search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "En Man En Makkal"

    • சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது.

    கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார்.

    காசி தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் பாரம்பரிய செங்கோல் நிறுவியது போன்றவற்றால் எதிர்ப்பு மறைந்து தமிழர்கள் மத்தியிலும் மோடி ஆதரவு வளர தொடங்கியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் எம்.பி.க்கள் வெற்றி பெறாதது டெல்லி தலைவர்கள் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது.

    எனவே இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே ரகசிய சர்வே நடத்தி 10 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர் தேர்வு பிரசார திட்டங்களையும் வகுத்துள்ளார்கள்.

    தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பிரதமர் மோடியும் தமிழகம் முழுவதும் ரவுண்டு கட்டும் வகையில் பல கட்ட பயண திட்டத்தை வகுத்துள்ளார்.




     வருகிற 27-ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி சில முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    மறுநாள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த முதற்கட்ட பயணத்தில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்ட பயணத்தை முடித்த பிறகு மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடுத்தடுத்து வருவார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

    இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் மோடி தமிழகம் வருவது உறுதியாகி இருக்கிறது.

    4-ந் தேதி (திங்கள்) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பொதுக் கூட்டத்துக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

    ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடல், பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் இடத்தை பார்த்து உறுதி செய்த பிறகு, இடம் முடிவாகும் என்றார்கள்.

    சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்தடுத்து தமிழகத்தை குறி வைத்து பா.ஜனதா காய் நகர்த்துவதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

    • யாத்திரை மூலம் மக்களை பா.ஜனதாவுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
    • யாத்திரையை தினமும் கண்காணிக்க ஒரு ரகசிய குழுவையும் அனுப்பி இருக்கிறார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். 3-வது நாளாக இன்று யாத்திரை நடந்து வருகிறது.

    இந்த யாத்திரையில் பெருமளவு மக்கள் திரண்டு வருகிறார்கள். அண்ணா மலையும் பொறுமையுடன் அனைத்து மக்களுடனும் பேசி உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.

    இந்த யாத்திரை மூலம் மக்களை பா.ஜனதாவுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் என்று அமித்ஷா உத்தர விட்டுள்ளார். அத்துடன் கட்சியில் ஒற்றுமையும் அவ சியம் என்பதையும் அமித்ஷா சுட்டிக் காட்டி யிருக்கிறார்.

    இதற்கிடையில் இந்த யாத்திரையை தினமும் கண்காணிக்க ஒரு ரகசிய குழுவையும் அனுப்பி இருக்கிறார்.

    கர்நாடகாவை சேர்ந்த இந்த குழு யாத்திரையை தினமும் கண்காணிக்கிறது. யாத்திரையில் கண்ட குறைகள், நிறைகள் அனைத்தையும் அறிக்கையாக தயாரித்து தினமும் அமித்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையை பார்த்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும். அதற்கு ஏற்றவாறு குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.

    இந்த குழுவினர்தான் கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசார வியூகம் அமைத்து கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
    • ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். ராமேசுவரத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-

    இந்த யாத்திரை பாஜகவின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை. என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.

    மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் இங்கு வந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

    நம்முடைய கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் I.N.D.I.A. என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமர். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் விடுமுறை. சனி, ஞாயிறுக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து I.N.D.I.A. என்கிறார்கள்.

    இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடை சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும் நம்முடைய பிரதமர் மோடி மறுபடியும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
    • ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும், 'மோடி என்ன செய்தார்?' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

    விழாவில் பாஜக நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    நடைபயண துவக்க விழாவிற்காக புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, 31ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை செல்கிறார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    • தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.
    • பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார்.

    ராமேஸ்வரம்:

    மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

    விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

    இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். ராமநாத சுவாமி அருளாசியால் நம்முடைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செல்லவிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற இந்த நடைபயணமானது வெறும் அரசியல் சார்ந்த நடைபயணம் மட்டும் அல்ல. இந்த நடைபயணம் இந்த பழமையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் நடைபயணம். தமிழகத்தின் இந்த கலாச்சாரத்தை பண்பாட்டை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கல்கத்தாவில் இருந்து சோம்நாத் வரை கொண்டு செல்லும் ஒரு நடைபயணமாகும்.

    இந்திய நாட்டின் 130 கோடி மக்களின் மனதிலே மரியாதையை ஏற்படுத்தும் நடைபயணம். தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக செய்யப்படும் நடைபயணம். தமிழ்நாட்டை ஊழல் இருந்து விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயணம். இந்த பயணம் தமிழ்நாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்காக செய்யப்படும் நடைபயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தினை பேணுகின்ற ஒரு அரசை உருவாக்குவதற்காக நடத்தப்படும் யாத்திரை.

    இன்று தொடங்கி 700 கிமீ 234 தொகுதிகளிலும் நமது மாநில தலைவர் அண்ணாமலை நடக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் நமது பிரதமரின் செய்திகளை கொண்டு செல்லவிருக்கிறார்.

    புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த ஏழைகளின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த நடைபயணத்தை நடத்துகிறார்.

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது நடைபயணத்தின் மூலமாக பாரம்பரியம் மிக்க தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை மேலும் பலப்படுத்த பிரதமரின் செய்தியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கவிருக்கிறார்.

    பிரதமர் மோடி தமிழ் மொழியின் பழமையை, சிறப்பினை உலகின் பல்வேறு மேடைகளில் முழங்கியிருக்கிறார். ஐநா சபையில் உலகின் பழமையான தமிழ்மொழி பற்றி பேசியது நம்முடைய பிரதமர் மோடி. இப்போது ஜி20 கூட்டங்கள் எல்லாம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கின்றன. அதன் முத்திரை வாசகமான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்தை ஐநா சபையில் பிரதமர் மோடி முழங்கினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது.
    • தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    ராமேஸ்வரம்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயண தொடக்க விழா ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது.

    விழாவில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, வாழும் இரும்பு மனிதராக உள்துறை மந்திரி அமித் ஷா திகழ்வதாகவும், தமிழ்நாட்டின் இரும்பு மனிதரான எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்களை தெரிவிக்க வந்திருப்பதாகவும் கூறினார்.

    நாட்டில் ஜனநாயகம், வளர்ச்சி தொடர பிரதமராக மோடி தொடரவேண்டும். மோடி பிரதமர் ஆனபின் வெளிநாட்டில் இந்தியர்களுக்கு மரியாதை உயர்ந்துள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக 9 ஆண்டு கால சாதனைகளை கரும்பு மனிதர் அண்ணாமலை, வீடு வீடாக வீதி வீதியாக எடுத்துச் சொல்ல இருக்கிறார்.

    அதேசமயம், இந்த ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆபத்தாக இருக்கிறது தமிழகத்தில் உள்ள மக்கள் விரோத திமுக ஆட்சி. அரசியல் அதிகாரம் என்பது கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும் நிரந்தர சொத்தாக வந்துவிடக்கூடாது. அதை தடுத்து நிறுத்துவதறகு, பிரதமர் மோடியின் தூதுவராக இங்கு உள்துறை மந்திரி அமித் ஷா வந்திருக்கிறார்.

    இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    • நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது.
    • அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    நகர பகுதிகளில் நடந்து 1,700 கி.மீ. தூரமும், மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் 900 கி.மீ. தூரமும் அண்ணாமலை யாத்திரை செல்கிறார்.

    5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார்.

    அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே அண்ணாமலையின் நடைபயணத்தின் பங்கேற்பதற்காக சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு நேற்று முதலே ராமேசுவரம் வரத்தொடங்கினர். இதனால் ராமேசுவரம் முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் தலையாகவே காட்சி அளித்தது.

    இதற்கிடையே பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் இரவு உணவு சாப்பிடுகிறார். 8.30 மணிக்கு பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார்.

    அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு வரவேற்பு பேனர்கள், தோரணங்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கீழக்கரை முதல் தொண்டி வரை 100 கி.மீ. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் அதிநவீன ஆயுதங்களுடன் 3 அதிவேக ரோந்து படகுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மொத்தத்தில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ராமேசுவரம் வருகையையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×