வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் மீண்டும் பதவியேற்றார். போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் தேர்ந்தேடுக்கப்பட்ட போது  எடுத்த படம்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவராக பழனிக்குமார் தேர்ந்தேடுக்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

போகலூர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவ லர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கடந்த 14-ந்தேதி யன்று அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடை பெற்று, அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப் பட்டது.

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ராமநாத புரம் மாவட்ட தலைவராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே உள்ள சத்திரக்குடி தனியார் மஹாலில் நடந்தது.

மீண்டும் மாவட்ட தலைவராக பதவியேற்ற பழனிக்குமாருக்கு போகலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தொழி லதிபர் ஜே.எஸ்.லோகி தாசன், வருவாய்த்துறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com