என் மலர்
ராமநாதபுரம்
- மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு கமுதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்ப படிவங்கள், ரேசன் கடைகளில் பெற்று கடந்த 24-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.
கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் என 2 இடங்களில், இதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக் களை கொடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் கிராம பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
- கீழக்கரையில் விவசாயிகள் நல மையம் திறப்பு விழா நடந்தது.
- 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.
கீழக்கரை
இந்தியாவில் 1.25 லட்சம் விவசாயிகள் நல மையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள மையத்தில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறப்பு விழா நடந்தது. பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் வழங்குவதில் மீதமுள்ள 2000 மேலும் விவசாயிகள் 70 சதவீதம் இயற்கை உரம் 30 சதவீதம் கெமிக்கல் உரம் சேர்த்து பயன்படுத்துவது குறித்தும் விரைவில் 100% இயற்கை உரம் வழங்கும் திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று விளக்கிக் கூறப்பட்டது.
இதில் விவசாயிகள் அணி மாநில பொதுச்செயலாளர் பிரவீன், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி நிர்வாகி சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டி, கயிறு வாரிய தலைவர் குப்புராம், ராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தேங்காய் விலை வீழ்ச்சி குறித்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.சிறு, குறு விவசாயிகள் அதிகமுள்ள நிலையில், ஆட்களை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது.தென்னை விவசாயத்தை காப்பதாக கூறி மத்திய அரசு கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையாக, ரூ 105.90 நிர்ணயித்தது. ஆனால், அரசு கொள்முதல் நிலையங்களில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு வழியின்றி, தனியாரிடம் விற்க செல்லும் போது, ரூ. 82 நிலவரத்தில் மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்கின்றனர். கொப்பரைக்கான ஆதார விலையை,150 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியடையாமல் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.
- இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதி இல்லை.
- நாளை அதிகாலை முதல் பக்தர்கள் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாள் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி திருக்கல்யாணம் மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
இதனிடையே திருக்கல்யாண நிகழ்ச்சியின் 15-வது நாளில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவிலின் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏக சிம்மாசனத்தில் சாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் யானை லட்சுமிக்கு தும்பிக்கை பகுதி முழுவதும் மஞ்சளால் பூசப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமியுடன் கோவில் ரதவீதியை சுற்றி வலம் வந்த யானை ராமலட்சுமியை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், செல்போனிலும் புகைப்படம் எடுத்தனர்.
திருவிழாவில் கடைசி நாளான இன்று(சனிக்கிழமை) சாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் கோவிலில் இருந்து கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. கோவிலில் இருந்து சாமி, அம்பாள் காலை 6 மணிக்கு எழுந்தருளிய பின்னர் கோவில் நடையானது சாத்தப்படுகின்றது.
அதன்படி இன்று இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் பக்தர்கள் ஸ்படிகலிங்க தரிசனம் முதல் வழக்கமான தரிசனம் செய்யவும், புனித நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாமலையின் பாத யாத்திரையை தொடங்கி வைக்க நேற்று ராமேசுவரம் வந்தார்
- நடைபயணம் பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம் என்றார்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, அண்ணாமலையின் யாத்திரையை தொடங்கி வைக்கும் விழாவில் அமித் ஷா பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். ராமநாதசுவாமி அருளாசியால் நம்முடைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற இந்த நடைபயணமானது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டும் அல்ல. இந்த நடைபயணம் இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம்.
தமிழகத்தின் இந்த கலாச்சாரத்தை பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் ஒரு நடைபயணமாகும். இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே மரியாதையை ஏற்படுத்தும் நடைபயணம்.
தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம். தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த பயணம் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக செய்யப்படும் நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற ஒரு அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை.
இன்று தொடங்கி 234 தொகுதிகளிலும் 700 கிமீ நமது மாநில தலைவர் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் நமது பிரதமரின் செய்திகளை கொண்டு செல்லவிருக்கிறார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த நடைபயணத்தை நடத்துகிறார். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.
பிரதமர் மோடி தமிழ்மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார். ஐநா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது நம்முடைய பிரதமர் மோடி. இப்போது ஜி20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கின்றன. அதன் முத்திரை வாசகமான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
- ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.
ராமேஸ்வரம்:
மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். ராமேசுவரத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-
இந்த யாத்திரை பாஜகவின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை. என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.
மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் இங்கு வந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.
நம்முடைய கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் I.N.D.I.A. என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமர். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் விடுமுறை. சனி, ஞாயிறுக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து I.N.D.I.A. என்கிறார்கள்.
இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடை சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும் நம்முடைய பிரதமர் மோடி மறுபடியும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
- ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும், 'மோடி என்ன செய்தார்?' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.
விழாவில் பாஜக நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
நடைபயண துவக்க விழாவிற்காக புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்கிறார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
- தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.
- பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார்.
ராமேஸ்வரம்:
மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.
விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். ராமநாத சுவாமி அருளாசியால் நம்முடைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற இந்த நடைபயணமானது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டும் அல்ல. இந்த நடைபயணம் இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். தமிழகத்தின் இந்த கலாச்சாரத்தை பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் ஒரு நடைபயணமாகும்.
இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே மரியாதையை ஏற்படுத்தும் நடைபயணம். தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம். தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த பயணம் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக செய்யப்படும் நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற ஒரு அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை.
இன்று தொடங்கி 700 கிமீ 234 தொகுதிகளிலும் நமது மாநில தலைவர் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் நமது பிரதமரின் செய்திகளை கொண்டு செல்லவிருக்கிறார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த நடைபயணத்தை நடத்துகிறார்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.
பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார். ஐநா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது நம்முடைய பிரதமர் மோடி. இப்போது ஜி20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கின்றன. அதன் முத்திரை வாசகமான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது.
- தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
ராமேஸ்வரம்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.
விழாவில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, வாழும் இரும்பு மனிதராக உள்துறை மந்திரி அமித் ஷா திகழ்வதாகவும், தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும். மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக 9 ஆண்டு கால சாதனைகளை கரும்பு மனிதர் அண்ணாமலை, வீடு வீடாக வீதி வீதியாக எடுத்துச் சொல்ல இருக்கிறார்.
அதேசமயம், இந்த ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆபத்தாக இருக்கிறது தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக ஆட்சி. அரசியல் அதிகாரம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் நிரந்தர சொத்தாக வந்துவிடக்கூடாது. அதை தடுத்து நிறுத்துவதறகு, பிரதமர் மோடியின் தூதுவராக இங்கு உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருக்கிறார்.
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும்.
- மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் நடைபயணமானது தமிழகத்தில் தாமரை மலர உறுதுணையாக அமையும் என்று ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் தரணி ஆர்.முருகேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார்.இந்த நடைபயணம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் இடத்தில் தொடங்கி வைக்கிறார்.முன்னதாக அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாம லை,ராமேசுவரம் நகருக்குள் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல் நாள் பயணத்தை ராமேசுவரத்தில் முடிக்கும் அவர் இரவு ராமேசுவரத்திலேயே தங்குகிறார்.நாளை (29-ந்தேதி) காலை ராமேசுவரத்தில் இருந்து நடைபயணம் புறப்படும் அண்ணாமலை தங்கச்சிமடம்,பாம்பன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்துவிட்டு இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார்.நடைபயண தொடக்க விழாவுக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.எனது தலைமையிலான ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.மத்திய அமைச்சர் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை வரவேற்ப தற்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. விழா மேடை யானது பாராளுமன்ற கட்டிடத்தை போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வரை மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.இந்த நடைபயணமானது தமிழ கத்தில் தாமரை மலர ஏதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.தமிழக மக்கள் இந்த நடை பயணத்தில் பங்கேற்று பா.ஜ.க.விற்கு முழு ஆதரவையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராமநாத புரம் மாவட்டம் தொண்டி யில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். த.மு. மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய தலை வர் பீர் முகமது வரவேற்றார்.
ம.ம.க. மாவட்ட செயலா ளர் வழக்கறிஞர் ஜிப்ரீ, த.மு.மு.க. மாவட்ட செயலா ளர் பொறியாளர் ஜாவித் அசாம், த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் யான்பு இப்ராஹிம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர்கள்.
தொண்டி ராஜ் உபை துல்லா, நிசார் அஹமத், வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயூப் கான், இந்து தர்ம பரிபாலன சபை நிர் வாகி ராஜா, தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, மாவட்ட ஜமாத்துல் உலமா செயலா ளர் முகமது ஜலாலுதீன் அன்வாரி, பைத்துல் மால் தலைவர் சையது அலி ஒன்றிய ம.ம.க. செயலாளர் காமராஜ் ஜின்னா மலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
த.மு.மு.க. மாநில செய லாளர் தொண்டி சாதிக் பாட்சா த.மு.மு.க. தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெயி னுலாப்தின் த.மு.மு.க. தலைமைக் கழகத்தின் பேச் சாளர் சனாவுல்லா , இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலசுப் பிரமணியன், விடுதலை சிறுத்தை கட்சி திருவாடனை ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசி னர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். த.மு.மு.க.வின் தொண்டி பேரூர் தலைவர் நன்றி கூறினார்.
- நடைபயண தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
- மாநில நிர்வாகிகளுடன் விழா ஏற்பாடுகள் குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் இன்று மாலை ''என் மண் என் மக்கள்'' நடைப்பயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ளார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திடலில் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அண்ணாமலை பார்வையிட வந்தார். அவரை நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீசு வரன், கட்சியின் நகர் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன், பால்ராஜ் உள்பட நகர் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் மேடை பகுதி, தொண்டர்கள் அமரும் பகுதிகளில் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து மாநில நிர்வாகிகளுடன் விழா ஏற்பாடுகள் குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.






