search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம்
    X

    சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம்

    • ராமநாதபுரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
    • பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விவசாய ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் செய்து சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திட வும் தமிழக அரசு சார்பில் வேளாண்மை இயந்திரமய மாக்கல் துணை இயக்கத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூல மாக செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படவுள்ளது. 2021-22 முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரை தேர்வு செய்யப்பட் டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவ சாயிகளுக்கு 162 எண்கள் பவர்டில்லர்கள் மற்றும் 10 எண்கள் பவர் வீடர்கள் என மொத்தம் 172 எண்கள் ரூ.143.16 லட்சம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் நிலப் பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சாதிச்சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறுது.

    மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல் லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டார தனிநபர் விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உதவி செயற்பொறியாளர், ராமநாதபுரம் அலுவலகத்தில் உள்ள கைபேசி எண் 9489152279 மற்றும் பரமக்குடி, நயினார் கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார தனிநபர் விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பரமக்குடி அலுவலகத்தில் உள்ள கைபேசி 9865967063 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×