என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7), கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்தவர்கள் கூறுகையில், வறுமையின் காரணமாகவும், தொடர்ந்து அங்கு வாழ வழியில்லாமல் போனதாலும் இங்கு வந்து தஞ்சமடைந்து உள்ளோம். தமிழகத்தில் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பம் நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் முடிவு செய்து பிளாஸ்டிக் படகில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்களை போன்று ஏராளமானவர்கள் தமிழகம் வரத்துடிக்கிறார்கள். ஆனால் படகுக்கு கொடுக்க பணம் கிடைக்காததால் வாழவும் முடியாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் கூறினர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 269 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது.
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.

    ராமநாதபுரம்:

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சுய பரிசோதனையாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசத்தையும், தேசியத்தையும் மதிக்கும் மண்ணான ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு மீண்டும் பிரதமராக பொதுமக்கள் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆன்மீக பூமியான ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பிரமாண்ட நடைபயணம் நேற்று இரண்டாவது நாளில் சற்றும் தளர்வின்றி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனை வாசலை அடைந்தது.

    சுமார் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அண்ணாமலையுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது. காரணம் வழிநெடுகிலும் பெண்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் மலர்களை தூவி வரவேற்றனர்.

    ஆனால் அண்ணாமலை ஒரு மாநில தலைவர் என்பதை மறந்து, மக்களோடு மக்களான கலந்தார். அதேபோல் செல்லும் வழியெல் லாம் தன்னுடன் செல்பி எடுக்க வந்தவர்களிடம் சிரித்த முகத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு சிலரிடம் அவர்களின் செல்போனை வாங்கி, அவர்களை அருகில் அழைத்து நிற்கவைத்து தானே செல்பி போட்டோ எடுத்து அசரவவைத்தார்.

    நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. என்றாலும் சற்றும் ஆர்வம் குறையாத அண்ணாமலை யாருடனும் முகம் சுழிக்காமல், முக மலர்ச்சியோடு பேசினார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. நடைபயணத்தின் போது தன்னை நோக்கி வந்த இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்தவ பெண்களிடம் கை குலுக்கியும், நலம் விசாரித்தும் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, அனுபவத்தில் மிளிர்ந்தார்.

    அத்துடன் வழியெங்கிலும் அண்ணாமலையை வரவேற்ற கட்சியினர், பெண்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தையை கொடுத்து வாழ்த்த சொன்னார்கள். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த அண்ணாமலை அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்க தவறவில்லை.

    மொத்தத்தில் பல்வேறு தலைப்புகளில் நடைபயணம் மேற்கொண்ட முன்னோர்கள், தலைவர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடைபயணம் தொடங்கியதில் இருந்து முடிவடைந்த 5 கி.மீ. தூரமும் மிகவும் எளிமையாகவும், நெருங்கியும் வந்த அண்ணாமலை, 3-வது நாளான இன்று முதுகுளத்தூரில் காலை 9.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார்.

    அங்குள்ள செங்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாலையில் பரமக்குடியில் நடைபயணம் மேற் கொள்கிறார்.

    • கீழக்கரையில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிகுட்பட்ட கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலை வில் அனுமதி இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.

    இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அடுக்குமாடி கட்டிடம், வாடகை குடியிருப்பு கட்டு வதாக நகராட்சி நிர்வாகத் திற்கு புகார் வந்தது. இதை யடுத்து நகராட்சி கமிஷனர் செல்வராஜ், கீழக்கரையில் உள்ள அனைத்து கட்டி டங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கீழக்கரை நகர் அமைப்பு ஆய்வாளர் வனிதா, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வாடகை குடியிருப்பு, அடுக்குமாடி கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது சாலை தெருவில் கடற்கரை யில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அதிக உயரமான வாடகை குடி யிருப்பு கட்டிடங்கள் கட்டி யது தெரியவந்தது.

    மீண்டும் இந்த கட்டி டத்தின் வரை படங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரி மாவட்ட நகர் ஊர் அமைப்பு துணை இயக்குனர் அலுவ லகத்திற்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி கமிஷனர் கூறியதாவது:-

    கீழக்கரை பகுதியில் புதிய கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், வாடகை குடியிருப்புகள் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். மேலும் வாசல் படிகளை உரிமை யாளர்கள் இடத்திற்குள் அமைத்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டிடங்கள் அகற்றப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் இருந்து மீண்டும் மோடி பிரதமராக மக்கள் சூளுரைக்க வேண்டும்.
    • இரண்டாம் நாள் நடைபயணத்தில் அண்ணாமலை பேசினார்.

    ராமநாதபுரம்

    பா.ஜ.க.வின் "என் மண், என் மக்கள்" யாத்திரையின் இரண்டாம் நாளாக ராமநா–தபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை–யில் நடைபயணம் தொடங்கி–யது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை யில் நடைபயணம் புறப் பட்டு ராமநாதபுரம் நகரில் கேணிக்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடை பயணம் சென்றது. அப் போது மக்களை சந்தித்து நடைபயணத்தின் நோக் கத்தை அண்ணாமலை மக்க–ளிடம் விளக்கினார்.

    அரண்மனையில் நடை–பயணம் நிறைவடைந்தது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதா–வது:-

    2024-ம் தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்றல்மிகு மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் இந்த யாத் திரைக்கான ஏற்பாடு–களை வெகு சிறப்பாக செய்துள் ளார். என் மண், என் மக்கள் யாத்திரையின் நோக்கம் தமிழகத்தில் 234 தொகுதி–களிலும் நடைபயணம் மேற் கொண்டு மக்களை சந்தித்து தமிழகத்தில் ஊழல் ஆட் சியை விளக்குவதும் 9 ஆண்டு காலம் பாரத பிர–தமர் மோடி மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங் களை எடுத்துக் கூறுவதும் தான்.

    தமிழகத்தில் இன்று மண் மற்றும் மக்களை நேசிக்க கூடிய பிரதமர் தான் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். கடந்த 9 ஆண்டு காலத்தில் பாரத பிரதமர் மோடி தமி–ழகத்திற்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளார். தாய்மொ–ழியாம் தமிழ் சீரும்,சிறப்பு அடைய நம் பிரதமர் பல முயற்சிகளை செய்துள்ளார். திருக்குறளை 100 மொழிக–ளில் மொழிபெயர்க்க கூறி–யுள்ளார்.

    தமிழகத்தில் தி.மு.க. 27 மாதங்கள் ஆட்சி செய்து "என் மண், என் மக்கள்" என்பதை "என் குடும்பம் என் வாரிசு" என வாரிசு அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு அமைச் சர்களின் அலுவல–கங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அமைச்சர் பொன் முடி வீட்டில் கணக்கில் வராத ரூ.41 கோடி பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு அமைச்சரான செந்தில் பாலாஜியை தமிழக அரசு பாதுகாக்க பாடுபடுகிறது.

    ஊழல் மிகுந்த இந்த நேரத்தில் 2024 தேர்தலில் 3-வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆக பொன்னான வாய்ப்புகளை தாருங்கள். சுவாமி விவேகா–னந்தர் சிகாகோ சென்று விட்டு திரும்பும் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கால் வைப்பேன் என்று மதித்த மண் தான் ராம–நாதபுரம் மண். தேசத் தையும், தேசியத்தையும் மதித்தவர்கள் வாழ்ந்த மண் ராமநாதபுரம் மாவட்டம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நான் வந்ததிலிருந்து என்னை சந்தித்த மக்கள் அனைவரும் பாசத்தோடு அன்போடு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த அன்பர்கள் கேட்டுக் கெண்டது இந்த புண்ணிய பூமியில் பாரத பிரதமர் மோடி போட்டியிட வேண் டும் என்று பலரும் கூறினர்.

    உங்கள் அன்பையும், அன்பு கட்டளையையும் நானும் முன்னாள் அமைச் சர் பொன்னாரும் தலை–மைக்கு கொண்டு சென்று கூறுவது தான் எங்களுடைய தலையாய கடமையாகும். எதிர்க்கட்சிக் கூட்டணி இந்தியா என்று சொல்ல தகுதி வேண்டும். தி.மு.க. 1965-ம் ஆண்டு தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்டது. ஊழல் மிகுந்த கட்சி. பிரதமர் மோடி 365 நாட்கள், 24 மணி நேரமும் பிரதமராக இல்லாமல் சாமானிய மனிதராக மக்க–ளுக்காக உழைத்து வருகி–றார்.

    ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் யார் பிரதமர் என்று தெரியவில்லை. திங்கள் கிழமை மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கி–ழமை நிதிஷ்குமார், புதன் கிழமை தாக்கரே, சனி, ஞாயிறு கிழமைகளில் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமராக இருக்கப் போகி–றார்கள். விடுமுறை நாளில் ராகுல் பிரதமராக இருந்து என்ன செய்யப் போகிறார்?

    "என் மண் என் மக்கள்" தமிழகம் முழுவதும் யாத் திரை பயணம் தொடரும். என் மண் என் மக்களை யாரும் சூறையாடக்கூடாது. அதற்கு 2024 தேர்தல் தமிழகத்தில் 39 தொகுதிகளி–லும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும்.அதற்கு ராமநாதபுரம் தொகுதியில் இருந்து முதல் பாராளுமன்ற உறுப்பினரை அனுப்ப வேண்டியது உங்களின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவ–சாய அணி ரவிச்சந்தி–ரன், மாவட்ட பொதுச்செயலா–ளர் மணிமாறன், பா.ஜ.க. கவுன்சிலர் ஜி.குமார், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • மொகரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதத்தினர் பங்கேற்ற பூக்குழி திருவிழா நடந்தது.
    • ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மாமுனாச்சி அம்மன் சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்தது.

    மொகரம் முதல் நாள் கொடியேற்றி 10 நாட்கள் விரதம் இருந்து 11-ம் நாள் மொகரம் அன்று பக்தர்கள் பூக்குழி இறங்கி மற்றும் பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது பெரியகுளம் கிராமத்தில் நடந்து வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி கொண்டாடு கின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சமூக நல்லிணக்க பூக்குழி திருவிழா நடந்து வருகிறது. இன்று அதிகாலை யில் நடந்த சமூக நல்லிணக்க பெருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட னர். ஆண்கள் தீமிதித்தும், பெண்கள் தலையில் கங்குகளை போட்டும் நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    கடலாடி, சாயல்குடி, மாரியூர், வாலிநோக்கம், முந்தல், ஒப்பிலான், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    போகலூர்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.

    இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

    மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் 2 ஆயிரம் பேர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பா.ஜனதா கட்சியில் இணைகிறார்கள்.
    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி அறிக்கை கூறியிருந்தார்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர் வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா–வது:-

    கால் நூற்றாண்டு காலம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அப்பழுக்கற்ற சமு–தாய பணியாற்றி காலத் தின் அருமை கருதி தமிழை–யும், தமிழினத்தையும், உலக–மெங்கும் பறைசாற்றும் பிரதமர் மோடி ஜி தலை–மையில் போலி திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் அப்பழுக்கற்ற அரசியல் செய்யும் திருவண்ணா–மலை–யார் நாமம் கொண்ட அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மூலம் மக்களுக்கு விழிப்பு–ணர்வை ஏற்படுத்தி வருகி–றார்.

    தமிழகம் முழுவதும் வரக் கூடிய யாத்திரை பயணத் தில் பரமக்குடியில் நானும், என்னுடன் இருக்க கூடிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்து பசும்பொன் தேவரின் ஆன்மிகம், தேசி–யத் தையும் தெய்வீ–கத்தையும் இரு கண்களாக கொண்ட சித்தர் வழியில் ஆன்மிக பணியும் அரசியல் பணியும் தொடங்குவதற்கு தயாராகி 2 ஆயிரம் பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைகி–றேன் என்பதை என்னுடன் இருப்பவர்களுக்கும் என் இன மக்களுக்கும் நண்பர்க–ளுக்கும் தெரிவித்து கொள் கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.

    • 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை உள்ளாட்சி அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பின ரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ராமநாத புரம் நகர்மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளில் அல்லிக்கண்மாய் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்தனர். அரசு விதிமுறை மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் அங்கிருந்து காலி செய்யப் பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களுக்கு ஓட்டுரிமை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரா மநாதபுரம் நகராட்சியில் உள்ளது. ஆனால் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பது திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பட்டினம் காத்தான். இத னால் இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ராமநாதபுரம் நக ராட்சியால் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் ஓட்டுரிமை நகராட்சியில் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினரும் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர முடியவில்லை. எனவே அவர்களது ஓட்டுரிமையை ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பில் அடிப் படை வசதிகளை செய்து தரவேண்டும்.

    மேலும் அவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை செய்துதர வேண்டும். திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் நடவடிக்கையின் பேரில் இந்த குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை அப்பகுதி யில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒ.பி.எஸ். அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.எஸ். வேட்பாளர் போட்டியிடுவார் எனவும், அதற்காக இப்போதே பணிகளை தொடங்கி விட்டதாகவும், தொண்டர்கள் தீவிர பிரசா ரத்தில் ஈடுபடவேண்டும் என்றும் தர்மர் எம்.பி. கேட்டுக்கொண்டார். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    • பாசி வளர்ப்பு பூங்கா அமைக்க மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தார்.
    • நிர்மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான திருப் பாலைக்குடியில் மீன்துறை மூலம் பாசி–வளர்ப்பு பூங்கா ரூ.11 கோடிமதிப்பில் துவங் கப்பட உள்ளது.

    இந்த இடத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது பாசி வளர்ப்பு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி முடி–வ–டையும் வகையில் மேற் கொள்ள அதிகாரிக–ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா–கவும் அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மீன்துறை இணை இயக்குநர் பிரபாவதி, துணை இயக்கு–நர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர், மீனவ கூட் டுறவு சங்கத்தலை–வர்கள் பசுருல்ஹக், சுல்த்தான் செய்யது இபுராமுசா, மீன் துறை அலுவலர்கள் முரு–கேசன், ஷகிலாபானு, நிர் மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்துகொன்டனர்.

    • இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
    • மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம், என்ற பிரச்சார புத்தகத்தை வெளியிட்டு, தமிழகத்தில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பாற்ற தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை.

    டாஸ்மாக் வேண்டாம் என தி.மு.க. பல்வேறு போராட்டங்கள் நடத்தியது 2016-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியை வந்தவுடன் டாஸ் மாக் மதுவிலக்கை அமல் படுத்தவில்லை. டாஸ்மாக் கால் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது.

    தமிழ கத்தில் தி.மு.க.வினர் நடத்த கூடிய அனைத்து மதுபான ஆலைகளையும் மூட வேண் டும். ஆட்சிக்கு வந்து பல மாதங்களாகியும் டாஸ்மாக்கை மூடவில்லை.

    டாஸ்மாக்கில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதால் இன்று செந்தில் பாலாஜி சிறை யில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அடுத்த அமைச்சரும் காலை ஏழு மணி முதல் மதுபான கடை திறப்போம் என்றும், மது குடிப்பவர்களை யாரும் குடிகாரர் என்று கூறக் கூடாது என்று கூறி வரு கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மதுவால் இளைஞர்கள் சீரழிக் கப்பட்டு வருகின்றனர்.டாஸ்மாக்கில் மது குடித்தால் குடல் புண் நோய் தான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 200-க்கும் மேற் பட்ட வியாதிகள் வரும் என்று டாக்டராகிய நான் பரிசோதித்து கூறுகிறேன்.

    தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி புதிய தமிழக கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பாட்டில் உடைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது.

    ஆகையால் தமிழகத்தில் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்று பிரச்சாரத்தை மேற் கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×