search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்
    X

    ராமேசுவரத்தில் நடந்த “என் மண், என் மக்கள்” நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். அருகில் மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர். 

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×