என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மகளிரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம்

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்தது.

    ராமநாதபுரம்

    மணிப்பூா் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அங்கு கலவரம் ஏற்ப–டாமல் தடுக்கத் தவறிய மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தி.மு.க. மகளிரணி சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளா் காதா்பாட்ஷா முத்துராம–லிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் ம–களிரணி மாநில துணைச்செயலாளா் பவானி ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் இன்பா ரகு, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் தமிழ்ச்செல்வி போஸ், துணை அமைப்பாளா்கள் கவிதா கதிரேசன், கலைமதி ராஜா, மாநில நிா்வாகிகள் திசைவீரன், சுப.த.திவாகரன், மாவட்ட துணைச் செயலாளா் கருப்பையா உள்ளிட் டா்ோ கலந்து கொண்டனா்.

    Next Story
    ×