு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி–மண்டபம் அமைந்துள் ளது. இந்த மணிமண்டபத்தில் இன்று அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் கடை–பிடிக்கப்பட்டு வருகி–றது.
இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை விளக்கி மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பான்ஞ் பயா என்ற மாணவர் ராமே சுவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு போட் டிகளில் ஏராளமான சாத–னைகளை செய்துள்ளார்.
இந்த நிலையில் மாணவர் அப்துல்லா பான்ஞ் பயா, முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தையும் அவர் விஞ்ஞானியாக இருந்த–போது முதலில் ஏவிய அக்னி ஏவுகணையும் 1,221 ரூபிக்ஸ் கியூப்களை பயன்ப–டுத்தி வடிவமைத்துள்ளார்.
இந்த உருவ வடிவத்தை 4 மணி நேரத்தில் அவர் செய்து முடித்துள்ளார் என்பது உலக சாதனையா–கும். அவர் வடிவமைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவத்தை அப்துல் கலா–மின் மணிமண்டபத்தில் இன்று அவர் நினைவு தினத்தையொட்டி மண்டப வளாகத்தில் வைத்திருந்த–னர். இந்த உருவத்தை மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.
- பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.
- குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஊசி, பாசி மாலை போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள் தங்கி வருகிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தார்.
இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை அருகில் வைத்துவிட்டு தூங்கினார்கள். நள்ளிரவு கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முத்துராஜ் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஆண் ஒருவரும் முத்துராஜின் குழந்தையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரெயில் மூலமாக குழந்தையை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குழந்தை கடத்தப்பட்டது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் சிறையின் கீழ் ரெயில் நிலையத்தில் ஒரு தம்பதியர், குழந்தையுடன் சந்தேகப்படும்படி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே கேரள போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தை மீட்கப்பட்டது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் குழந்தையையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 48), அவரது மனைவி சாந்தி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட குழந்தையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு வெகுமதிகளை வழங்கினார்.
- அப்துல்கலாமுக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.
- ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.
அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னரும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தொடர்ந்து பேசி வந்தார்.
2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா தலைநகர் சில்லாங்கில் உள்ள கல்லூரியில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் இறந்தார். அவரது 8-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.
அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.
- கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
- முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறி னார்.
கீழக்கரை
கீழக்கரை ரோட்டரி சங்கம் 2023-24 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்கத் தின் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் தேர்வு மீரான் கான் சலீம் கலந்து கொண்டு தலைவர் செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவுரவ விருந்தின ராக முன்னாள் ஆளுநர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட ஆளுநர் பரிந்துரை தினேஷ் பாபு கலந்து கொண்டு பேசினர்.
துணை ஆளுநர் கீதா ரமேஷ் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் கள். தேவகோட்டை மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் பவுலியன்ஸ் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ரோட்டரி சங்கத் தின் சேவைகள் மற்றும் வளர்ச்சிகளை பற்றி எடுத் துரைத்து பேசினார்கள்.
சங்கத்தின் சார்பாக கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த ஆசிரியர் களுக்கும், தேர்வுகளில் சாதனைகள் செய்த மாண வர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ரோட்டரி சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பொருளாளர் சுப்பிரமணியன் அவர்கள் சமர்ப்பித்தார்கள். விழாவில் சங்கத்தின் பட்டய தலைவர் பேராசிரியர் அலாவுதீன் அவர்கள் வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் கீழக்கரை சங்கத்தின் முன்னாள் தலை வர்கள் ராசிக்தீன், செல்வ நாராயணன், டாக்டர் சுந்த ரம், சித்திரவேல், கேசவன், கண்ணன், சபீக், மிப்தா ஹுதீன், மரியதாஸ், பெண் வழக்கறிஞர் நதியா மற்றும் பல்வேறு ரோட்டரி சங் கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் கள், ஜமாத்தார்கள், பாதிரியார்கள், அரசியல் பிரமுகர் கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறினார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
- ராமநாதபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நாளை மறுநாள் (28-ந்தேதி) பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்க உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் இந்த தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பாரதிய ஜனதா கட்சியினர் ராமேசுவரத்தில் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.
ராமேசுவரம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அழைப்பிதழை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ராமேசுவரம் நகர் பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்குடன் அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், செயலாளர் கணேசன் அய்யர், பொருளாளர் சுரேஷ், பொதுச்செயலாளர்கள் செல்வம், முருகன் உள்பட பலர் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.
- ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் முத்துவிஜயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலை வா் சந்தானம் ஆா்ப்பாட்டதை தொடங்கி வைத்தாா்.
நிா்வாகிகள் குருவேல், சுடலைகாசி, மணிகண்ணு, வாசுதேவன் ஆனந்த், ஞான சேகா், மாா்க்சிஸ்ட் தாலுகா செயலாளா் செல்வராஜ், மாவட்டச் செயலாளா் சிவாஜி ஆகியோா் பேசினா்.
இதில், தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் பணப்பலன்களை இரட்டிப் பாக்க வேண்டும். பெண்களுக்கான ஓய்வூதிய வயதை 55-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






